விஜய்யால் பிக்பாஸ் மும்தாஜ்க்கு கிடைத்த புகழ்..! தமிழர்கள் இப்படியா..? பாராட்டிய மும்தாஜ்.!

0
1192
mumtaj-bigg-boss
- Advertisement -

தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பெண் போட்டியாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் என்றால் அது மும்தாஜ் மட்டும் தான். 1999 ஆம் ஆண்டு இயக்குனர் டி ராஜேந்தர் இயக்கிய “மோனிஷா என் மோனோலிசா” என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை மும்தாஜ். அதன் பின்னர் தமிழ், தெலுகு என பல மொழி படங்களில் நடித்து விட்டார்.

-விளம்பரம்-

mumtaz

- Advertisement -

“மோனிஷா என் மோனோலிசா” படத்தில் நடிகை மும்தாஜிற்கு அந்த அளவிற்கு பெரிய பிரபலம் ஒன்றும் கிடைத்துவிடவில்லை. ஆனால், மும்தாஜ் என்ற ஒருவர் இருக்கிறார் என்று மக்கள் மத்தியில் பிரபலமானது இளைய தளபதி விஜய் நடித்த “குஷி ” படத்திற்கு பிறகு தான். அந்த படத்தில் இவர் ஆடிய “கட்டிபுடி கட்டிப்புடி “பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்தது. அந்த ஒரு பாடல் மூலம் புகழின் உச்சிக்கே சென்றார் நடிகை மும்தாஜ்.

சமீபத்தில் “குஷி ” படத்திற்கு பிறகு தனக்கு கிடைத்த ஒரு பெயரையும்,பெருமையும் குறித்து பேசியுள்ளார் நடிகை மும்தாஜ். நேற்று ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் அனைவரும் தங்கள் வாழ்வில் நடந்த சந்தோசமான தருணங்களை ஏதாவது பகிர்ந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

-விளம்பரம்-

mumtaz

இதில் போட்டியாளர்கள் அனைவரும் அவரவர் வாழ்வில் நடந்த சந்தோசமான தருணங்களை பகிர்ந்து கொண்டிருந்தனர் .அப்போது மும்தாஜ் பேசுகையில், குஷி வெளியான பிறகு என்னை கோயம்புத்தூரில் உள்ள கல்லூரிக்கு சிறப்பு விருந்தினராக அழைத்திருதாங்க. நான் ஏர்போர்ட்ல இருந்து போகும் போது எனக்காக ஒரு 8 கார் நின்று கொண்டிருந்தது. நான் கல்லூரிக்கு சென்ற போது எண்ட்ரன்ஸ்ல இருந்து உள்ள போகுற வரைக்கும் பட்டாசு வெடிச்சிட்டே இருந்தது என்னை வரவேற்க பூக்கள் எல்லாம் கொட்டி வைத்திருண்னர். நான் அப்போது உறைந்து போய் இருந்தேன், எனக்கு இது மாதிரி ஒரு புகழ் கிடைக்கும் என்று அப்போது தமிழ் மக்கள் கொடுத்த அன்பு,பாசம் எல்லாம் என்னால் எப்பவும் மறக்க முடியாது, அவர்களுக்கு நன்றி என்று கூறியுள்ளார்.

Advertisement