மும்தாஜுக்கு அதிர்ச்சி கொடுத்த கலா மாஸ்டர்.! மும்தாஜ் கொடுத்த முதல் பேட்டி..! என்ன சொன்னார் தெரியுமா..?

0
988
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் நேற்று(செப்டம்பர் 16) மும்தாஜ் வெளியேற்றபட்டது ரசிகர்கள் பலருக்கும்மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய மும்தாஜை பிரபல திரைப்பட நடன இயக்குனரான கலா மாஸ்டர் நேரில் சந்தித்து பேசிய போது எடுத்த வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

-விளம்பரம்-

மும்தாஜும், கலா மாஸ்டரும் நீண்ட வருட நண்பர்கள், இவர்கள் இருவருமே கலைஞர் தொலைக்காட்சியில் ஒலிபரப்பான “மானாட மயிலாட” நிகழ்ச்சியில் நடுவார்களாகும் இருந்துள்ளனர். நடன இயக்குனரான கலா மாஸ்டர், பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்த நாளில் இருந்தே மும்தாஜிற்கு ஆதரவாகத்தான் பேசிவந்தார். பிக் பாஸ் வீட்டில் மஹத், மும்தாஜிடம் மரியாதையை குறைவாக நடந்து கொண்ட போது பேட்டி ஒன்றில் பங்கேற்ற கலா மாஸ்டர், மஹத்தை மெண்டல் என்றும் கிண்டல் செய்தார்.

- Advertisement -

இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய மும்தாஜை முதல் ஆளாக நேரில் சென்று சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்த கலா மாஸ்டர் அதனை விடியோவும் எடுத்துள்ளார். அந்த வீடியோ பதிவில் கலா மாஸ்டர் கூறியுள்ளதாவது, நான் முதன் முதலில் மும்தாஜிற்காக தான் பேசினேன் அது எல்லோருக்கும் தெரிந்திருக்கும். வின்னர் எல்லாம் அடுத்த பட்சம் தான், தமிழ் மக்களின் அன்பை பெறுவது தான் ரொம்பவும் கஷ்டம் அதற்கு நான் உங்களிடம் நன்றி கூறுகிறேன். உண்மையான அன்பு, பாசம், நேர்மை என்று மும்தாஜின் குணத்தை நிரூபித்திருக்கிறார்.

Mumtaj

-விளம்பரம்-

லட்சத்தில் ஒரு பெண் என்றால் அது மும்தாஜ் தான். அவள் வெளியே வந்ததும் நான் தான் முதலில் சந்தோசப்பட்டேன், அவள் அந்த இடத்தில் (பிக் பாஸ் வீட்டில்) இருந்தது எனக்கு வருத்தமாக இருந்தது. மும்தாஜிடம் நான் தினமும் பேசுவது கிடையாது இருப்பினும் அவள் என்னுடைய சகோதரி போன்றவள் தான். அதை நான் எப்போதும் அவளிடம் கூறியிருக்கிறேன்.நான் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு மும்தாஜ் போகும் போதே அறிவுரை கூறி அனுப்பி வைத்தேன், இவளுடைய அன்பு முற்றிலும் வேறு மாதிரியானது என்று பேசியுள்ளார்.

இதையடுத்து மும்தாஐயும் ரசிகர்களிடம் பேச சொன்னார் மும்தாஜ், அப்போது அவர் பேசுகையில் நான் நன்றி என்று சொன்னால் அது தப்பாகி விடும். ரசிகர்களுக்கு நன்றி என்ற சின்ன வார்த்தையை கூற நான் விரும்பவில்லை என்று பேசியுள்ளார் மும்தாஜ்.

Advertisement