15 வருஷம் கழித்து வீட்ல நடக்கும் முதல் விஷேசம், பிகில் காயத்ரியின் வருங்கால கணவர் யார் தெரியுமா ? திருமணம் குறித்து அறிவித்த காயத்ரி.

0
574
gayathri
- Advertisement -

அட்லி இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி இருந்த படம் பிகில். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று இருந்தது. அதுமட்டும் இல்லாமல் இந்தப்படம் வசூலில் பெரிய சாதனையை படைத்து இருந்தது. ஏஜிஎஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து இருந்தது. மேலும், இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இசைஅமைத்திருந்தார். தெரி, மெர்சல் போன்ற படங்களைத் தொடர்ந்து இந்தப் படத்தின் மூலம் மூன்றாவது முறையாக விஜய் மற்றும் அட்லி இணைந்து பணி புரிந்து இருந்தார்கள். பெண்கள் கால்பந்தாட்ட விளையாட்டை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட படம்.

-விளம்பரம்-

இந்த படத்தில் பெண்கள் கால்பந்தாட்ட அணியில் இருந்தவர் காயத்ரி ரெட்டி. இந்த படத்தின் மூலம் தான் இவர் தமிழ் சினிமா உலகில் அறிமுகமாகி இருந்தார். அதற்கு முன் காயத்திரி ரெட்டி பல்வேறு விளம்பர படங்களில் நடித்திருக்கிறார். அதேபோல கடந்த 2010ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற அழகிப் போட்டியில் முதல் 10 இடத்தில் இடம் பிடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், காயத்ரி ரெட்டி தனது 18 வயதில் மாடல் துறையில் அறிமுகமானார். பின் அதனை தொடர்ந்து இவர் பல போட்டிகளில் கலந்து இருக்கிறார்.

- Advertisement -

சர்வைவர் நிகழ்ச்சியில் காயத்ரி ரெட்டி:

இதன் பிரபலத்தின் மூலம் இவருக்கு விஜய் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்து இருக்கிறது. அதுவும் முதல் படமே இத விஜயின் படம் என்பதால் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலம் ஏற்பட்டு இருக்கிறது. சமீபத்தில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த சர்வைவர் ரியாலிட்டி நிகழ்ச்சியில் காயத்ரி பங்கு பெற்று சிறப்பாக விளையாடி இருந்தார். இதன் மூலம் இவருக்கு ரசிகர் பட்டாளமும் உருவாகி இருந்தது. இப்படி ஒரு நிலையில் கடந்த மாதம் இவர்களுடைய வீட்டில் எளிமையாக காயத்ரிக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றிருக்கிறது.

காயத்ரி ரெட்டி அளித்த பேட்டி:

இதுகுறித்து காயத்ரியிடம் பிரபல சேனல் பேட்டி எடுத்து இருந்தார்கள். அதில் அவர் கூறியிருப்பது, எனக்கு தற்போது 26 வயது பூர்த்தி அடைய போகிறது. வீட்டில் திருமணத்துக்காக மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிக்கிறோம் என்று சொன்னார்கள். அதோடு எனக்கு லவ் செட் ஆகாது என்று தெரியும். அதனால் தான் கடந்த ஆறு வருடங்களாக நான் யாரையும் டேட் கூட பண்ண வில்லை. எனக்கு அரேஞ்ச் மேரேஜ் தான் செட் ஆகும் என்று தெரிந்ததால் நானும் அவர்களிடம் ஓகே சொல்லிவிட்டேன். வீட்டில் பார்த்த பையனைத் தான் திருமணம் செய்துகொள்ளப் போகிறேன்.

-விளம்பரம்-

திருமணம் குறித்து காயத்ரி கூறியது:

சினிமாவில் நடிக்கிற பொண்ணுங்களே வேணாம் என்று சொல்வார்கள். ஆனால், இவங்க காயத்ரி யாரு? அவருடைய குணம் என்ன? தான் பார்த்தார்கள். ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் பிடித்துவிட்டது. இரண்டு மாதமாக போனில் பேசிக் கொண்டிருந்தோம். இப்போ அரேஞ்ச் மேரேஜ்- லவ் கம் அரேஞ்ச் மேரேஜ் ஆகிவிட்டது. அவர் வெளிநாட்டில் கன்ஸ்டிரக்ஷன் வொர்க் பண்ணிட்டு இருக்கார். திருமணத்திற்கு பிறகு நானும் அவருடன் பாரின் போய் விடுவேன். கொஞ்சம் பிரேக் பிறகு கண்டிப்பாக சினிமாவில் என்னை பார்க்கலாம். நிச்சயம் திரும்பி வருவேன்.

காயத்ரி ரெட்டி நிச்சயதார்த்தம்:

எங்க வீட்டில் கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு பிறகு நடக்கிற முதல் விசேஷம் என்பதால் ஃபேமிலியில் எல்லோரும் சந்தோஷமாக இருக்கிறார்கள். உண்மையை சொல்ல வேண்டுமென்றால் நிச்சயதார்த்தம் பெரிய அளவில் செய்ய தான் இருந்தோம். திடீரென்று தேதி முடிவு பண்ணினால் நிச்சயதார்த்தம் நடந்துவிட்டது. விரைவிலேயே கல்யாண தேதி அறிவிக்கிறோம். எல்லோருடைய வாழ்த்துக்களும் எங்களுக்கு தேவை என்று கூறியிருந்தார். இப்படி இவர் அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலானதை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement