பாதயாத்திரையில் சொதப்பிய பாஜகவினர். பாஜகவினரிடம் ஆதங்கத்தை வெளிப்படுத்திய அண்ணாமலை.  

0
1538
- Advertisement -

தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் “என் மண் என் மக்கள்” பாதயாத்திரையில் முதல் கட்டதை நிறைவடைந்தநிலையில் பாஜக நிர்வாகிகள் மீது அண்ணாமலை அதிரிப்தியை வெளிப்படுத்தி இருந்தார். தான் கூறிய ஏதும் நடைபயணத்தில் நடைபெறவில்லை என்றும் ஆதங்கம் தெரிவித்து இருந்தார். ஜூலை 28 அன்று தொடங்கபட்ட பாதயாத்திரை பல்வேறு கட்டங்களாக நடைபெற்ற உள்ளது.

-விளம்பரம்-

பாதயாத்திரை:

தற்போது தமிழக பிஜேபியின் மாநில தலைவர் தமிழகத்தில் “என் மண் என் மக்கள்” என்ற தலைப்பில் பாதயாத்திரையை நடத்தி வருகிறது. இந்த பாதயாத்திரையானது ஜூலை 27 அன்று ராமேஸ்வரத்தில் மத்திய உள்துறை அமைச்சர்  அமித்ஷா பாதயாத்திரையை தொடங்கி வைத்தார். இது இந்த மண்ணோடும் மக்களோடும் இதயத்தோடு இதயமாக நின்று உறவாடும் ஒரு நடை பயணம். என் மண், என் மக்கள் என்று அமித்ஷா  குறிப்பிட்டிருந்தார். 6 மாதங்கள் நடைபெறும் இந்த பாதயாத்திரையில் அண்ணாமலை 225 ஊர்களில் மக்களை சந்திக்க உள்ளார்.

- Advertisement -

மேலும் இதில் தொடக்க நாளில் கலந்து கொண்டு பாதயாத்திரை தொடங்கி வைத்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஊழல்வாதிகள் ஒன்று சேர்ந்து கூட்டணி வைத்துள்ளனர் என்றும், திமுக காங்கிரஸ் ஒட்டு கேட்டு வந்தால் அவர்களுக்கு 2ஜி ஊழல் நிலக்கரி பற்றி தான் அவர்களுக்கு நியாபகம் வர வேண்டும் என்று கூறி அவர்களுக்கு நியாபகம் வர வேண்டும் என்று கூறி அவர் பாதயாத்திரை தொடங்கி வைத்தார்.

அண்ணாமலையின் கோபம்:

இந்த பாதயாத்திரையில் அவருக்காக தயார் செய்ய பட்டு இருந்த பிரசாரவாகனம் பெரும் பேசும் பொருளாக மாறியது. அதில் அவருக்கு பற்பல வசதிகளும் செய்யப் பட்டுளதாலும் அவர் சில கி.மி மட்டும் தான் நடந்து செல்வதாகவும் அதன் பின் அந்த வாகனத்தில் பயணிப்பதாகவும் பலரும் விமர்சித்து வந்தனர். அண்ணாமலை தற்போது முதல் கட்ட யாத்திரையை நிறைவு செய்து 10 நாட்கள் ஓய்வு பெற்று வருகிறார். தனது பாதயாத்திரை சரியாக நடைபெறவில்லை என்று சற்று ஆதங்கத்தில் இருந்து வருகிறாராம்.

-விளம்பரம்-

டெல்லியில் இருந்து அண்ணாமலையிடம் கேள்வி கேட்டு வருகிறார்களாம். இதுகுறித்து தனது குழுவிடம் ஆதங்கத்தை வெளிப்படுத்திய போது இந்த பயணத்தின் போது உறுப்பினர்களை சேர்க்க சொன்னேன். ஆனால் அந்த நடவடிக்கை எடுத்து எடுக்கவில்லை. மத்திய அரசின் திட்டங்களை பற்றியும் பிரச்சாரம் செய்ய சொன்னேன் அதுவும் நீங்கள் செய்யவில்லை. தற்போது டெல்லியின் பார்வையில் நான் எது சும்மா அலப்பறை செய்தது போல் ஆகிவிட்டது. இனி இது போன்ற குறைகள் எடுத்துக் கட்ட யாத்திரையின் நடவடிக்கைகள் இருக்கக் கூடாது என்றும் கடுமையாக எச்சரித்துள்ளார் பாஜக அண்ணாமலை.  

Advertisement