இளைய தளபதி விஜய் எப்போது அரசியலுக்கு வருவார் என்று அவரது ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் விஜய்யின் தந்தையும் இயக்குனருமான எஸ் ஏ சந்திரசேகர் இல்லத்திற்கு பி ஜே பி தொண்டர் ஒருவர் காவி வேஷ்டியை பரிசாக அனுப்பியுள்ளார்.
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி நாடுமுழுவதும் தனது பெரும்பான்மையை நிரூபித்து மீண்டும் ஆட்சி அமைத்துள்ளது. இந்த நிலையில் நாளைய சினிமா என்ற குறும்பட விழாவில் பேசிய விஜய்யின் தந்தை எஸ் ஏ சந்திர சேகர், தேர்தல் முடிவுக்கு முன் வெளியான கருத்துக்கணிப்பை வைத்து, தமிழகத்தைப் பொறுத்தவரை தப்பித்துக் கொள்வோம்.
இதையும் படியுங்க : ஒளி ஊடுருவும் ஆடையில் தமன்னா.! கிண்டலடித்து ரசிகர்கள் வைத்த புது பெயர்.!
ஆனால், வெளியில் பொறுத்தரை கண்டிப்பாக தவறு செய்திருப்போம். மக்கள் அனைவரும் காவி வேட்டி கட்டிக்கொண்டு அலையப் போவதாகவும் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், பாஜகவை மறைமுகமாக விமர்சித்திருந்தார். இந்த நிலையில் சந்திர சேகர் வீட்டுக்கு பாஜகவினர் ஒரு பார்சல் ஒன்றை அனுப்பியுள்ளதாகவும், அதில், காவி வேட்டி ஒரு கடிதமும் இருந்துள்ளது.
அதில், பாஜக திருப்பூர் தெற்கு மாவட்ட இளைஞர் அணி என்றும், முதல் தவணையாக காவி வேட்டி அனுப்பியுள்ளோம். இனி ஒவ்வொரு தவணையாக காவி வேட்டி அனுப்பிக் கொண்டே இருப்போம். ஏனென்றால், வாழ்நாள் முழுவதும் காவி வேட்டியே அணிய வேண்டும் என்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்றும் அந்தக் கடிதத்தில்எழுதப்பட்டுள்ளது.
ஏற்கனவே மத்தியில் ஆட்சி அமைத்த பி ஜே பிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். மேலும், சமீபத்தில் கமலுக்கு, மோடியின் பதிவு ஏற்பு விழாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் விஜய்யின் தந்தைக்கு இப்படி ஒரு பரிசு சென்றுள்ளதால் எங்கே விஜய் குடும்பமும் பி ஜே பிக்கு ஆதரவு தெரிவித்து விடுமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.