குஜராத்தின் மோர்பி பாலம் இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்துக்கு இவர்கள் தான் காரணம் – காயத்ரி ரகுராம் பகிர்ந்த வீடியோ.

0
406
gayathri
- Advertisement -

குஜராத்தின் மோர்பி பாலம் இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்து குறித்து பாஜகவின் ரகுராம் காயத்ரி வெளியிட்டிருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. குஜராத் மாநிலம் மோர்பி நகரில் மிகப் பழமையான கேபிள் பாலம் ஒன்று இருக்கிறது. இது ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டது. இது 140 ஆண்டுகள் பழமையானது என்று சொல்லப்படுகிறது. இந்த கேபிள் பாலத்தை அந்த மாநில அரசு சமீபத்தில் தான் புரனமைத்து கடந்த 26 ஆம் தேதி மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்திருந்தார்கள்.

-விளம்பரம்-

இந்த நிலையில் நேற்று புதிதாக திறக்கப்பட்ட பாலத்தை சுற்றி பார்க்க மக்கள் கூட்டம் குவிந்து இருந்தது. சுமார் 500க்கும் அதிகமான மக்கள் பாலத்தை பார்க்க வந்திருந்தனர். இந்த நிலையில் திடீரென பாலம் அறுந்து விழுந்து இருக்கிறது. இதில் 350 பேர் ஆற்றில் விழுந்து இருக்கின்றனர். விபத்து ஏற்பட்டதை அடுத்து தகவல் அறிந்த போலீஸ் காவல்துறையினர் மற்றும் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்து மக்களை மீட்கும் முயற்சியில் இறங்கி இருந்தார்கள்.

- Advertisement -

மோர்பி பாலம் இடிந்து விழுந்த சம்பவம்:

ஆனால், சம்பவம் நடந்த இடத்தில் ஒரு சில மணி நேரத்திலேயே 97 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். நேற்று இரவு தொடங்கிய மீட்பு பணி தற்போது வரை நடைபெற்று வருகிறது. இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 141 ஆக அதிகரித்து இருக்கிறது. தற்போது இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும், தேர்தல் பரப்புரைக்காக குஜராத் சென்ற பிரதமர் மோடியும் இன்று நடக்க இருந்த எல்லா நிகழ்ச்சிகளையும் ரத்து செய்து இருக்கிறார்.

விபத்துக்கு காரணம்:

இதனை அடுத்து விபத்துக்கான காரணம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆறு மாதமாக புரனமைக்கப்பட்ட பாலம் நான்கே நாட்களில் எப்படி விழுந்து விபத்தில் சிக்கியது? என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் 140 ஆண்டுகள் பழமையான இந்த தொங்கும் பாலத்தை புரனமைத்து மறுபயன் பாட்டுக்கு திறப்பதற்கு முன்பு எந்த ஒரு தணிக்கை நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்றும், பாலம் திறக்கப்படுவதற்கு முன்பு நகராட்சி நிர்வாகத்திடம் உரிய அனுமதி பெறவில்லை என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது.

-விளம்பரம்-

காயத்ரி ரகுராம் ட்விட்:

அதோடு குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலை கருத்தில் கொண்டு தான் இந்த பாலம் சீக்கிரமாக திறக்கப்பட்டதாகவும் ஒரு சிலர் கூறி வருகின்றனர். இந்த நிலையில் பாலம் இடிந்து விழுவதற்கு முன்னர் அப்பாலத்தில் சிலர் அட்டகாசம் செய்வது போன்ற வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதை பாஜக உறுப்பினர் காயத்ரி ரகுராம் ட்விட்டரில் பகிர்ந்து, உபிஸ் எப்பொழுது குஜராத் சென்றார்? நூற்றுக்கும் மேற்பட்டோர் இறந்தது வருத்தத்தை அளிக்கிறது.

உயிரிழப்புக்கு யார் காரணம்?

ஆனால், அவர்களின் உயிரிழப்புக்கு யார் காரணம்? பாலத்தை சேதப்படுத்தவும் பொதுமக்களா? அல்லது பாலம் மோசமாக கட்டப்பட்டதா? முடிவில் பல உயிர்கள் இறந்தன. இதனை யாராலும் ஈடு செய்ய முடியாது என்று கூறி இருக்கிறார். தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்தவர் காயத்ரி. இவர் பிரபல டான்ஸ் மாஸ்டர் ரகுராமின் மகள் ஆவார். தற்போது இவர் சினிமாவில் இருந்து விலகி பாஜக கட்சியில் அதிக தீவிரம் காட்டி வருகிறார்.

Advertisement