வீட்டை விட்டு வெளியேறிய வைஷ்ணவி.! ஆனால் வெளியே வரவில்லை.? பிக் பாஸ் வைத்த ட்விஸ்ட்

0
593
Rj-Vaishnavi

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற போகும் 5 வது போட்டியாளர் யார் என்பதை அறிந்து கொள்ள பரவியாளர்கள் அனைவரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த வாரம் நடைபெற்ற நமினேஷனில் மும்தாஜ்,யாஷிகா, மஹத், வைஷ்ணவி,பொன்னம்பலம் ஆகியோர் இடம்பெற்று இருந்தனர்.

Vaishnavi

- Advertisement -

கடந்த திங்கள்கிழமை முதல் இந்த ஏவிக்ஷன் ப்ராசஸஸிர்கள் வாக்கு பதிவுகள் நடைபெற்று வந்த நிலையில் இந்த போட்டியில் இருந்து வைஷ்ணவி வெளியேற்ற பட்டதாக தகவல்கள் வெளியாகின. அது ஓரளவிற்கு உண்மை தான் என்றாலும் அவர் பிக் பாஸ் வீட்டில் இருந்து ஒரேடியாக வெளியேற்றபடவில்லை.

குழப்பாமாக இருக்கிறதா? அப்படி என்றால் கடந்த வாரம் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் சீக்ரட் ரூம் உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா. கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக இருந்த சுஜா வருணி எலிமினேட் என்று அறிவிக்கப்பட்டு, பின்னர் அந்த சீக்ரட் அறையிக்கு அனுப்பட்டார். ஆனால், சில நாட்கள் கழித்து அவர் மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குல் அனுப்பி வைக்கப்பட்டார்.

-விளம்பரம்-

Secret-Room

இந்த சீக்ரட் ரூமில் இருந்து சுஜா ஒரு தொலைக்காட்சி வழியாக பிக் பாஸ் வீட்டில் நடக்கும் அனைத்தையும் பார்த்துக் கொண்டு இருந்தார். இந்நிலையில் தற்போது அதே போல தான் வைஷ்ணவியும் சீக்ரட் ரூமிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.எனவே, இன்று(ஜூலை 29) ஒளிபரப்பாக போகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் யாரும் வெளியேற்றபட போவது இல்லை என்று தான் தோன்றுகிறது. காத்திருக்கலாம் இன்று இரவு வரை.

Advertisement