நீயும்-தலயும் ஒன்றா ? மனசாட்சி உனக்கு இருக்கா ? வனிதாவை கழுவி ஊற்றும் அஜித் ரசிகர்கள்.

0
1303

தமிழ் சினிமாவில் தல என்ற அந்தஸ்துடன் பல ஆண்டுகளாக முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் அல்டிமேட் ஸ்டார் அஜித்குமார். அஜித் திரைத்துறைக்கு வந்து 28 ஆண்டுகள் நிறைவடைந்ததை அவரது ரசிகர்கள் ஸ்பெஷல் காமென் டிபியை வெளியிட்டு கொண்டாடி வரும் நிலையில் வனிதா தனது ட்விட்டர் பக்கத்தில் அந்த காமென் டிபியை பதிவிட்டு அஜித்தைப் பற்றி ட்வீட் செய்துள்ளார். 

அதில், நம்ப முடியாதது. ஆனால் உண்மை. நாங்கள் அனைவரும் ஒரே நேரத்தில் தான் சினிமாவில் நுழைந்தோம். சினிமாவில் நல்லதையும், மோசமானதையும் பார்த்தோம்.அஜித் இந்த வெற்றிக்கு மிகவும் தகுதியானவர். நான் சந்தித்த மிக எளிமையான, உண்மையான மனிதர்களில் நீங்கள் ஒருவர். கடவுள் உங்களுக்கும், ஷாலினிக்கும் அனைத்து சிறப்புகளையும் கொடுப்பார்” என்று பதிவிட்டுள்ளார் வனிதா.

- Advertisement -

வனிதாவின் இந்த பதிவை கண்ட தல ரசிகர்கள் மிகுந்த கடுப்பில் ஆழ்ந்துள்ளனர். மேலும், அஜித்துடன் உங்களை ஒப்பிட்டுக்கொள்ளாதீர்கள் என்றும் கழுவி ஊற்றி வருகின்றனர். அதில் ரசிகர் ஒருவர், வேனாம் அங்க கடிச்சி..இங்க கடிச்சி.. தலய இடு போடவந்துட்ட.. நீயும்-தலயும் ஒன்றா ??? மனசாட்சி உனக்கு இருக்கா ?? நீ நடிகை கிடையாது அது ஒரு வரலாற்று பிழை.. அதை நினைவில் வை என்று பதிவிட்டுள்ளார்.

மற்றொரு ரசிகரோ, நீங்கள் இதற்கு தகுதியற்றவர் அஜித் சார் உங்களைப் போன்ற ஒரு முட்டாளை ஒருபோதும் விரும்புவதில்லை நான் உன்னை திட்டியதால் அவர் என்னையும் விரும்பப்போவதில்லை ஆனால் எனக்கு வேறு வழியில்லை போய்விடு என்று பதிவிட்டுள்ளார். இது போக பல தல ரசிகர்களும் இதே போன்று கழுவி ஊற்றி வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement