Insta பிரபலம் முதல் எவிக்ட் ஆனவரின் மனைவி வரை – தீபாவளிக்கு பிக் பாஸ் 8 வீட்டுக்குள் நுழையும் வைல்டு கார்ட் போட்டியாளர்கள்

0
319
- Advertisement -

தீபாவளிக்கு பிக் பாஸ் வீட்டுக்குள் அதிரடியாக செல்லும் வைல்டு கார்ட் போட்டியாளர்கள் குறித்த தகவல் தான் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது‌. விஜய் டிவியில் பிக் பாஸ் 8 நிகழ்ச்சி கோலவாலமாக தொடங்கி இன்று 19 ஆவது நாள். இந்த முறை நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்குகிறார். இந்த சீசன்னில் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர், சாச்சனா நமிதாஸ், தர்ஷா குப்தா, சத்யா, தீபக், சுனிதா, கானா ஜெஃப்ரி, ஆர்ஜே ஆனந்தி, ரஞ்சித், பவித்ரா, தர்ஷிகா, அர்னவ், அன்ஷிதா, விஜே விஷால், முத்துக்குமரன், சௌந்தர்யா, ஜாக்குலின், அருண் பிரசாத் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்று உள்ளனர்.

-விளம்பரம்-

இந்த முறை ஆளும் புதுசு, ஆட்டமும் புதுசு என்பதால் பல்வேறு டிவிஸ்டுகளுடன் பிக் பாஸ் சீசன் 8 ஆரம்பமாகியுள்ளது. அதோட முதல் நாளே பிக் பாஸ் வீட்டுக்கு நடுவே கோடு போடப்பட்டு ஆண்கள் ஒருபுறம், பெண்கள் ஒருபுறம் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது . பின் 24 மணி நேர எவிக்ஷனில் அதிக நாமினேஷன்களை சாச்சனா பெற்று பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறி, மீண்டும் வந்து இருந்தார். அதைத்தொடர்ந்து முதல் வார எவிக்ஷனுக்கான நாமினேஷன் பிக் பாஸ் வீட்டில் நடந்தது.

- Advertisement -

பிக் பாஸ் 8:

அதைத்தொடர்ந்து முதல் ஆளாக பிக் பாஸ் வீட்டில் இருந்து தயாரிப்பாளர் ரவீந்தர் வெளியேறினார். பின் இரண்டாவது வார எவிக்ஷனில் சீரியல் நடிகர் அர்னவ் வெளியேற, தற்போது 7 ஆண்கள் 9 பெண்கள் என மொத்தம் 16 போட்டியாளர்கள் தற்போது அந்த வீட்டில் இருக்கிறார்கள். மேலும், முதல் நாள் நிகழ்ச்சிக்கு செல்லும் போட்டியாளர்கள் தவிர்த்து வைல்டு கார்ட் என்ட்ரி என சிலரை சில நாட்கள் கழித்து அனுப்புவது பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடப்பது வழக்கம் தான்.

வைல்ட் கார்டு என்ட்ரி:

கடந்த வருடம் வைல்டு கார்டு என்ட்ரியாகச் சென்ற அர்ச்சனா தான் கடைசியில் டைட்டில் வென்றார் என்பது நாம் அறிந்ததே. அர்ச்சனா வைல்டு கார்ட் என்ட்ரியாக பிக் பாஸ் சீசன் 7-ல் நுழைந்தாலும், சிறப்பாக விளையாடிய முதல் இடத்தை தக்க வைத்துக் கொண்டார். தற்போது இந்த சீசனின் வைல்டு கார்டு என்ட்ரி எப்போது இருக்கும் என்கிற எதிர்பார்த்து ரசிகர்கள் மத்தியில் அதிகமாகவே இருக்கிறது. பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சிக்காக ஆரம்பத்தில் தேர்வான சிலரையே அப்போது அனுப்பாமல், வைல்டு கார்டு என்ட்ரியாக அனுப்ப இருக்கிறார்களாம்.

-விளம்பரம்-

வைல்டு கார்டு போட்டியாளர்கள்:

அந்த வகையில் தற்போது நடிகை ஐஸ்வர்யா, ரோஷன் என சில பெயர்கள் இந்த பிக் பாஸ் 8 சீசனுக்கான வைல்டு கார்டு என்ட்ரியில் இருப்பதாக கூறப்பட்டு வருகிறது. மேலும், இந்த வார இறுதி அல்லது தீபாவளியை ஒட்டி வைல்ட் கார்ட் என்ட்ரி இருக்கும் என்று கூறப்படுகிறது. அது ஒன்றுக்கும் மேல் போகலாம்னு தெரிகிறது. அதைவிட ஒரு புது ட்விஸ்ட்டாக, கடந்த வாரம் எலிமினேட் ஆன அர்னவின் முன்னாள் மனைவி திவ்யாவிடமும் சேனல் தரப்பில் இருந்து பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருகிறதாம்.

திவ்யா ஸ்ரீதர்- அர்னவ்:

திவ்யாவிடம், முதல் நாள் இருந்து பிக் பாஸ் வீட்டிற்குள் போவதற்கு பேசினார்களாம். ஆனா, அப்ப அர்னவ் போறதாக மட்டும் திவ்யாவுக்கு சொல்லப்பட்டிருக்கிறது. அன்ஷிதா போவது பற்றி திவ்யாவிடம் சொல்லவே இல்லையாம். ஆனா, அந்த சமயத்தில் திவ்யா ‘நோ’ சொல்லியிருக்கிறார். முதல் நாள் டிவியில் பார்த்த பிறகு தான் அன்ஷிதாவும் நிகழ்ச்சிக்குப் போனதே திவ்யாவுக்குத் தெரிந்திருக்கிறது ‌. அர்னவ் – திவ்யா பிரிவுக்கு முக்கிய காரணமே அன்ஷிதா தான் என்று கூறப்படும் நிலையில், வைல்டு கார்ட் என்ட்ரிக்கு திவ்யா சமாதிப்பாங்களான்னு பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement