உங்களுக்கு முடிவெட்ட முடியாது, ஊர் கட்டுப்பாடுன்னு சொன்னாரு – பாதிக்கப்பட் தந்தை வேதனையுடன் பேட்டி.

0
468
- Advertisement -

நாமக்கல் மாவட்டத்தில் சிறுவனுக்கு சலூன் கடைக்காரர் முடிவெட்ட மறுத்திருக்கும் விவகாரம் தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. நாமக்கல் மாவட்டம் திருமலை பட்டி பகுதியில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. சிறுவன் ஒருவரை அவருடைய தந்தை முடிவெட்ட சலூன் கடைக்கு அழைத்து சென்றிருக்கிறார். அங்கு சலூன் கடைக்காரர், தாழ்த்தப்பட்டவர்களுக்கெல்லாம் முடி வெட்ட முடியாது.

-விளம்பரம்-

இது ஊர் பஞ்சாயத்தினுடைய கட்டுப்பாடு என்று கூறியிருக்கிறார். உடனே அந்த சிறுவனின் பெற்றோர், ஏன் இப்படி முடி வெட்டுவதற்கு எல்லாம் ஜாதி பார்க்கிறீர்கள்? இதெல்லாம் ஒரு கட்டுப்பாடா? என்று பேசி இருக்கிறார். இருந்தாலும், அந்த சலூன் கடைக்காரர் முடி வெட்டமறுத்து, நீங்கள் எங்கு வேண்டுமானாலும் பேசுங்கள். போலீசில் கூட புகார் கொடுங்கள் எனக்கு அதைப் பற்றி கவலை இல்லை. ஊருக்கு தான் கட்டுப்பட்டு இருக்க முடியும் என்று சொல்லி இருக்கிறார்.

- Advertisement -

நாமக்கல் சம்பவம்:

இதை அடுத்து சிறுவனின் பெற்றோர் போலீசில் சலூன் கடைக்காரர் மீது புகார் அளித்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் செய்தியாளர்களை சந்தித்து, என்னுடைய பெயர் அருண். நான் நாமக்கல் மாவட்டம் சேர்ந்தவன். தாழ்த்தப்பட்டவர்கள் என்று சலூன் கடையில் முடி வெட்ட மறுக்கிறார்கள். இந்த காலத்திலும் இதை பின்பற்றுவது நினைத்தால் கஷ்டமாக இருக்கிறது. இது எல்லாம் எங்களுடைய முன்னோர்கள் காலத்தில் இருந்தது. ஆனால், இப்போதும் இதை பின்பற்றுகிறார்கள்.

சிறுவன் தந்தை அளித்த பேட்டி:

மேலும், என்னுடைய இரண்டு மகன்களையும் முடிவெட்ட அனுப்பிவிட்டேன். வெளியில் போகிறோம் கடை லீவு என்று சொல்லி அனுப்பி விட்டார்கள். பின் சாயங்காலம் சென்று பார்த்தல் கடை திறந்து இருந்தது. முடி வெட்டுங்கள் என்று கேட்டதற்கு உங்களுடைய ஜாதிக்கெல்லாம் முடிவெட்ட முடியாது. இது பஞ்சாயத்து கட்டுப்பாடு என்று சொல்கிறார். இப்படி சிறுவனிடம் சொன்னால் அந்தப் பையன் என்ன நினைப்பான். சின்ன வயதிலேயே அவனுக்கு தீண்டாமை குறித்த எண்ணம் உருவாகும்.

-விளம்பரம்-

நெட்டிசன்கள் பதிவு:

இது குறித்து நான் சலூன் கடைக்காரர் மற்றும் பஞ்சாயத்து மீதும் போலீசில் புகார் கொடுத்திருக்கிறேன். ஊடகம் எனக்கு ஆதரவாக நிற்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். தற்போது இந்த சம்பவம் தான் சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. பலரும் சிறுவனுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார்கள். இதை அடுத்து அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். மேலும் இது தொடர்பாக கபிலன் ஒருவன் பதிவு ஒன்று போட்டு இருக்கிறார்.

கபிலன் பதிவு:

அதில் அவர், தாழ்த்தப்பட்டவர் என காரணம் காட்டி ஒரு சிறுவனுக்கு முடி வெட்ட மறுத்த சலூன் கடைக்காரரிடம் சென்று கேள்வி எழுப்பிய நபர்களிடம், இது பஞ்சாயத்து தீர்ப்பு, நாங்க அவங்கள தொடக்கூடாது என பதிலளித்திருக்கிறார் ஒரு சலூன் கடைக்காரர், ஜாதி சிக்கலை இன்னமும் நம்மால் தீர்க்க முடியலை ஜாதி ஒழிப்பு பேசினாலும் அந்த கட்சியை மக்கள் ஒதுக்கிடுறாங்க, இந்த சம்பவமும் நாமக்கல் மாவட்டத்தில் தான் நடந்திருக்கிறது. சமூக நீதி ஜாதி ஒழிப்பு என்று பேசுவது ஒரு கண்துடைப்பு பிரச்சாரமாக இருக்க கூடாது என்பதில் நாம் இன்னமும் உறுதியாக இருக்க வேண்டும். அந்த பஞ்சாயத்து மற்றும் கடைக்காரர் மீது மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருக்கிறார்.

Advertisement