இந்தியாவிலே ரெண்டே ரெண்டு அக்யூஸ்ட், ஒண்ணு மோடி ஜி! ஒண்ணு அமித்ஷா – ராதாரவி பேச்சால் ஷாக்கான Bjp தொண்டர்கள்.

0
583
radharavi
- Advertisement -

இந்தியாவில் ரெண்டே ரெண்டு அக்யூஸ்ட்கள் இருக்கிறார்கள் என்று ராதாரவி கூறியிருக்கும் கருத்து தற்போது சோஷியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை எழுப்பி இருக்கிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்பவர் ராதாரவி. இவர் பெரும்பாலும் படங்களில் வில்லன், குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். அதேபோல் இவர் அரசியலிலும் அதிக தீவிரம் காட்டி வருகிறார். இந்த நிலையில் தேர்தல் வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை என்றும், அதை நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் பாஜக சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

-விளம்பரம்-

சென்னையில் 7 இடங்களில் உண்ணாவிரத போராட்டம் நடத்த பாஜக திட்டமிட்டு இருந்தது. வடசென்னை மாவட்டத்தில் கொளத்தூர் தொகுதியில் உண்ணாவிரதம் இருக்க பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை திட்டமிட்டு இருந்தார். ஆனால் அங்கு உண்ணாவிரத போராட்டம் நடத்த போலீஸ் தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பா.ஜ.க சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. அதேபோல, தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

- Advertisement -

இதையும் பாருங்க : பாலியல் தொல்லை கொடுத்து கொலைவெறி தாக்குதல் செய்த மாமனார் – புகார் அளித்த அண்ணத்தே, ET பட நடிகை.

பா.ஜ.க சார்பில் உண்ணாவிரதப் போராட்டம்:

திருநெல்வேலியில் நயினார் நாகேந்திரன், திருச்சியில் பொன்.ராதாகிருஷ்ணன், கோவையில் வானதி ஸ்ரீனிவாசன், சி.பி.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். மேலும், சென்னையில் வள்ளுவர் கோட்டத்தில் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் நடிகர் ராதாரவி கலந்து கொண்டார். அப்போது அவர் கூட்டத்தில் பேசியிருந்தது, தற்போது நாடாளுமன்றத் தேர்தலிலும் சட்டசபைத் தேர்தலிலும் பாஜகவா? திமுகவா? எனும் நிலை வரும்.

-விளம்பரம்-

ராதாரவி பேசியது:

2024 ஆம் ஆண்டு நடைபெறும் எம்பி தேர்தலில் பாஜகவே வென்று மத்தியில் ஆட்சி செய்யும். மகாராஷ்டிராவில் ஆட்சி கவிழ்ந்தது போல தமிழகத்திலும் வரும். அதிமுகவில் இருந்தவர்களுக்கு அமைச்சர் பதவி கொடுத்துள்ளனர். அப்படி என்றால் திமுகவில் யாரும் தகுதி இல்லை என்று அர்த்தம். எதற்கும் மசியாத ஒரே இயக்கம் பாஜக மட்டும் தான். அண்ணா, கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரின் பேச்சுகளை நான் கேட்டுள்ளேன். ஆனால், இந்த அண்ணாமலையை போல் சொந்த பேச்சு திறமை கொண்ட வரை நான் பார்த்ததே இல்லை.

பாஜக குறித்து சொன்னது:

திமுக வெற்றியை நோக்கி போவதாக நினைக்கிறார்கள். ஆனால், இந்த வெற்றி தான் தோல்வியை நோக்கி செல்கிறது. எனக்கு சகட்டுமேனிக்கு பேசித்தான் பழக்கம். அண்ணாமலை தான் அடுத்த முதல்வர். இது காசு கொடுத்து கூடும் கூட்டம் இல்லை, தானா சேர்ந்த கூட்டம். கருணாநிதி குடும்பத்தில் இருந்து முதல்வராக ஸ்டாலின் வந்துள்ளது எனக்கு சந்தோஷம்தான். மகாராஷ்டிராவில் ஆப்பு வைத்தோமே பார்த்தீர்களா? ஆனால், நம்ம கட்சியை சேர்ந்த பட்னவிஸ் முதல்வர் பதவிக்கு ஆசைப்படாமல் துணை முதல்வராக பொறுப்பேற்றது அவரது பெருந்தன்மை.

இந்தியாவின் அக்யூஸ்ட்டுகள்:

இந்தியாவில் 2 அக்யூஸ்ட்டுங்க இருக்காங்க. பெரிய அக்யூஸ்ட்ங்க. ஒன்னு மோடி ஜி, இன்னொன்னு அமித்ஷா. நீங்கள் பத்தாயிரம் தடவை ஒன்றிய அரசு என சொன்னாலும் சரி, பத்தாயிரம் தடவை திராவிட மாடல் என சொன்னாலும் சரி அவங்க ரெண்டு பெரும் கண்டுக்கவே மாட்டாங்க. வரும் தேர்தலில் பாஜக 160 தொகுதிகளில் நின்றால் 140 தொகுதிகளில் வெற்றிபெறும். இதைக்கேட்ட அதிமுக கோபப்படக்கூடாது. தனது பலம் என்ன? பலவீனம் என்ன? என்று அதிமுக தெரிந்து கொள்ள வேண்டும் என்று ராதாரவி பேசி இருக்கும் கருத்து தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

Advertisement