பிஜிலி ரமேஷ் கலக்கும் கோலமாவு கோகிலா `கபீஸ்கபா’ பாடல்..! பாத்து சிரிங்க..! வீடியோ உள்ளே

0
633
bijili-Ramesh

‘அறம்’ படம் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து, நயன்தாரா நடிப்பில் உருவாகிவரும் படம், ‘கோலமாவு கோகிலா’. இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் நெல்சன் திலிப்குமார் இயக்கிவருகிறார்.ஆக்‌ஷன் ட்ராமா ஜானரில் தயாராகியிருக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசைமைக்கிறார்.

- Advertisement -

மேலும், இந்தப் படத்தில் ‘கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஜாக்குலின், நயன்தாராவுக்கு தங்கையாக நடித்துள்ளார். சரண்யா பொன்வண்ணன், யோகிபாபு, ‘விஜய் டி.வி’ புகழ் நிஷா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். லைகா நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துவருகிறது. படத்தின் பணிகள் ஓரளவுக்கு முடிந்துவிட்டன.

இதற்கிடையே, `கோலமாவு கோகிலா’ படத்தின் `கல்யாண வயசு’ பாடல், சமீபத்தில் வெளியாகி அதிரிபுதி ஹிட் அடித்தது. இந்நிலையில், இப்படத்தில் இடம்பெற்றுள்ள மற்றொரு சிங்கிள் டிராக் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. `கபீஸ்கபா’ எனத் தொடங்கும் ஜிப்ரிஷ் பாடலில் யூ- டியூபில் வைரலான பிஜிலி ரமேஷ் நடித்துள்ளார். இந்த வீடியோ, தற்போது வைரலாகிவருகிறது.

-விளம்பரம்-
Advertisement