5 வருடத்திற்கு முன் அஜித் தன்னிடம் பேசிய வீடியோவை வெளியிட்ட பெண் பைக் ரேசர்.! வைரலாகும் வீடியோ.!

0
6357
ajith

தமிழ் திரைப்பட உலகில் சாதனையாளராக, வெற்றியாளராக திகழ்ந்து வருபவர் அல்டிமேட் ஸ்டார் ‘அஜித் குமார்’நடிகர் அஜித் அவர்களுக்கு ரசிகர்கள் பட்டாளத்திற்கு அளவே இல்லை என்று கூட கூறலாம். இதில் அஜித்துடன் ஒரு படமாவது நடிக்க வேண்டும் என பல நடிகைகள் உள்ளனர். அதிலும் அவருடன் நேரில் பார்த்து பேசினால் போதும் என்று கூறும் பிரபலங்கள். இந்த வகையில் முதல் பெண் பைக் ரேஸரும், நடிகையுமான அலிஷா அப்துல்லா ஐந்து வருடங்களுக்கு முன்னால் அஜித் தன்னிடம் கூறிய வார்த்தைகளை வீடியோ பதிவு செய்து தற்போது சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து அலிஷா அப்துல்லா கூறியது, அஜித்திற்கு பைக்ரேஸ் என்றால் ரொம்ப பிடிக்கும். ஐந்து வருடங்களுக்கு முன்னால் தல அஜித் அவர்கள் என்னுடைய சூப்பர் பைக்கை வாங்கி ஓட்டி பார்த்தார் என்று கூறினார். அப்படி ஓட்டும் போது அவர் என்னிடம் ஆல் த பெஸ்ட், டூ வெல் ,பி சேப் என்று பைக்கில் உட்கார்ந்தபடி என்னிடம் கூறினார். இந்த விஷயம் என்னை நெகிழ வைத்தது. மேலும், நான் இந்த அளவிற்கு பைக் ரேஸீர்க்கு வந்ததற்கு காரணம் அஜித் சார் தான். அவர் தான் என்னுடைய இன்ஸ்பிரேஷன் என்றும் கூறினார்.மேலும், என்னுடைய குருநாதர் என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.

இதையும் பாருங்க : பிரேக்கிங் நியூஸ் : மதுமிதா விவகாரத்தில் மனித உரிமை அமைப்பில் வழக்கு பதிவானது.! சிக்கலில் போட்டியாளர்கள்.!

- Advertisement -

அலிஷா அப்துல்லா ஒரு இந்திய பைக் ரேஸ் விளையாட்டு வீரர். இவரே இந்தியாவின் முதல் பெண் பைக் ரேஸரும் ஆவார். இவர் சிறு வயதில் இருந்தே தானுந்து விளையாட்டில் ஆர்வம் கொண்டவர். தன்னுடைய எட்டு வயதில் இருந்தே பயிற்சி பெற்று, இன்று சாதனையும் படைத்துள்ளார். இவர் 2014 ஆம் ஆண்டு தமிழ் திரைப்பட உலகில் இரும்பு குதிரை படத்தின் மூலம் அறிமுகமானார்.

மேலும்,அல்டிமேட் ஸ்டார் அஜித் அவர்களுக்கு நடிப்பை காட்டிலும் பைக் ரேஸ், கார் ரேஸில் தான் ஆர்வம் அதிகம். அவருடைய எல்லா படத்திலும் ஒரு சீனில் ஆவது பைக் ரேஸ் காட்சிகள் எடுக்கப்படும். அந்த வகையில் தற்போது வெளிவந்து சூப்பர் ஹிட்டான நேர்கொண்டபார்வை படத்திலும் ஒரு பைக் ரேஸ் ஸ்டண்ட் காட்சிகள் இருந்தது. அதை தல அஜித் அவர்கள் தான் செய்தார் என்ற தகவலும் வெளிவந்தது. இப்படி அவர் நடிப்பில் காட்டும் அளவிற்கு அதிகமாக பைக் ரேஸில் அதிக ஆர்வம் உடையவர். அதை விடக் கூடாது என்பதற்காகவே தன்னுடைய எல்லா படங்களிலும் அட்லீஸ்ட் ஒரு காட்சியிலாவது பைக் ரேஸ் வைத்து படம் நடித்து வருகிறார் என்று சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.