‘இந்தியன் 2’ படம் பார்த்து விரக்தி அடைந்தவர்களுக்கு, அழகு நிலையம் ஒன்று அளித்திருக்கும் சலுகை தான் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவரான கமல்ஹாசன் நடிப்பில் தற்போது வெளியாகியிருக்கும் படம் தான் ‘இந்தியன் 2’. இந்த படத்தை பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கியிருக்கிறார். 28 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த படத்தை மீண்டும் இயக்குனர் சங்கர், கமல் உருவாக்கிருக்கிறார்கள். இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்து இருக்கிறது.
இந்தப் படத்தில் சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், காஜல் அகர்வால், சமுத்திரக்கனி, ஜெகன், பாபி சிம்ஹா உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்திருக்கிறார். ‘இந்தியன்’ படத்தில் சுதந்திர போராட்டத்தில் வெள்ளையர்களை எதிர்த்து போராடிய சுதந்திர வீரர்களில் ஒருவர் சேனாதிபதி. இவர் லஞ்சம் ஊழலுக்கு எதிராக போராடுபவர். தற்போது இரண்டாம் பாகத்தில் சித்தார்த் மற்றும் அவருடைய நண்பர்கள் ஆன ப்ரியா பவானி சங்கர், ஜெகன் ஆகியோர் இணைந்து சமுதாயத்தில் நடக்கும் தவறுகளை தட்டி கேட்கிறார்கள்.
‘இந்தியன் 2’ படம்:
இதற்காக அவர்கள் போராட்டம் செய்கிறார்கள். சித்தார்த் யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். அதில் அவர் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். இருந்தும் ஓர் கட்டத்தில் நம்மால் எதுவும் செய்ய முடியாது, இந்தியன் தாத்தா தான் வர வேண்டும் என்று முடிவு செய்து ‘கம்பேக் இந்தியன்’ என்ற ஹேஷ் டேகை சோசியல் மீடியாவில் வைரலாகுகிறார். மேலும், லஞ்சம் ஊழல் போன்ற விஷயங்களை சேனாபதிக்கு தெரிவிக்கும் வகையில் வீடியோக்களை பதிவிடுகிறார்.
படத்தின் கதை:
உலகில் ஒரு மூலையில் இருக்கும் இந்தியனுக்கு இந்த விஷயம் தெரிய வருகிறது. கடைசியில் அவர் மீண்டும் இந்தியா செல்ல நினைக்கிறார். இந்தியாவிற்கு 28 ஆண்டுகள் கழித்து வரும் சேனாதிபதியை கைது செய்ய வீரசேகரன் என்ற போலீஸ் அலைந்து கொண்டிருக்கிறார். லஞ்சம் ஊழல் செய்பவர்களை விட்டு வைக்க கூடாது என்று சேனாதிபதி மீண்டும் அவதாரம் எடுத்தார். இதனால் சேனாதிபதிக்கு என்னென்ன பிரச்சனைகள் வருகிறது? குற்றவாளிகளை தண்டித்தாரா சேனாதிபதி? கடைசியில் என்ன நடந்தது என்பது தான் மீதிக்கதை. முதல் பாகத்தில் தமிழ்நாட்டில் நடந்த லஞ்சம் மற்றும் ஊழலை இயக்குனர் காட்டியிருந்தாலும், இரண்டாம் பாகத்தில் இந்தியா முழுக்க நடக்கும் ஊழல்களை காட்டி இருக்கிறார்.
நெட்டிசன்கள் கருத்து:
மேலும், இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது. ‘இந்தியன்’ படத்துக்கு கிடைத்த வரவேற்பு ‘இந்தியன் 2’விற்கு கிடைக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். மேலும் இப்படம் சங்கரின் படம் போல் இல்லை என்றும், கமலுக்கு மேக்கப் செய்திருக்கிறார்களே தவிர நடிப்பையே பார்க்க முடியவில்லை என்றும் விமர்சனங்கள் எழுந்தன. அதோடு யாரும் ‘இந்தியன் 2’ படத்திற்கு வராதீர்கள் என்று #Indian2Disaster ஹேஷ் டேகை சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங் செய்திருந்தார்கள் நெட்டிசன்கள்.
சிறுவர் முதல் பெரியவர்கள் வரை காறிதுப்பும் பேண்டவனின் #Indian2 #Indian2Disaster pic.twitter.com/m9DFZTDoL2
— Viju (@Viju16614469) July 13, 2024
அழகு நிலையம் சலுகை:
இந்நிலையில் கரூர் மாவட்டத்தில் இருக்கும் அழகு நிலையம் ஒன்று வினோத அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், தாந்தோணி மலையில் இருக்கும் ‘Studio 9 Family Salon and Bridal Studio’, வில் இந்தியன் 2 படத்துக்கு சென்று மன அழுத்தம் அதிகரித்தவர்களுக்கு, 20% தள்ளுபடியில் ஹெட் மசாஜ் செய்யப்படும் என விசித்திரமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த சலுகையை பெற விரும்பும் நபர்கள் ‘இந்தியன் 2’ படம் பார்த்ததற்கு ஆதாரமாக டிக்கெட்டை எடுத்து வர வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த செய்தி தான் இணையத்தில் பேசும் பொருளாக இருக்கிறது.