மீரா மிதுனை கண்டித்து போஸ்டரை அடித்து குப்பை தொட்டிக்கு அருகில் ஒட்டிய தளபதி ரசிகர்கள்.

0
1772
meera
- Advertisement -

கடந்த சில நாட்களுக்கு முன்னர் வனிதாவின் மூன்றாவது திருமணம் பிரச்சனைதான் சமூக வலைத்தளத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வந்த ஒரு விஷயமாக இருந்து வந்தது. ஆனால் தற்போது மீராமிதுன் தான் அந்த பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். நடிகையும் பிக் பாஸ் போட்டியாளர் மான மீரா மிதுன் சமீப காலமாகவே தமிழ் சினிமாவில் உள்ள பல்வேறு நடிகர்கள் நடிகைகளை பற்றி அவதூறாக பேசி வருவதை வாடிக்கையாக வைத்து வந்தார்.

-விளம்பரம்-
Image

ஆனால் சமீபத்தில் இவர் விஜய் மற்றும் சூர்யா குறித்து அவதூறாக பேசி வீடியோவை வெளியிட்டது தான் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும், தொடர்ந்து விஜய் மற்றும் சூர்யா குறித்து அவதூறாக பேசி வருகிறார். இதனால் இவரை இதனை கண்டித்து பல்வேறு ரசிகர்களும் சமூக வலைத்தளத்தில் திட்டி தீர்த்து வருகிறார்கள். அதேபோல தமிழ் சினிமாவில் உள்ள பல்வேறு பிரபலங்களும் வீரம் இதனை கண்டித்து வருகின்றனர்.

- Advertisement -

இந்த நிலையில் சென்னையில் மீரா மிதுனை கண்டித்து விஜய் ரசிகர்கள் கண்டன போஸ்டர்களை வெளியிட்டுள்ளனர். அதில்,வன்மையாக கண்டிக்கிறோம் எங்கள் அண்ணியார் தாய்க்கு சமம் அவர்களை விரிவாக பேசுவதற்கு உனக்கு என்ன தகுதி இருக்கிறது. மீராமிதுன் நாயே. என்று போஸ்டர்களை ஆங்காங்கே ஒட்டியதோடு குப்பைத் தொட்டிக்கு அருகேயும் அந்த போஸ்டரை ஒட்டி உள்ளனர் இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள மீரா மிதுன், இதை தான் அகரம் மற்றும் விஜய் மக்கள் இயக்கம் செய்து வரும் சமூக சேவை என்று பதிவிட்டுள்ளார்.

மீரா மிதுன் மீது ஏற்கனவே விஜய் மற்றும் சூர்யாவின் ரசிகர்கள் கொலைவெறியில் தான் இருக்கின்றனர். மேலும், விஜய் மற்றும் சூர்யாவை தொடர்ந்து அவதூறாக பேசி வரும் மீரா மிதுன் மீது பல்வேறு மாவட்டங்களில் சூர்யா மற்றும் விஜய் ரசிகர்களின் சார்பாக காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. எனவே, விரைவில் மீராமிதுன் கைது செய்யப்பட்டாலும் அதற்கு ஆச்சர்யம் ஏதும் கிடையாது.

-விளம்பரம்-
Advertisement