மீண்டும் நயன்தாராவுடன் இனைந்த பிகில் பட நடிகை. யார் தெரியுமா ?

0
2580
indhuja
- Advertisement -

தமிழ் சினிமாவில் நடிகைகள் நீண்ட காலம் நிலைப்பது என்பது மிகவும் கடினமான விஷயம். பொதுவாகவே நடிகைகள் ஒரு சில ஆண்டுகள் தான் சினிமா உலகில் நிலைத்து நிற்கிறார்கள். ஆனால் சினிமாவில் பல ஆண்டுகளாக லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் நடிகை நயன்தாரா. அதுமட்டும் இல்லாமல் தமிழ் சினிமா திரையுலகில் உள்ள முன்னணி நடிகர்களுக்கு நிகராக சம்பளத்தை வாங்கும் ஒரே நடிகையும் இவர் தான். நடிகை நயன்தாரா அவர்கள் சினிமா திரை உலகில் முன்னர் கவர்ச்சி தோற்றத்தில் நடித்து இருந்தாலும் இப்போது கதைக் களத்திற்கு ஏற்றவாறு தோற்றத்தில் தான் நடித்து வருகிறார்.

-விளம்பரம்-
Image result for mookuthi amman

- Advertisement -

தற்போது நடிகை நயன்தாரா தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் பிசியாக நடித்து வருகிறார். நயன் சமீப காலமாக கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளில் நடித்து வருகிறார். நல்ல கதை என்றால் காமெடி நடிகர்களின் படத்தில் கூட நடிக்க நடிகை நயன்தாரா அவர்கள் தயங்குவது கிடையாது. இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் ரஜினி காந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் “தர்பார்”. இந்த வருடம் தொடக்கத்திலேயே இந்த படத்தில் ரஜினி காந்துக்கு ஜோடியாக லேடி சூப்பர் ரஜினி நயன்தாரா அவர்கள் நடித்து இருக்கிறார். இந்த நிலையில் நடிகை நயன்தாரா அவர்கள் மூக்குத்தி அம்மன் என்ற படத்தில் கமிட்டாகியிருக்கிறார்.

இதையும் பாருங்க : இன்ஸ்டாகிராமில் புகைபிடிப்பதை நிறுத்து முடிவில்லைனு போஸ்ட். ட்விட்டர்ல புடிக்கமாட்டானு போஸ்ட். மஹத்தின் இரட்டை வேஷம்.

இந்தப் படத்திற்காக நடிகை நயன்தாரா விரதம் உள்ளார் என்று கூட சோசியல் மீடியாவில் பேசப்பட்டது. மேலும், அம்மன் படத்தில் நடிக்க இருப்பதால் இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடியும் வரை அசைவ உணவுகளை தவிர்த்து சைவ உணவுகளை மட்டுமே உண்ண போகிறாராம் நடிகை நயன். நயன்தாரா இது போன்ற விரதம் இருப்பது முதல் முறை அல்ல ஏற்கனவே தெலுங்கில் கடந்த 2011ம் ஆண்டு பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியான ஸ்ரீராமராஜ்ஜியம் படத்தில் சீதையாக நடித்திருந்த போது அந்த படம் தொடங்கப்பட்டதிலிருந்து அசைவ உணவுகளை சாப்பிடாமல் விரதம் இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகை நயன்தாரா ஏற்கனவே தனது காதலர் விக்னேஷ் சிவன் இயக்கிய நானும் ரவுடிதான் படத்தில் ஆர் ஜே பாலாஜி உடன் இணைந்து நடித்திருக்கிறார்.

-விளம்பரம்-
Image result for indhuja ravichandran with nayanthara

அதோடு இவர்கள் இருவரும் வேலைக்காரன் என்ற படத்திலும் நடித்திருந்தனர். இந்தநிலையில் மூக்குத்தி அம்மன் படத்தின் மூலம் மீண்டும் ஆர்ஜே பாலாஜியுடன் இணைந்திருக்கிறார் நடிகை நயன்தாரா. வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. ஆர்ஜே பாலாஜி மற்றும் என்.ஜே.சரவணன் இருவரும் இணைந்து இந்த படத்தை இயக்குகிறார்கள். இவர்கள் இருவருமே ‘எல்.கே.ஜி.’ படத்தில் முதல்நிலை உதவி இயக்குநர்களாகப் பணியாற்றியவர்கள். மேலும், இந்த படத்தில் ஆர்.ஜே.பாலாஜி நாயகனாக நடிக்கிறார். இந்நிலையில் இந்தப் படத்தில் தற்போது நடிகை இந்துஜாவும் இணைந்திருக்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு நாகர்கோவிலில் நடைபெற்றது. படப்பிடிப்பில் நடிகை இந்துஜாவுக்கான காட்சிகள் படமாக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்களுடன் மெளலி, ஊர்வசி இந்த படத்தில் நடிக்கிறார்கள். நயன்தாரா மற்றும் இந்துஜா பிகில் படத்தில் இணைந்து நடித்திருந்த நிலையில் தற்போது மூக்குத்தி அம்மன் படத்தில் மீண்டும் இணைந்து உள்ளனர். ஹீரோயினை மையப்படுத்தி எடுக்கப்படும் இந்தப் படம் கோடை விடுமுறைக்கு திரைக்கு வரும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

Advertisement