‘இதன் ரகசியம் என்ன ?’ – குஷ்பூவின் Transformationaஐ கண்டு Bjp பிரபலம் போட்ட ட்வீட். குஷ்பூவின் Reaction

0
478
kushboo
- Advertisement -

குஷ்பூ பதிவிட்ட புகைப்படத்திற்கு ரசிகர் போட்ட கமெண்டிற்க்கு குஷ்பூ பதிலடி கொடுத்துள்ளார். தமிழ் சினிமா உலகில் 90 காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர் நடிகை குஷ்பு. இவர் நடிகை மட்டுமில்லாமல் தயாரிப்பாளர், தொகுப்பாளர், அரசியல்வாதி என பன்முகம் கொண்டு திகழ்கிறார். இவர் 1980களில் குழந்தை நட்சத்திரமாக தன்னுடைய திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார். பின் 1989 ஆம் ஆண்டு வருஷம் 16 என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார்.

-விளம்பரம்-

சமீப காலமாக கொஞ்சம் குண்டாக இருந்த குஷ்பூ சமீபத்தில் உடல் எடை குறைத்து படு ஸ்லிம்மாக மாறி இருந்தார். குஷ்பூவின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பதிவிட பலரும் வியந்து போனார்கள். அதிலும் ஒரு ரசிகர், ஒருவர் குஷ்பூவை திருமணம் செய்துகொள்ள விரும்புவதாக கூறி கமன்ட் செய்தார். அதற்கு குஷ்பூ, நீங்க ரொம்ப லேட், என் கணவர் சம்மதிக்க மாட்டார் என்று மிகவும் கூலாக பதில் அளித்து இருந்தார்.

இதையும் பாருங்க : ‘கோபி அத்தான் is back’ – புது சீரியலை தொடங்கும் திருமுருகன். வாய்ப்பு தேடும் நபர்களுக்கு கொடுத்த சர்ப்ரைஸ்

- Advertisement -

குஷ்பூவின் Transformation :

இப்படி குஷ்பூவின் transformation-ஐ பார்த்து பலர் பாராட்டி வந்த நிலையில் குஷ்பூவின் இந்த பதிவிற்கு சில ட்ரோல் கமன்ட்டுகளும் வந்தது. அந்த வகையில் குஷ்பூயின் இந்த புகைப்படத்திற்கு ட்விட்டர் வாசி ஒருவர், இது ஒன்னும் கிடையாது. ஆனால், தற்போது உள்ள காலகட்டத்தில் போட்டோ எடிட்டில் எதுவும் சாத்தியம் தான் என்பதற்கு இது உதாரணம் என்று பதிவிட்டு இருந்தார். இதற்கும் கூலாக பதில் அளித்த குஷ்பூ

Bjp பிரபலம் போட்ட டீவ்ட் :

சில முட்டாள்கள் எப்படி எதிர்மறை மற்றும் தாழ்வு மனப்பான்மையால் நிரப்பப்படுகிறார்கள் என்பதற்கு நீங்கள் ஒரு சிறந்த உதாரணத்தை அமைத்துள்ளீர்கள் என்று நச் என்று தன்னை கேலி செய்தவர் பாணியிலேயே பதிலடி கொடுத்துள்ளார். இப்படி ஒரு நிலையில்  பாஜக மாநிலப் பொருளாளர் எஸ். ஆர் சேகர் குஷ்பூவின் புகைப்படத்தை கண்டு அவரின் Transformation ரகசியம் குறித்து கேட்டு இருக்கிறார்.

-விளம்பரம்-

குஷ்பூவின் பதில் :

அதில் ‘உலகப் பெண்களுக்கு குறிப்பாக தமிழ்ப்பெண்களுக்கு உங்களிடம் புதைத்து வைத்திருக்கும் ஒரே ஒரு உண்மையை மட்டும் சொல்லமுடியுமா? உங்களுக்கு வருடங்கள் ஓட ஓட வயது குறைகிறதே? இதன் ரகசியம் என்ன? சொன்னால் எத்தனை பெண்கள் மகிழ்ச்சி அடைவர் பயன்பெறுவர் கணவன்மார்கள் சந்தோஷம் அடைவர் சொல்வீர்களா?’ என்று பதிவிட்டு இருந்தார். இதற்கு குஷ்பூ ‘ஹாஹா சார் ‘ என்று கையெடுத்து கும்பிட்டு இருக்கிறார்.

ஒரே பொண்டாட்டி :

அதே போல ரசிகர் ஒருவர் குஷ்பூவின் புகைப்படத்தை பார்த்து ‘இது குஷ்பூன்னு சொன்னா சுந்தர் சி கூட நம்ப மாட்டார்’ என்று பதிவிட்டு இருந்த மீம் ஒன்றை பகிர்ந்து இருந்தார். இதற்கு பதில் அளித்த குஷ்பு ‘ஹாஹா ஒரே பொண்டாட்டி நம்பித்தான் ஆகணும்’ என்று பதில் அளித்துள்ளார்.

Advertisement