தனிப்பட்ட விரோதம்..! பிக்பாஸ் வீட்டில் பிரபல நடிகருக்கு நேர்ந்த கொடுமை.!

0
665
bigg-boss-balaji

வாரா வாரம் பிக் நிகழ்ச்சியில் அடுக்கடுக்கான டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டு வருகின்றது. அதில் சமீபத்தில் ‘நிமிர்ந்து நில் துணிந்து செல் ‘ என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டது. அதில் இந்த டாஸ்கை நடிகர் டேனி நேர்மையாக நடத்த அவருக்கு பொறுப்பு கொடுக்கப்பட்டது.இந்த டாஸ்கில் போட்டியாளர்கள் அனைவரிடமும் சில கேள்விகள் கேட்கப்பட்டது. அதில் நேர்மையாக பதில் கூறும் போட்டியாளர்களுக்கு ஒரு சிறப்பு சக்தியும், போலியாக பதில் கூறும் போட்டியாளர்களுக்கு சிறை தண்டனையும் அளிக்கலாம் என்ற உரிமை டேனிக்கு அளிக்கப்பட்டிருந்தது.

bigg-boss-balaji

இந்த டாஸ்கின் போது டேனி, பாலஜியிடம் ‘ நாமினேட் ஆகாத ஹௌஸ் மேட்ஸ்களில் எந்த ஒரு நபர் இப்போது நீங்கள் இருக்கும் இடத்தில்(நாமினேஷனலில்) இருக்க வேண்டும்.அதற்கு அவர் மிகவும் தகுதியானவர் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்’ என்று கேள்வி கேட்டார்.அதற்கு பாலாஜி , ‘டேனி தான் போலியாக இருக்கிறார், எனவே அவர் என்னுடைய இடத்தில் இருக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இதையடுத்து டேனி ‘நீங்கள் மற்றவர்களை பற்றி பின்னால் பேசும் பழக்கத்தை நிறுத்திவிட்டீர்களா என்று கேட்க அதற்கு பாலாஜி ‘இல்லை இன்னும் செய்து கொண்டு தான் இருக்கிறேன்’ என்று கூறிவிடுகிறார். பின்னர் இந்த டாஸ்க் முடிந்தவுடன் பாலாஜி மற்றவர்களை பற்றி பின்னால் பேசும் பழக்கத்தை நிறுத்தவில்லை என்று கூறியதால், டேனி,பாலாஜிக்கு சிறை தண்டனையை அளித்தார். அத்தோடு இந்த டாஸ்கில் நேர்மையாக பதிலளித்தார் என்று ஐஸ்வர்யாவின் பெயரை குறிப்பிட்டுள்ளார் டேனி.

ஆனால், பாலாஜி சிறையில் அடைக்கப்பட வேண்டும் என்று டேனி கூறியதை மற்ற போட்டியாளர்களுக்கு ஏற்றுக்கொள்வதாக இல்லை. ஏனெனில் டாஸ்கின்படி போட்டியாளர்கள் அனைவரும் டேனி கேட்கும் கேள்விக்கு வெளிப்படையாக பதிலளிக்க வேண்டும் ,அதனால் தான் பாலாஜி’ தான் இன்னும் பின்னால் பேசுவதை நிறுத்தவில்லை’ என்று உண்மையாக பேசினார். ஆனால், டேனியை போலியாக இருக்கிறார் என்று பாலாஜி கூறியதால் அதனை மனதில் வைத்துக்கொண்டே தனது அதிகாரத்தை பாலாஜியின் மீது பயன்படுத்தியது போல தான் தெரிந்தது.