பிகில் ட்ரைலர் வெளியீட்டு நாளை அறிவித்த நயன்தாரா.! ரசிகர்கள் கொண்டாட்டம்.!

0
4471
Bigil

தமிழ் திரைப்பட உலகையே கலக்கிக் கொண்டிருக்கும் நடிகர் ‘இளைய தளபதி’ விஜய்.அவரின் 63 வது படமான “பிகில்” படம் திரையரங்குக்கு இன்னும் சில நாட்களில் அதாவது தீபாவளி அன்று வரப்போகிறது. அதனின் கொண்டாட்டமாக நடிகர் விஜய்யின் பிகில் படத்தின் இசை வெளியீடு திருவிழா சமீபத்தில் நடைபெற்றது. அதில் வழக்கம் போல விஜய் பேசிய பேச்சும் குட்டி கதையும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது.அதே போல விஜய்யின் பேச்சு அரசியல் காட்சியனரிடையும் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது.

Image

இந்த படத்தில் விஜய் இரு வேடங்களில் நடித்துள்ளார்.அப்பா மற்றும் மகன் வேடத்தில் நடித்து உள்ளார். இதில் மகன் “மைக்கேல்” என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அப்பாவின் பெயர் “ராயப்பன்” என மிரட்டலான ,அதிரடி பெயரை வைத்து உள்ளார்கள். போஸ்டரில் அப்பாவை பார்க்கும்போது கறிகளை வெட்டும் கசாப்கரன் என்று தெரிய வருகிறது.இந்த பிகில் படம் குறித்த தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன. இதில் அப்பா விஜய் ராயப்பன் என்னும் கதாபாத்திரத்தில் நடித்ததால் இந்த படத்தில் அதிரடியாகவும், ஆக்சன் காட்சி ஆகவும் இருக்கும் கதாபாத்திரம் என்று ரசிகர்கள் கூறுகின்றனர். இதனால் ரசிகர்கள் ஆவலுடன் அப்பா விஜய் கதாபாத்திரத்தை எதிர்பார்த்துக் கொண்டுள்ளனர்.மேலும்,தளபதி63 என்ற ஹாஸ்ட்டாக்கை உருவாக்கி பிகில் படத்திற்கான தகவல்களை பதிவிட்டு வருகிறார்கள்.

இதையும் பாருங்க : பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் லாஸ்லியா சந்தித்த முதல் போட்டியாளர்.! நீங்கிய ரசிகர்களின் ஏக்கம் .!

- Advertisement -

விஜய் படம் என்றாலே ஒரு பிரம்மாண்ட ஆகவும் அதிக பட்ஜெட் செலவிலும் இருக்கும் என்று பேசப்பட்டு வருகிறது. அந்த வகையில் பிகில் படம் ஒரு மாபெரும் வெற்றி விழாவை கொண்டாடும் அளவிற்கு எடுத்துள்ளதாக படக்குழுவினர் தெரிவித்தனர். இந்த படம் மக்களை சந்தோஷப்படுத்தும் வகையில் அவர்கள் திருப்தி அடையும் வகையில் உள்ளது என்று கூறி உள்ளார்கள்.சிறியவர்கள் முதல் பெரியவர்கள் கண்டு கழிக்கும் ஒரு அற்புதமான படமாக இருக்கும். மேலும், இந்த படத்தில் நயன்தாரா விஜய்யின் ஜோடியாக நடிக்க இருப்பதால் ரசிகர்களுக்கு மேலும் கொண்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த 63 வது படமான பிகில் படம் தீபாவளியன்று வரப்போகிறது என்று படக்குழுவினர் அறிவித்தனர்.மேலும் தீபாவளி அன்று திரை உலகிற்கு வரவிருந்த விஜய் சேதுபதியின் சங்கத்தமிழன் மற்றும் தனுஷின் பட்டாசு ஆகிய இரு படங்களும் தள்ளி வைத்து உள்ளார்கள். இது குறித்து பிகில் படம் மட்டுமே தீபாவளிக்கு திரைக்கு வரப்போகிறது. மேலும் இந்த செய்தி விஜய் ரசிகர்களுக்கு ஒரு பெரிய கிடா விருந்தாக இருக்கும் என்று வலைதளங்களில் பரவிவருகிறது.

இந்த மாதம் இந்த படம் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் ட்ரைலர் குறித்து எந்த ஒரு தகவலும் வெளியாகாமல் இருப்பது ரசிகர்ளுக்கு பெரும் ஏமாற்றமாக இருந்து வந்தது. இந்த நிலையில் இந்த படத்தின் ட்ரைலர் இம்மாதம் 12 ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளிவர உள்ளதாக நடிகை நயன்தாரா தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். மேலும், பிகிலின் புதிய போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் மிகவும் கொண்டாட்டத்தில் திளைத்து வருகின்றனர். ஆனால், நயன்தாரா அறிவித்துள்ள இந்த பதிவில் trailer என்ற வார்த்தைக்கு பதிலாக tailer என்று பதிவிட்டுள்ளதை கண்ட ரசிகர்கள் அதனையும் கலாய்த்து வருகின்றனர்.