சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் படத்தில் அவரது தீவிர ரசிகர் பிஜிலி ரமேஷ் – அவரின் உருக்கமான பேச்சி.

0
227
bigili
- Advertisement -

முன்பெல்லாம் ஒருவர் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற கனவு நிறைவேறுவதற்காக ஒவ்வொரு இயக்குனர்களையும் சந்தித்து வாய்ப்பு கேட்டு சினிமாவில் இருக்கும் ஒவ்வொருத்தரையும் சந்திக்க வேண்டும். இது போன்று பல கஷ்டங்களை கடந்து வந்து தான் சினிமாவில் நடிக்க வேண்டி இருந்தது. ஆனால் இப்போதெல்லாம் சமூக வலைதளங்கள் மூலம் தங்களது நடிப்பு திறமைகளை வீடியோவ வெளியிட்டு, தங்கள் நடிப்புகளைவெளியிட்டும், காமெடியாக செய்து போடும் வீடியோக்கள் இவைகள் எல்லாம் சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங்காக ஆக்கி விடுகின்றனர். இப்படி சமூக வலைதளங்களை மூலம் ட்ரெண்டிங் ஆன ஒரு காமெடியன் தான் பிஜிலி ரமேஷ்.

-விளம்பரம்-

சமூகவலைதளத்தால் பிரபலமான பிஜிலி :-

- Advertisement -

தனது சொந்த வேலை ஒன்றை முடித்துவிட்டு சிவனேன்னு வீடு திரும்பிக் கொண்டிருந்தவரை தூக்கி லாக் பண்ணி, ஃபன் பண்ணுவதாகப் படுத்தி எடுக்க மிகப் பிரபலமானவர். இதுதான் தவறான விஷயம்’,தமிழ்நாட்டுக்கு இருக்கு ஆப்பேய்’, `ஓபிஎஸ்ஸு ஈப்பியெஸ்ஸைப் போய் கேளுய்யா’ என எளிய குரலில் அவர் காமெடியாக பேசிய வார்த்தைகள் மூலமாக ஈர்க்கப்பட்ட ரசிகர்கள். அவரது வீடியோக்களை சமூக வலைத்தளத்தில் மீம்ஸ்கள் ஆகவும் ட்ரோல்கள் செய்தும் சமூக வலைதளங்களில் பரப்ப தொடங்கினர் இதனால் ஓவர் நைட்டில் தமிழ்நாட்டின் மிகவும் பிரபலமானார் பிஜிலி ரமேஷ்.

ஒரே வீடியோவால் சினிமாவில் வாய்ப்பு :-

-விளம்பரம்-

இவரை ரஜினியின் தீவிர ரசிகன் இல்லை ரஜினியின் தீவிர பக்தன் என்றே சொல்லலாம். இப்படி பிரபலமான மான பிஜிலி ரமேஷ் இவரை பல்வேறு தனியார் ஊடகங்களும் சமூகவளைதள சேனல்களும் போட்டி போட்டுக்கொண்டு இவரை பேட்டி எடுத்தனர். ஆனால் அப்போது அவருக்கு தெரியாது நம் சினிமாவில் நடிக்கப் போகிறோம் என்று அதே போல இவருக்கு முதன் முதலில் சினிமா வாய்ப்பு கொடுத்தது நெல்சன் தான். நயன்தாரா நடிப்பில் வெளியான “கோலமாவு கோகிலா” என்ற படத்தில் கபீஸ்க்குபா என்ற பாடலில் இடம்பெற்று அசத்தி இருந்தார் பிஜிலி.இதை தொடர்ந்து இவருக்கு பல படங்களின் வாய்ப்புகள் வந்தது.

பிஜிலிக்கு குவிந்த பட வாய்ப்புகள் :-

கோலமாவு கோகிலா படத்தை தொடர்ந்து குஜிலி ரமேஷ்க்கு பல்வேறு படங்களில் வாய்ப்புகள் வந்து குவிய தொடங்கி விட்டனர் ஜாம்பி, சிவப்பு மஞ்சள் பச்சை, பொன்மகள் வந்தால், நட்பே துணை எல் கே ஜி போன்ற பல படங்களில் காமெடியனாக நடித்தார். ஆனால், பிராங்க் வீடியோ அவருக்கு கைகொடுத்த காமெடி சினிமாவில் இவருக்கு காமெடி கைகொடுக்கவில்லை என்பது அர்த்தம் அளிக்கின்ற ஒரு விஷயம். பின்பு சினிமா வாய்ப்புகள் குறைய தொடங்கிய பின் ரமேஷ் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியிலும் கோமாளியாக பங்கேற்று இருந்தார். இதனை தொடர்ந்து தற்போது அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார் பிஜிலி.

ரஜினி பற்றி உருக்கமாக பேசிய பிஜிலி :-

பிஜிலி ரமேஷ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிர ரசிகன் என்றது நமக்கெல்லாம் தெரிந்த விஷயம் தான். இப்படி இருக்கும் பட்சத்தில் பிஜிலி ரமேஷ் பேட்டி ஒன்றில் ரஜினிகாந்த் பற்றி உருக்கமாக பேசி பேட்டி ஒன்று கொடுத்திருக்கிறார். அதில் பிஜிலி ரமேஷ் கூறியது என்னவென்றால் “தனது வாழ்வில் ஒரு முறையாவது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடன் நடித்துவிட்டு மறுநொடியே இறந்தால் கூட பரவாயில்லை” என ரஜினிகாந்துடன் நடிக்கும் தனது ஆசையை பற்றி கூறி உருக்கமாக பேசியுள்ளார் காமெடி நடிகர் பிஜிலி ரமேஷ். சாதாரண வேலைகள் செய்து கொண்டிருந்த பிஜிலிக்கு சினிமாவுக்கு வந்ததே அவருடைய பெரிய அதிர்ஷ்டம். அதே அதிர்ஷ்டம் ரஜினிகாந்த் உடன் நடிப்பதற்கு உதவியாக கை கொடுக்குமா என்பது தெரியவில்லை.

Advertisement