கமல் அப்படி என்ன சொன்னார்? கோவத்தில் கமலை பைத்தியம் என்று சொன்ன தலைவர் !

0
1171
kamal - Vinay Katiyar
- Advertisement -

கமல் அரசியல் களத்திற்கு வருவது உறுதியாகியுள்ள நிலையில், எப்போதும் ட்விட்டரில் அரசியல் பேசும் அவர் தற்போது நேரடியாக களத்தில் இறங்கியுள்ளார். சில நாட்களுக்கு முன்னர் கூட சென்னை என்னூர் துறைமுகத்தின் கழிமுகத்தை பார்வையிட்டு அதில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்ய மாவட்ட ஆட்சியரிடம் வேண்டுகோள் வைத்தார்.
kamal
பொதுவாக தன்னை இடதுசாரியாக காட்டிக்கொள்கிறார் கமல். மேலும் பெரியாரியக் கொள்கையிலும் ஊறிப்போனவர், என் நிறம் கருப்பு தான் என நிறைய இடங்களில் குறிப்பிட்டுள்ளார்.

-விளம்பரம்-

சமீபத்தில் அவர் வார இதழுக்கு இந்திய அரசியல் பற்றி ஒரு கட்டூரை எழுதி வருகிறார். அந்த கட்டூரையில், வலது சாரியிலும் (இந்து-இந்துத்துவம்) தீவிரவாதம் இருக்கிறது. பழமை வாதிகள் மற்றும் மதக்கோட்பாடுகளை தூக்கிப்பிடிக்கும் அவர்கள் அந்த காலத்தில் வாதத்தின் மூலம் பிரிவியனையை ஏற்ப்படுத்தி ஜாதியின் மூலம் பிரித்து சண்டைகளை ஏற்ப்படுத்தி வந்தனர்.

- Advertisement -

ஆனால், தற்போது அதே கோட்பாடுகளை நவீனப்படுத்தி, பழமை, பண்டிகை, இறை வழபாடு, ஜாதி வித்யாசம் என அவற்றை பற்றி போதித்து அதே போல் பிரச்சனைகள் மற்றும் வன்முறைகளை ஏற்ப்படுத்த துவங்கி விட்டனர்.
kamal
தற்போது ‘எங்கே ஒரு இந்து தீவிரவாதியைக் காட்டுங்கள் என்று கூற முடியாத அளவிற்கு அவர்களின் கூட்டத்திலும் (இந்துத்துவா) தீவிரவாதம் பரவியுள்ளது.என அந்த வார இதழில் எழுதியுள்ளார்.இந்த கருத்து தற்போது பல்வேறு இந்துத்துவ அமைப்புகளின் கண்டனத்திற்கு ஆளாகி வருகிறது.

மேலும், கமலின் இந்த கருத்துக்கு பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த தலைவர் ‘வினய் கட்டியர்’ கண்டனத்தை தெரிவித்துள்ளார். மேலும் இந்த கருத்துக்கு கமல் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும், ஒரு இந்துவாக இருந்துவிட்டு தனது மதத்தைப் பற்றி இழிவாக பேசிய அவருக்கு மனநிலை சரியில்லை, அவரை மருத்துவமனையில் சேர்க்கவேண்டும் எனக் கூறியுள்ளார்.

-விளம்பரம்-

vinay katiyar

கமல், தான் எந்த மதத்தைச் சேர்ந்தவனும் இல்லை, நான் ஒரு நாத்திகன், பகுத்தறிவாளன் என பலமுறை குறிப்பிட்டது இங்கு நினைவுகூறத்தக்கது.

Advertisement