இணையத்தில் கசிந்த பிகில் படத்தின் பாடல்.! எப்படி இருக்குனு கேளுங்க.!

0
3981
Bigil
- Advertisement -

இளைய தளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் ‘பிகில்’ படத்தில் நடித்து வருகிறார். ஏ ஜி எஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் நயன்தாராவா விஜய்யின் ஜோடியாக நடித்து வருகிறார். இந்த படத்தின் இறுதி கட்ட பணிகள் மும்மரமாக நடந்து வருகிறது.

-விளம்பரம்-

சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. மேலும், பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு எடுக்கப்பட்டு வரும் இந்த படத்தில் நடிகர் விஜய் அப்பா மகன் என்று இரண்டு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.

இதையும் பாருங்க : பொது நிகழ்ச்சிக்கு மெல்லிய ஆடையில் வந்து ஷாக் கொடுத்த இந்துஜா.!

- Advertisement -

விஜய் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த மாதம் வெளியாகி இருந்தது. இந்த படத்தில் நடிகர் விஜய் மைக்கேல் என்ற மகன் விஜயும் ராயப்பன் என்ற அப்பா கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார் என்று ஏற்கனவே தகவல் வெளியானது. மேலும், இந்த படத்தில் விஜய் ஒரு பாடலையும் பாடியுள்ளார் என்று அறிவிப்பு வெளியானது.

https://twitter.com/itispraashanth/status/1151078862417289216

மேலும், இந்த படத்தில் ஏ ஆர் ரஹ்மான் பாடிய பாடல் ஒன்று இணையத்தில் லீக் ஆகி படு வைரலாக பரவி வருகிறது. அந்த பாடலை பிரபல திரைப்பட விமர்சகரான பிரசாத்தும் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த பாடல் எதாவது கால் பந்தாட்ட போட்டியின் போது படத்தில் இடம் பெரும் என்று எண்ணம் தோன்றுகிறது.

-விளம்பரம்-

படத்தின் அப்டேட்டுகளை பொத்தி பொத்தி பார்த்து வந்தது ஏ ஜி எஸ் நிறுவனம். ஆனால், தற்போது ஒரு பாடலே இணையத்தில் லீக் ஆனதால் பிகில் படக்குழுவினர் மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். இந்த பாடல் எப்படி உள்ளது என்று உங்களது கருத்துக்களை கமெண்டில் தெரிவியுங்கள்.

Advertisement