என்ன ரொம்ப கேவலப்படுத்திட்டாங்க ..! எனக்கு ஜப்பான்ல இருந்து கால் வந்துச்சி..! – பிஜிலி ரமேஷ் யார் தெரியுமா..?

0
1485
bijiramesh
- Advertisement -

பிஜிலி ரமேஷ், இன்றைய தேதிக்கு சமூக வலைதளங்களின் `ராக்ஸ்டார்’. மீம் க்ரியேட்டர்களுக்கு `மக்களின் சூப்பர் ஸ்டார்’. தனது சொந்த வேலை ஒன்றை முடித்துவிட்டு சிவனேன்னு வீடு திரும்பிக்கொண்டிருந்தவரை தூக்கி லாக் பண்ணி, ஃபன் பண்ணுவதாக படுத்தி எடுக்க படு பிரபலமானவர்.

-விளம்பரம்-

- Advertisement -

பிஜிலி ரமேஷ், இன்றைய தேதிக்கு சமூக வலைதளங்களின் `ராக்ஸ்டார்’. மீம் க்ரியேட்டர்களுக்கு `மக்களின் சூப்பர் ஸ்டார்’. தனது சொந்த வேலை ஒன்றை முடித்துவிட்டு சிவனேன்னு வீடு திரும்பிக் கொண்டிருந்தவரை தூக்கி லாக் பண்ணி, ஃபன் பண்ணுவதாகப் படுத்தி எடுக்க மிகப் பிரபலமானவர். `இதுதான் தவறான விஷயம்’, `தமிழ்நாட்டுக்கு இருக்கு ஆப்பேய்’, `ஓபிஎஸ்ஸு ஈப்பியெஸ்ஸைப் போய் கேளுய்யா’ என எளிய குரலில் அவர் பேசிய வார்த்தைகள் எட்டுத்திக்கும் ஒலித்துக்கொண்டிருக்கிறது. இன்று எல்லோரது மொபைலிலும் குடிகொண்டிருப்பவரை, `எம்.ஜி.ஆர்.நகர் பிஜிலி ரமேஷ், தீவிரமான ரஜினி ரசிகர்’ எனும் முகவரியைக் கொண்டு தேடிப்பிடித்தேன்.

சென்னை, கே.கே.நகர் அருகிலுள்ள எம்.ஜி.ஆர்.நகர்தான் பிஜிலி ரமேஷின் கோட்டை. அங்கிருக்கும் ஒரு டீக்கடையில் காலை ஆறு மணியிலிருந்து அவரைப் பார்க்கலாம். டீ குடிப்பது, நாளிதழ் படிப்பது, ஜோக் அடிப்பதுதான் அவரின் காலைக்கடமைகள்! ரஜினியின் வெறித்தனமான ரசிகர் என்பதால், அவரைப் பற்றிய அத்தனை தகவல்களும் அத்துப்படி. அடுத்த படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் என்பதில் ஆரம்பித்து, அதில் யோகிபாபு நடிக்கிறார் என்பதுவரை தெரிந்து வைத்திருக்கிறார். `நான் அரசியலுக்கு வருவது உறுதி’ என ரஜினி அறிவித்தபின்னர், அரசியல் செய்திகளையும் ஒரு எழுத்து விடாமல் படித்துத் தெரிந்துகொள்கிறார். பிறகு 9-10 மணிக்கெல்லாம் வேலைக்குக் கிளம்பிவிடுவார். ஃபால்ஸ் சீலிங் வேலைகளுக்கு இவர்தான் எம்.ஜி.ஆர்.நகர் மக்களுக்கு முதல் சாய்ஸ். பழவேற்காடோ, சோழிங்கநல்லூரோ வேலை எங்குவேண்டுமானாலும் நடக்கும். வேலையை முடித்துவிட்ட உடனே வீடு, குடும்பம். விடியும்போது டீக்கடை, நண்பர்கள். ரஜினி பட ரிலீஸுக்கு போஸ்டர், பேனர். இதுதான் பிஜிலி ரமேஷின் 360 டிகிரி வாழ்க்கைப்பயணம்.
Bijili-Ramesh

-விளம்பரம்-

சமூக வலைதளங்களில் செல்லக்குட்டியாக வலம் வந்துகொண்டிருக்கும் அவரை பேட்டிக்காக அணுக, அருகே சென்று அறிமுகம் செய்துகொண்டதுதான் தாமதம், “ஆனந்த விகடனா, நான் ஒரு பேட்டி கொடுக்குறேன். போடுவீங்களா’ என அதிர்ச்சி கொடுத்தார். அந்த ப்ராங்க் வீடியோ அவரை பட்டிதொட்டியெங்கும் பிரபலபடுத்தி, எண்ணற்ற ரசிகர்களை சம்பாதித்துக் கொடுத்திருந்தாலும், அதில் சில சங்கடங்களும் அவருக்கு இருக்கின்றன. அதில் முக்கியமான குற்றச்சாட்டாய் அவர் வைத்தது, `தலைவன் வந்தால் தமிழ்நாட்டிலுள்ள எல்லாக் கட்சிகளுக்கும் இருக்கும் ஆப்பு’ என்றே அவர் சொல்லியதாகவும் அதை, `தமிழ்நாட்டுக்கு ஆப்பு’ எனத் தவறாகத் திரித்துவிட்டனர் என்பதும்தான். அவர்கள் கமல் ரசிகர்கள் என்கிற சந்தேகம் தனக்கு இருப்பதாகவும், காசி திரையரங்கில் வைக்கப்பட்ட பேனரைப் பார்த்துவிட்டுதான் தன்னைத் திட்டம்போட்டு வீடியோ எடுத்துவிட்டதாகப் பகீர் கிளப்பினார். `கண்டிப்பா, பேட்டி எடுத்துடலாம்ணே’ என்றதும், `நம்ம ஏரியாவுலதான் எடுக்கணும். ஞாயிற்றுக்கிழமை காலையில வெச்சுக்குவோம்’ என தம்ஸ்-அப் காட்டினார். அவரது உறவினர் வீட்டின் மாடியில், ட்யூஷன் நடைபெறும் இடத்தைப் பேட்டிக்காக ஏற்பாடு செய்துகொடுத்தார்.

`காலா’ கெட்டப்பில் காலை 9 மணிக்கே ஆஜரானவரின் முகத்தில் அப்படியொரு மகிழ்ச்சி. குடும்பத்தினரும் நண்பர்களும் உடன் வந்திருந்தனர், கூடவே சில ரசிகர்களும். செல்ஃபி சம்பிராயதங்களை எல்லாம் முடித்துவிட்டு பேட்டியை ஆரம்பித்தோம். ஃபேன் சத்தம் ரெக்கார்டிங்கிற்கு இடையூறாக இருந்ததால், நிறுத்திவிட்டோம். இரண்டு மணி நேரம் வியர்க்க விறுவிறுக்கத்தான் அந்த அறைக்குள் அமர்ந்து பேட்டி தந்தார். எல்லாக் கேள்விகளுக்கும் அவர் ஸ்டைலில் அத்தனை எனர்ஜியாக பதில் சொல்லிமுடித்தார். ரிப்போர்ட்டராக எனக்கு இதுதான் முதல் வீடியோ இன்டர்வியூ, அது என் முகத்திலேயே தெரியும். ஆனால், கொஞ்சமும் கேமரா பயமின்றி, தயக்கமுமின்றி பேசினார் பிஜிலி ரமேஷ்.

`ஏன் இந்தப் பட்டபெயர், எப்போதிருந்து ரஜினி ரசிகன் ஆனீர்கள், யார் அடுத்த சூப்பர்ஸ்டார்’ என எல்லாக் கேள்விகளுக்கும் பதில் சொல்லிக்கொண்டிருந்தார். நேரில் பேசும்போது, `கமல் ரசிகர்கள்தாம் வீடியோ பண்ணினார்கள்’, `சர்கார்’ போஸ்டரில் என்னை வைத்து எடிட் செய்திருக்கிறார்களெனப் பேசியவர், கேமரா முன் அவரது தலைவர் ரஜினிகாந்தைத் தவிர வேறு யாரைப் பற்றியும், எதுவும் பேச விரும்பவேயில்லை. “பிடித்த விஷயத்தை மட்டும்தான் சொல்லணும், மத்ததை விட்டுத் தள்ளணும்” இதுதான் அவரது பாலிசி! மூச்சுக்கு முந்நூறு முறை `சூப்பர்ஸ்டார், தலைவர், ரஜினிகாந்த்’ என்ற வார்த்தைகள் வந்து விழுகின்றன. தன் உயிரைக் கொடுத்தாவது ரஜினியை ஆட்சியில் அமர்த்துவேன் என்கிறார். தான் புகழடைந்ததுக்குக் காரணம் கூட அவர்தான் என்கிறார். அடுத்த சூப்பர் ஸ்டார் யார் எனும் கேள்வியைக் கேட்டவுடனே `என்னங்க கேள்வி கேட்குறீங்க நீங்க’ என கோபமாகிவிட்டார்.
ramesh

`என்னை ரொம்ப ஓவரா கலாய்ச்சுடாதீங்க’, `நான் பேசினதை மாத்தி எடிட் பண்ணி போட்றாதீங்க’, இவைதான் நமக்கு அவர் வைத்த வேண்டுகோள். வீடியோ வெளியானதும் பலர் `தலைவன் இஸ் பேக்’ எனக் கொண்டாடி மகிழ்ந்தனர். சிலர் `இன்னும் வைத்து செய்திருக்கலாம். சிரிப்பே வரலை’ என்றனர். சிலர் `ஏன் இப்படி ஒரு சாதாரண மனிதனைக் கலாய்க்குறீங்க’ என்றனர். சிலர் ஏழெட்டு தலைமுறையைத் தோண்டி எடுத்து தூற்றுகின்றனர். பிஜிலி ரமேஷும் வீடியோவைப் பார்த்தார், `’மகிழ்ச்சி” என்று போனில் சொன்னார். நீங்களும் மகிழ…

Advertisement