பிக்பாஸ் போட்டியாளரின் அநாகரிக செயல் – கோபத்தில் நிகழ்ச்சியை பாதியில் நிறுத்திய மோகன்லால்

0
900
MohanLal
- Advertisement -

மலையாள பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர் ஒருவர் செய்த செயலால் கடுப்பாகி நிகழ்ச்சியை பாதியில் மோகன்லால் நிறுத்தி இருக்கும் சம்பவம் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்திய அளவில் ஒளிபரப்பப்படும் மிகப் பிரபலமான நிகழ்ச்சியில் ஒன்று தான் பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியை முதன் முதலில் இந்தியில் தான் ஒளிபரப்பி இருந்தார்கள். தற்போது பல ஆண்டுகாலமாக இந்தியில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

-விளம்பரம்-

இந்த நிகழ்ச்சியை ஹிந்தியில் சல்மான் கான் தான் தொகுத்து வழங்கி வருகிறார். அதனை தொடர்ந்து பிற மொழிகளிலும் இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பி வருகிறார்கள். அந்த வகையில் தமிழில் விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இதுவரை பிக் பாஸ் நிகழ்ச்சி 6 சீசன்களை கடந்து இருக்கிறது. மேலும், இந்த எல்லா சீசன்களையும் கமல் தான் தொகுத்து வழங்கி வருகிறார். சமீபத்தில் தான் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி வெற்றிகரமாக முடிவடைந்தது.

- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சி:

இதனை தொடர்ந்து அடுத்த சீசன்க்காக ரசிகர்கள் பலரும் காத்துக் கொண்டிருக்கின்றார்கள். தமிழை போல மலையாளத்திலும் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. மலையாளத்தில் நடிகர் மோகன்லால் தான் இந்த நிகழ்ச்சி தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது மலையாளத்தில் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி தொடங்கி இரண்டு வாரங்கள் ஆகின்றது.

மலையாள பிக் பாஸ்:

இந்த நிலையில் போட்டியாளர் ஒருவர் செயலால் பிக் பாஸ் நிகழ்ச்சியை மோகன்லால் பாதியிலேயே நிறுத்தி இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அதாவது, பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு எல்லோருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து மோகன்லால் நிகழ்ச்சியை உற்சாகமாக தொடங்கி இருந்தார். இந்த நிகழ்ச்சியில் உள்ள போட்டியாளர் அகில் மாறார் தன்னுடைய சக போட்டியாளர்களான ஏஞ்சலினா, சாகர் ஆகிய மீது மோசமான வார்த்தையை பயன்படுத்தியிருக்கிறார்.

-விளம்பரம்-

நிகழ்ச்சி போட்டியாளர்கள் செய்த செயல்:

இதற்காக அவர்களிடம் மோகன்லால் மன்னிப்பு கேட்க சொன்னார். அது மட்டும் இல்லாமல் தன்னுடைய கேப்டன் பேண்டை சாகரிடம் ஒப்படைக்க சொன்னார். மோகன்லால் சொன்னதற்காக அகில் மாறார் மன்னிப்பு கேட்டார். பின் தன்னிடம் இருந்த கேப்டன் பேண்டை சாகரிடம் கொடுப்பதற்கு பதில் வீசி எறிந்து இருக்கிறார். இப்படி தன் கண் முன்னே அகில் நடந்து கொண்டது மோகன்லாலுக்கு கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய மோகன்லால்:

இதனை அடுத்து, நான் ஈஸ்ட்ரை உங்களுடன் கொண்டாடுவதற்காக ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து பல மணி நேரம் பயணித்து வந்திருக்கிறேன். தயவு செய்து இந்த லைவை நிறுத்துங்கள் என்று பயங்கரமாக கத்தி விட்டு மோகன்லால் அங்கிருந்து கிளம்பி இருக்கிறார். அதோடு பிக் பாஸ் குழுவையும் அழைத்து மோகன்லால் திட்டி இருக்கிறார். அகில் மற்றும் சாகர் இருவரையும் பிக் பாஸ் அழைத்து பேசி இருக்கிறது. இதனை அடுத்து பிக் பாஸ் குழுவினர் மோகன்லாலை சமாதானப்படுத்தி இந்நிகழ்ச்சியை நடத்த வைத்திருக்கிறது. தற்போது இந்த சம்பவம் தான் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement