பிறந்தநாளை கொண்டாடும் பாண்டியம்மா. வீடியோகால் மூலம் வந்த வாழ்த்து.

0
2074
indraja
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் முடி சூடா மன்னாக வலம் வருபவர் தளபதி விஜய். கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த பிகில் படம் உலக அளவில் வசூல் சாதனை படைத்தது. இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது. இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்து இருந்தார். இந்த படம் முழுக்க முழுக்க பெண்களின் கால்பந்தாட்ட விளையாட்டை மையமாக கொண்டு எடுக்கப்பட்டது. இந்தப் படத்தில் பெண்கள் கால்பந்தாட்ட அணியில் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா நடித்து உள்ளார்.

-விளம்பரம்-

தொலைக்காட்சியில் மேடை கலைஞராக இருந்து தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வரும் நடிகர் ரோபோ ஷங்கரின் மகள் தான் இந்திரஜா ரோபோ என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த படத்தில் இந்திரஜா அவர்கள் பாண்டியம்மாள் என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். இதற்கு முன்பே நடிகை இந்திரஜா அவர்கள் டிக் டாக் வீடியோக்களை அடிக்கடி சோசியல் மீடியாவில் பகிர்ந்து உள்ளார்.

இதையும் பாருங்க : சிறு வயதில் நான் தியேட்டரில் பார்த்த முதல் படமே விஜய்யின் இந்த படம் தான் – ராஷ்மிகா, ருசீகரம்.

- Advertisement -

சோசியல் மீடியாவில் அந்த வீடியோக்கள் எல்லாம் தான் ட்ரெண்டிங்கில் இருக்கும். இந்த படத்திற்கு பின்னர் ரோபோ ஷங்கருக்கு இணையாக ரசிகர்கள் மத்தியில் இந்திரஜா பிரபலம் அடைந்தார். அதோடு பிகில் படத்திற்குப் பின்னர் இந்திரஜாவுக்கு பல்வேறு படங்களில் நடிக்க வாய்ப்பு வருவதாக ரோபோ சங்கர் சோசியல் மீடியாவில் பகிர்ந்து இருந்தார். இந்நிலையில் நடிகை இந்திரஜாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக் கூறி உள்ளார் பிகில் படம் நடிகை. இந்திரஜா அவர்களுக்கு இன்று பிறந்தநாள். அதோடு இந்திரஜா பிறந்தநாளுக்கு பிகில் படம் நடிகை ஒருவர் வீடியோ கால் செய்து வாழ்த்து சொல்லியுள்ளார்.

வீடியோ கால் மூலம் வாழ்த்து சொல்லும் போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் பகிரப்பட்டு வருகிறது. இதை ரசிகர்கள் அனைவரும் அதிகமாக ஷேர் செய்தும், இந்திரஜாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தும் வருகிறார்கள். சமீபத்தில் கூட இந்திரஜாவும், அவருடைய தந்தை ரோபோ சங்கரும் சேர்ந்து விஜய்யின் மாஸ்டர் படத்தின் வாத்தி கம்மிங் பாடலுக்கு ஆடிய குத்தாட்ட வீடியோ சோசியல் மீடியாவில் படு வைரல் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement