விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் 12 வாரங்களை கடந்து 13 வது வாரத்தை நிறைவு செய்து இருக்கிறது இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி,சுசித்ரா, சம்யுக்தா, ஜித்தன் ரமேஷ், நிஷா, சனம் ஷெட்டி ,அர்ச்சனா,அனிதா ஆகிய என்று 9 பேர் வெளியேறி இருக்கின்ற நிலையில் கடந்த வாரம் நடைபெற்ற நாமினேஷன் அடிப்படையில் ஆஜீத் வெளியேற்றப்பட்டார். இந்த சீசன் நிறைவடைய இன்னும் ஒரு சில வாரங்களில் தான் எஞ்சி இருக்கிறது. தற்போது ஆரி, சோம், பாலாஜி, ரியோ, ரம்யா, கேப்ரில்லா, ஷிவானி ஆகிய 7 பேர் மட்டும் மீதமிருக்கின்றனர்.
இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சியமான பல விஜய் டிவி பிரபலங்களும் கலந்து கொண்டனர், அதில் கேப்ரில்லாவும் ஒருவர். ஆரம்பத்தில் இவர் பிக் பாஸ் வீட்டில் இருக்கிறாரா இல்லையா என்று பலரும் கேட்டு வந்தனர். ஆனால், கடந்த சில வாரமாக தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இவர் தனது கருத்துக்களையும் நெத்திப் பொட்டில் அடித்தது போல கூறி வருகிறார். அதிலும் கடந்த சில வாரங்களாக பாலாஜிக்கு பல இடங்களில் பல்ப் கொடுத்துக்கொண்டு வருகிறார் கேப்ரில்லா.
இதையும் பாருங்க : நாடோடிகள் படத்தில் வந்த இந்த நடிகையை நினைவிருக்கா ? சாத்தியமா நம்ப முடியாடா சாமி.
என்னதான் இவர் லவ் பேட் கேங்கில் இருந்தாலும் இவர் கடந்த சில வாரங்களாக சிறப்பாக தனது கருத்தை தெரிவித்து வருகிறார். அதிலும் நேற்றய நிகழ்ச்சியில் நாமினேஷன் நடைபெற்ற போது ரம்யா மற்றும் பாலாஜிக்கு இவர் சொன்ன காரணம் தற்போது ஆரி ரசிகர்களையும் கவர்ந்து உள்ளது. நேற்றய நிகழ்ச்சியில் இவர் ரம்யாவை நாமினேட் செய்ததற்கான காரணத்தை கூறி போது ரம்யா, தனக்கு சம்பந்தமில்லாத இடத்தில் முன்வந்து தன்னுடைய கருத்தை வைப்பார்.
அதை நான் பல முறை பார்த்திருக்கிறேன். அதிலும் அப்போதைக்கு அவருக்கு யார் நெருக்கமோ அவர்களுக்கு ஆதரவாக பேசுவார். அதிலும் அது ஆரிக்கு எதிராகத்தான் இருக்கும் என்று கூறியிருந்தார். கேப்ரில்லா நாமினேட் செய்த பின்னர் அதற்கான காரணத்தை ரம்யா கேட்ட போது, ஆமாம், நீங்கள் ஆரம்பத்தில் சம்யுக்தா இருந்த போதும் அனிதா இருந்த போதும் அவர்களுக்காக நீங்கள் நின்று பேசி இருக்கிறீர்கள். தற்போது பாலாவுடன் க்ளோஸ்சாக இருக்கீங்க என்று தோன்றுகிறது என்று கூறிஇருந்தார்.
இதையும் பாருங்க : ஆம்பள தான நீ – மீண்டும் சண்டை போட்டுக்கொண்ட ஆரி மற்றும் பாலாஜி.
கேப்ரில்லா, ரம்யாவை இப்படி சொன்னதால் தற்போது ஆரியின் ரசிகர்கள் கூட கேப்ரில்லாவை பாராட்டி வருகின்றனர். ஏற்கனவே, ஆரி விஷயத்தில் ரம்யா ஒருதலைபட்சமாக செயல்படுகிறார் என்று கடந்த வாரம் கமலே கூறி இருந்தார். இப்படி ஒரு நிலையில் ரம்யா குறித்து கேப்ரில்லா சொன்ன இந்த கருத்து பலரையும் கவர்ந்து உள்ளது அதிலும் கேப்ரில்லாவின் ஹேஷ் டேக் கூட ட்விட்டரில் ட்ரெண்டிங்கில் வந்துள்ளது.