ஆஸ்கார் விழாவிற்கு பெண் உடையில் வந்த பிரபல ஹாலிவுட் நடிகர்.! கிண்டலடித்து வரும் ரசிகர்கள்.!

0
667
Oscar-2019
- Advertisement -

உலகின் தலை சிறந்த விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருது வழங்கும் விழா மிக கோலாகலமாக கொண்டாடபட்டு வருகிறது. அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இன்று (பிப்ரவரி 25) 91 வது ஆஸ்கார் விருது வழங்கும் விழா நடைபெற்று வருகிறது.

-விளம்பரம்-

லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள பிரபல டால்பின் திரையரங்கில் இந்த விழா நடைபெற்று வருகிறது. இதற்கான முன்னோட்ட நிகழ்ச்சி மற்றும் சிவப்பு கம்பள வரவேற்பு நிகழ்ச்சியில் உலகில் உள்ள பல்வேறு நாடுகளில் இருந்து பல்வேறு கலைஞர்கள் பங்குபெற்றனர்.

- Advertisement -

இந்த சிவப்பு கல்மன வரவேற்பில் பல்வேறு நடிகர் நடிகைகளும் நவ நாகரீக ஆடையில் உலா வந்தனர். அந்த வகையில் பிரபல ஹாலிவுட் பாடகரும் நடிகருமான பில்லி போர்ட்டர் அணிந்து வந்த ஆடை அனைவரது கவனத்தையும் வேடிக்கையாக கவர்ந்தது.

இந்த விழாவில் அவர் பெண்கள் அணியும் ஆடையை அணிந்து வந்தது அனைவரையும் நகைப்பிற்குள்ளாக்கியது. ஆனால், இந்த ஆடையில் மிகவும் வித்யாசமாக உணர்வதாகவும் , இந்த ஆடையை வடிவமைத்து கொடுத்த ஆடை வடிவமைப்பாளருக்கு நன்றி என்று ட்விட்டரில் பதிவிட்டுளளார். ஆனால், இவரது பதிவை பலரும் கிண்டலடித்து வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement