தேர்தலுக்கு முன், தேர்தலுக்கு பின் – தொகுதி பக்கம் போகாத குஷ்புவை கேலி செய்த நபர் – குஷ்பூவின் அசர வைக்கும் பதில்.

0
326
kushboo
- Advertisement -

தமிழக பா.ஜ.க-வில், நடிகை நமீதா, காயத்ரி ரகுராம், சின்னத்திரை நடிகை ஜெயலட்சுமி, இயக்குநர் பேரரசு, இசையமைப்பாளர்கள் தீனா, பரத்வாஜ், தயாரிப்பாளர் அழகன் தமிழ்மணி, ஃபெப்சி சிவா என தமிழ்த் திரையுலகைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை கணிசமாக இருந்து வருகிறது. அதில் லேட்டஸ்ட்டாக கட்சியில் சேர்த்தவர் குஷ்பூ தான். பா ஜ காவில் இணைவதற்கு முன்பாக நடிகை குஷ்பூ , காங்கிரஸ் கட்சியில் தான் இருந்தார். ஆனால், இவர் அந்த கட்சியில் இருந்து பிரிந்து பா ஜ கவில் இணைந்த சில மாதங்களிலேயே இவருக்கு அந்த கட்சியில் சீட்டு வழங்கப்பட்டது.

-விளம்பரம்-

சமீபத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் பா ஜ க சார்பாக சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் போட்டியிட்டார் குஷ்பூ. இத்னால் ஆயிரம் விளக்குப்பகுதியில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு இருந்தார். ஆனால், இந்த தொகுதியில் போட்டியிட்ட தி மு க வேட்பாளர் எழிலன் 33,044 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இருப்பினும் இந்த தொகுதியில் 38,493 வாக்குகளை பெற்றார் குஷ்பூ.

இதையும் பாருங்க : பிறந்து இரண்டு வாரத்தில் இறந்த மூத்த மகள், தற்போது நெடு நெடுவென வளர்ந்துவிட்ட இரண்டாம் மகள் – கின்னஸ் பக்ருவின் அழகிய குடும்பம்.

- Advertisement -

இந்த நிலையில் சென்னை மழையால் பாதிக்கப்பட்டுள்ள தான் போட்டியிட்ட தொகுதி மக்களை ஏன் சந்திக்கவில்லை என்று ட்விட்டர் வாசி ஒருவர் கேலி செய்து புகைப்படம் ஒன்றை பகிர்ந்து இருந்தார். இதுகுறித்து ட்விட்டர் வாசி பகிர்ந்த புகைப்படத்தில் நடிகை குஷ்பூ, தேர்தலின் போது பிரச்சாரம் மேற்கொண்ட புகைப்படத்தை ‘தேர்தலுக்கு முன்’ என்று பதிவிடும்.

மேலும், நேற்று குஷ்பூ பகிர்ந்த சில செல்ஃபீ புகைப்படங்களை பதிவிட்டு அதில் ‘தேர்தலுக்கு பின் ‘ என்று குறிப்பிட்டும் பதிவிட்டதோடு ‘என்ன அக்கா இந்த பாட்டிம்மா ஏரியால மழையாமே?’ என்று அந்த ட்விட்டர் வாசி குஷ்பூவை டேக் செய்துள்ளார்.இதற்கு பதிலடி கொடுத்துள்ள குஷ்பூ ‘தம்பி ஊருக்கு புதுசா ? தேர்தல் எல்லாம் ஆறு மாதத்திற்கு முன்பே முடிந்துவிட்டது. நான் என்ன செய்கிறேன் எப்படி செய்கிறேன் என்று மற்றவர்கள் தெரிந்து கொள்வதற்காக செய்யமாட்டேன். என்னுடைய கடமை எனக்கு தெரியும். அதை நான் செய்வேன்.

-விளம்பரம்-

சும்மா அமர்ந்துகொண்டு போனில் கேள்விகளை கேட்பதால் உங்கள் கடமை முடிந்துவிட்டது என்று நினைக்கிறீர்களா ? என்ன ஒரு அசிங்கம். உங்களுக்கும் குடும்பம் இருக்கும் என்று நம்புகிறேன். நான் ஏன் தொகுதியில் இல்லை என்று சில முட்டாள்கள் கேள்வி கேட்பார்கள். உதவி தேவைப்படுபவர்களுக்கு உதவி செய்ய நான் நேரில் சென்று தான் செய்ய வேண்டும் என்று அவசியம் இல்லை. எனக்கு என்று ஒரு குழு இருக்கிறது, அவர்கள் செய்து விடுவார்கள். நான் மீண்டும் வந்ததும் அவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்வோன். எனவே, சும்மா ஒக்காந்து ஃபோனை நோண்டிக்கொண்டு இருங்கள் என்று கூறியுள்ளார்.

Advertisement