தர்ஷனுக்கு முத்தம் கொடுக்க வைத்த வனிதா.! கடைசில தர்சனையும் கெடுத்துட்டாங்களே.!

0
16850
Tharshan
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் வனிதாவை காப்பாற்றுவதற்கென்றே பிக் பாஸ் டாஸ்க் கொடுத்துள்ளார் என்பது போல தான் தோன்றுகிறது. தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் கொலைகாரன் டாஸ்க் போய் கொண்டிருக்கிறது. இதில் வனிதா மற்றும் முகன் கொலைகாரர்களாக மிகவும் ரகசியமாக விளையாடி வருகின்றனர்.

-விளம்பரம்-

இன்றைய டாஸ்கில் வனிதா மற்றும் முகனுக்கு மூன்றாவது கொலைக்கான டாஸ்க் கொடுக்கப்பட்டது. அதில் ஷெரின், தர்ஷனுக்கு முத்தம் கொடுக்க வைக்க வேண்டும் என்று டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதனால் ஷேரினை அழைத்த வனிதா, உனக்காக தான் தர்ஷன் அணைத்து வேலையை செய்து வருகிறார் என்றார்.

- Advertisement -

பின்னர் கொஞ்சம் கூட கூச்சம் இல்லாமல் தர்ஷனுக்கு முத்தம் கொடு என்றார் வனிதா. பின்னர் ஷெரினோ, தர்ஷனுக்கு உதட்டை குவித்து முத்தம் கொடுத்தார்.ஆனால், அப்போதும் விடாத வனிதா, அப்படி எல்லாம் கொடுக்க கூடாது, கையில் கொடு என்றதும் பின்னர் ஷெரின், தர்ஷனின் கையில் முத்தம் கொடுத்தார்.

-விளம்பரம்-

இதனால் மூன்றாவது டாஸ்கில் வென்றார் வனிதா, என்னதான் டாஸ்க் என்றாலும் பொது மக்கள் பார்க்கும் ஒரு நிகழ்ச்சியில் ஒரு ஆணுக்கு பெண்ணை முத்தம் கொடுக்க சொல்லி பிக் பாஸ் கொடுத்த டாஸ்க் பலருக்கும் வெறுப்பை தான் தந்தது. கடந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் செய்ததை பலரும் கழுவி ஊற்றினார்கள். ஆனால், இம்முறை போட்டியாளர்களுக்கு அனைத்திற்கும் வசதியாக டாஸ்க் என்ற பெயரிலேயே முடித்து விடுவாரோ என்ற எண்ணம் தான் தோன்றுகிறது.

Advertisement