அக்ஷரா-வருணுக்கு திருமணமா? வைரலாகும் வீடியோவால் குழம்பிய ரசிகர்கள். நீங்களே பாருங்க.

0
164
akshara
- Advertisement -

அக்ஷரா- வருண் திருமண போட்டோ ஷூட் புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் காட்டுத்தீயாய் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் எத்தனையோ நிகழ்ச்சிகள் டெலிகாஸ்ட் ஆகி வந்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி இருந்த பிக் பாஸ் சீசன் 5 சமீபத்தில் தான் வெற்றிகரமாக முடிவடைந்தது. இந்த முறை பல மாற்றங்கள் நிகழ்ச்சியில் கொண்டு வந்திருந்தார்கள். இதில் அனைவரும் எதிர்பார்த்த மாதிரி ராஜு டைட்டில் வின்னர் ஆனார். இரண்டாவது இடத்தை பிரியங்கா, மூன்றாவது இடத்தை பவானி ரெட்டி, நான்காம் இடத்தை அமீர் பிடித்து இருந்தார்கள்.

-விளம்பரம்-

அதோடு பிக் பாஸ் 5 நிகழ்ச்சியில் அக்ஷரா மற்றும் வருண் இருவருமே நல்ல நண்பர்களாக, நல்ல புரிதலுடன் விளையாடியது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இதனாலே இவர்களுக்கு என்று ஒரு ரசிகர் கூட்டம் திரண்டது. ஒரு நண்பர்கள் என்றால் இப்படி தான் இருக்க வேண்டும் என்ற உதாரணத்திற்கு விளக்கமாக ரெண்டு பேரும் இருந்தார்கள். மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சியில் எவ்வளவு கடுமையான டாஸ்க்காக இருந்தாலும் அதை எதிர்கொண்டு விளையாடி இருந்தார்கள் அக்ஷரா-வருண்.

- Advertisement -

அக்ஷரா மற்றும் வருண் டபிள் எவிக்ஷன்:

அதற்காகவே இவர்களுக்கு என்று ஒரு தனி ஆர்மி உருவானது. அதேபோல வருண் பெரிய இடத்து பிள்ளையாக இருந்தாலும் எந்த இடத்திலும் அதை வெளிப்படுத்தாமல் இயல்பாக நடந்து கொண்டது பலரையும் ஈர்த்தது. மேலும், அக்ஷரா மற்றும் வருண் இருவரும் நிகழ்ச்சியில் இருந்து ஒரே நேரத்தில் வெளியேறியது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்து இருந்தது. அதுமட்டுமில்லாமல் இதுவரை எந்த சீசனிலும் இல்லாத முதல் முறையாக டபிள் எவிக்ஷன் இந்த சீசனில் நடந்தது.

அக்ஷரா மற்றும் வருண் நட்பு:

யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு இவர்கள் இருவரும் ஒரே நாளில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறி இருந்தார்கள். இவர்கள் இருவரும் வெளியேறியதை குறித்து பலரும் எப்படி வெளியேற்றலாம்? என்று கொந்தளித்து போய் கருத்து போட்டு இருந்தார்கள். பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த பிறகும் அக்ஷரா-வருண் இருவரும் மிக நெருங்கிய நண்பர்களாக இருக்கிறார்கள். இருவரும் பொது நிகழ்ச்சிகள், விளம்பரங்களில் ஜோடியாக நடித்து வருகின்றனர். அதோடு இவர்கள் இருவருக்கும் மிகப்பெரிய திரைப்பட வாய்ப்பு கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.

-விளம்பரம்-

அக்ஷரா மற்றும் வருண் நடிக்கும் படம்:

அதுவும் இருவரும் சேர்ந்து ஒன்றாக ஒரே படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அதுவும், அக்ஷரா மற்றும் வருண் இருவரும் ஜோடியாக நடிக்கிறார்கள் என்றவுடன் ரசிகர்கள் மத்தியில் பயங்கர குஷியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் இவர்களின் திருமண புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதுஎன்னவென்றால், இவர்கள் இருவரும் நடத்திய போட்டோஸ் இது தான். தற்போது எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்தது இவர்கள் இருவரும் நடத்திய போட்டோஸ் தான்.

அக்ஷரா மற்றும் வருண் திருமண புகைப்படம்:

திருமண உடை அலங்காரத்துக்காக இருவரும் மாப்பிள்ளை மற்றும் மணமகள் போல் உடை அணிந்து அழகாக போஸ் கொடுத்து இருக்கின்றனர். இந்த புகைப்படம் திருமணத்துக்காக எடுக்கப்பட்ட புகைப்படம் போலவே இருக்கிறது. இதனை பார்த்துதான் பலரும் அக்ஷரா-வருண் ஆகியோர் திருமணத்துக்கு தயாராகி விட்டதாக சோசியல் மீடியாவில் புரளியைக் கிளப்பி விட்டிருக்கின்றனர். ஆனால், இது விளம்பர நிகழ்ச்சிக்காக இவர்கள் ஒரு மாடல்களாக நடித்திருக்கின்றனர். தற்போது இவர்களின் திருமண போட்டோஷுட் புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement