எனக்கு ஏன் ‘சல்யூட்’ அடிக்கல, ‘சல்யூட்’ அடிங்க – போலீசிடம் தீனா பட வில்லன் நடந்து கொண்ட விதத்தால் சர்ச்சை. வீடியோ இதோ.

0
3378
suresh
- Advertisement -

மலையாளத்தில் மிக பிரபலமான நடிகராக இருப்பவர் சுரேஷ்கோபி. தற்போது இவருக்கு போலீஸ் சல்யூட் வைக்கவில்லை என்ற சர்ச்சையில் சிக்கியுள்ள தகவல் சோசியல் மீடியாவில் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. கேரளாவில் பாஜக மாநிலங்களவை எம்பி ஆக இருப்பவர் பிரபல நடிகர் சுரேஷ்கோபி. இவர் திருச்சூர் மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட புத்தூர் கிராமத்தை பார்வையிட நேற்று சென்றிருந்தார். அப்போது அங்கு ஒரு ஜீப்பில் போலீசார் அமர்ந்திருந்தார்.

-விளம்பரம்-

போலீசார் நடிகர் சுரேஷ்கோபியை கண்டுகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. உடனே அங்கிருந்த சப் இன்ஸ்பெக்டரிடம் நான் ஒன்றும் மேயர் அல்ல எம்பி எனக்கு ஏன் ‘சல்யூட்’ வைக்கவில்லை. நீங்கள் சல்யூட் வைக்க வேண்டும் என்று கலாட்டா செய்துள்ளார். இது தொடர்பான வீடியோ செய்தி சேனல்களில் வெளியானதால் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து சுரேஷ் கோபி அவர்கள் கூறியது, நான் அந்த சப்-இன்ஸ்பெக்டரை சார் என்று மரியாதையாய் அழைத்தேன். எம்பியான எனக்கு சல்யூட் வைக்கலாமே என்று மென்மையாகத்தான் கூறினேன் என்று தெரிவித்துள்ளார்.

இதையும் பாருங்க : அண்ணா பிறந்தநாளில் விஜய் ரசிகர்கள் ஒட்டிய அலப்பறையான போஸ்டர் – வச்சி செய்யும் நெட்டிசன்கள்.

- Advertisement -

இதுதொடர்பாக கேரள போலீஸ் அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது என்னவென்றால், சட்டபூர்வமாக தகுதி வாய்ந்தவர்களுக்கு தான் சல்யூட் வைப்பது போலீஸின் வழக்கம். எம்பி, எம்எல்ஏக்கள் அந்த பட்டியலின் கீழ் வரமாட்டார்கள் என்றாலும் ஒரு மரியாதை அடிப்படையில் அவர்களுக்கு போலீசார் வணக்கம் செலுத்துவது வழக்கம் என்று ஒரு போலீஸ் அதிகாரி கூறியுள்ளார்.

மேலும் இந்த ஆண்டு ஜூலையில் திருச்சூர் மாநகராட்சி மேயர் எம் கே வர்கீஸ் தங்களுக்கு போலீசார் சல்யூட் வைக்க வேண்டும் என்று மாநில டிஜிபியிடம் கோரிக்கை விடுத்துள்ளார் என்று தெரியவந்து உள்ளது. நடிகர் சுரேஷ்கோபி பல திரைப்படங்களில் அதிரடியான போலீஸ் அதிகாரி வேடங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement