6 வேலை உணவு, சிக்கன் மீன் – பிகில் பாண்டியம்மாவா இது ? எப்படி எடை குறைத்துள்ளார் பாருங்க.

0
49215
indraja
- Advertisement -

தொலைக்காட்சியில் மேடை கலைஞராக இருந்து தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் ரோபோ ஷங்கர். பொதுவாக சினிமாவில் காமெடி நடிகர்களின் வாரிசுகள் களம் இறங்குவது வாடிக்கையான ஒரு விஷயம் தான். அந்த வகையில் ரோபோ ஷங்கரின் மகளான இந்திராவும் தற்போது தமிழ் சினிமாவில் அறியப்பட்ட நடிகையாக திகழ்ந்து வருகிறார்.

-விளம்பரம்-

அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் பாண்டியம்மாள் என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார் இந்திரஜா.

- Advertisement -

ஆரம்பத்தில் இருந்தே படு குண்டாக இருந்து வரும் இந்திரஜா சமீப காலமாக கடுமையான உடற்பயிற்சிகளை செய்து உடல் எடையை குறைக்க முயற்சி எடுத்து வருகிறார். அந்த வகையில் சமீப காலமாக உடல் எடையை கணிசமாக குறைத்து வரும் இந்திரஜா, தன் பிட்னஸ் குறித்து பேசுகையில், கடந்த வருடம் கடைசி 100 நாட்கள் ஒரு சேலஞ் எடுத்துக்கொண்டேன்.

ரெகுளர் டயட் ,ஆறு வேளை உணவு என்று ஆரம்பித்தேன். காலை எழுந்ததும் ஐந்து பாதாம் மற்றும் கிரீன் டீ குடித்துவிட்டு உடற்பயிற்சி செய்து விடுவேன். பின்னர் மஞ்சள் கரு நீக்கப்பட்ட 4 முட்டை பின்னர் ஓட்ஸ் அல்லது 3 இட்லி இல்லை என்றால் இரண்டு தோசை இதுதான் என் காலை உணவு. பின்னர் பதினொரு மணிக்கு ஏதாவது ஒரு ஜூஸ். பின்னர் மதியம் காய்கறி, சிக்கன், மீன் இவற்றை எல்லாம் சாப்பிடுவேன். இரவு 8 மணிக்கு முன்பே சாப்பிடவேண்டும் அதை மீறி இரவு பசித்தால் சுடு தண்ணீரை குடித்துவிட்டு படுத்து விடுவேன்.

-விளம்பரம்-
Advertisement