வேல் யாத்திரைக்கு சென்ற குஷ்பூவின் கார் மீது லாரி மோதி விபத்து.

0
824
kushboo
- Advertisement -

தமிழகத்தில் தடையை மீறி கட்சியினர் வேல் யாத்திரையை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் இந்த யாத்திரைக்கு அனுமதி கேட்டு கடலூர் பாஜக சார்பில் மாவட்ட கண்காணிப்பாளரிடம் மனு அளிக்கப்பட்டு இருந்தது. ஆனால், வேல் யாத்திரைக்கு போலீசார் அனுமதி மறுத்த நிலையில் தடையை மீறி வேல் யாத்திரை செல்வோர் கைது செய்யப்படுவார்கள் என்று கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்தும் இருந்தார். ஆனால், தடையை மீறி யாத்திரை நடைபெறும் என்றும் போலீசாரின் நடவடிக்கையை எதிர்கொள்வோம் என்றும் பாஜக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் இந்த வேல் யாத்திரையில் கலந்து கொள்ள இன்று (நவம்பர் 18), சமீபத்தில் பாஜகவில் இணைந்த குஷ்பு காரில் பயணித்தார். அப்போது மேல்மருவத்தூர் அருகே அவருடைய கார் விபத்தில் சிக்கியது. அவர் சென்று கொண்டு இருந்த கண்டைனர் லாரி மீது கார் மோதியதில் அவரது காரின் பின்புறம் மிகுந்த செத்தமடைந்த்து. இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை.

- Advertisement -

இந்த விபத்து குறித்து பேசியுள்ள குஷ்பூ. இது தன்னை குறி வைத்து நடத்தப்பட்ட விபத்து என்று கூறியுள்ளார். அதே போல இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள குஷ்பூ “மேல்மருவத்தூர் அருகே ஒரு கன்டெய்னர் லாரி எங்கள் கார் மீது மோதியது. உங்கள் அனைவரின் ஆசீர்வாதத்தாலும், இறையருளாலும் நான் பத்திரமாக உள்ளேன். கடலூர் வேல் யாத்திரைக்கான பயணம் தொடர்கிறது. காவல்துறையினர் விசாரிக்கின்றனர். முருகக் கடவுள் எங்களைக் காப்பாற்றிவிட்டார். என் கணவர் முருக பக்தர். அவர் நம்பிக்கையின் பலனை நான் இன்று கண்டுகொண்டேன்.

ஊடகங்கள் தகவலை சரியாகப் புரிந்துகொள்ள வேண்டுகிறேன். எனது கார் சரியான பாதையில்தான் பயணித்தது. கன்டெய்னர் லாரி வந்த திசை எங்களுக்குத் தெரியவில்லை. அந்த வாகனமே எங்களின் கார் மீது மோதியது. போலீஸார் இந்த விபத்தில் ஏதேனும் சதி உள்ளதா என்பது குறித்து லாரி ஓட்டுநரிடம் விசாரித்து வருகின்றனர்” என்று கூறியுள்ளார். இந்த விபத்தை அடுத்து பலரும் குஷ்பூவை நலம் விசாரித்து வருகின்றனர். இந்த விபத்து தொடர்பாகக் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

-விளம்பரம்-
Advertisement