உங்க அப்பாவின் காதலியா நடிப்பியா? ரசிகர் கேட்ட மோசமான கேள்வி. பதில் அளித்த இந்திரஜா.

0
2165
indraja
- Advertisement -

தொலைக்காட்சியில் மேடை கலைஞராக இருந்து தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் ரோபோ ஷங்கர். பொதுவாக சினிமாவில் காமெடி நடிகர்களின் வாரிசுகள் களம் இறங்குவது வாடிக்கையான ஒரு விஷயம் தான். அந்த வகையில் ரோபோ ஷங்கரின் மகளான இந்திராவும் தற்போது தமிழ் சினிமாவில் அறியப்பட்ட நடிகையாக திகழ்ந்து வருகிறார். அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள பிகில் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பைபெற்றது.

-விளம்பரம்-
indraja

இந்த படத்திற்கு மோசமான விமர்சனங்கள் வந்தாலும் வசூல் ரீதியாக இந்த படம் வெற்றியை கண்டுள்ளது. நயன்தாரா விவேக் யோகிபாபு டேனியல் பாலாஜி கதிர் இந்துஜா என்று பல்வேறு முக்கிய நடிகர்கள் நடித்துள்ள இந்த படத்தில் ஒரு சில புதுமுக நடிகைகளின் அறிமுகமாகி இருந்தார்கள் அந்த வகையில் காமெடி நடிகர் ரோபோ ஷங்கரின் மகள் இந்திரஜாவும் ஒருவர்.

- Advertisement -

இந்த படத்தில் பாண்டியம்மாள் என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார் இந்திரஜா.இந்த படத்திற்கு பின்னர் ரோபோ ஷங்கருக்கு இணையாக ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார் இந்தரஜா. பிகில் திரைப்படத்திற்குப் பின்னர் தனது மகளுக்கு பல்வேறு படங்களில் நடிக்கும் வாய்ப்பு வருவதாக ரோபோ சங்கர் சோசியல் மீடியாவில் பகிர்ந்து இருந்தார்.

சமீபத்தில் கூட நடிகை இந்திரஜாவுக்கு கடந்த ஆண்டின் சிறந்த கண்டுபிடிப்பு என்ற பிரிவில் விருது கிடைத்து இருந்தது .சமீபத்தில் இந்திரஜா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்கள் கேட்கும் கேள்விக்கு பதில் அளித்து இருந்தார். அப்போது ரசிகர் ஒருவர்,உங்கள உங்க அப்போவோட காதலியா நடிக்க சொன்னா நடிப்பீர்களா என்று மோசமான கேள்வியை கேட்டிருந்தார்.

-விளம்பரம்-

அதற்கு சற்றும் கோபப்படாத இந்திரஜா, நல்ல கேள்வி, சூழ்நிலை அப்படிதான் என்றால் நான் பண்ணுவேன். ஏன்னா நான் எங்க அப்பாவ லவ் பன்றேன். அவ்ளோ தான் சிம்பிள் ப்ரோ என்று மிகவும் சாமர்த்தியமாக பதில் அளித்துள்ளார்.இது தவிர பல்வேறு ஸ்வாரசியமான கேள்விகளுக்கும் அவர் பதில் அளித்துள்ளார்.

Advertisement