வெறும் இத்தன லட்சம் கொடுத்த யார் படத்த வேனா ஆஸ்கர் யூடுயூப்ல போடுவாங்க – கேலி செய்த BJP பிரபலம். ரசிகர்கள் பதிலடி.

0
202
jaibhim
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் உள்ள முன்னணி நடிகர்களில் ஒருவராக சூர்யா திகழ்ந்து கொண்டு இருக்கிறார். கடந்த ஆண்டு இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடித்த ஜெய்பீம் படம் அமேசான் ப்ரைம் ஒடிடி தளத்தில் வெளியாகி இருந்தது. இந்த படத்தில் லிஜோமோல் ஜோஸ், பிரகாஷ் ராஜ் உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். மேலும், இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பாராட்டு மழையை குவித்தது. ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு அவர்கள் வழக்கறிஞராக இருந்த போது இருளர் இன மக்களுக்காக வாதாடிய உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்டது தான் ஜெய் பீம். படத்தில் வழக்கறிஞராக சூர்யா நடித்து இருந்தார். இந்தப்படம் மக்களின் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதோடு இந்தப் படத்தை குறித்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் என பலரும் பாராட்டி இருந்தார்கள்.

-விளம்பரம்-

இருந்தாலும் படத்தில் வன்னியர்களை இழிவுபடுத்தியதாக வன்னிய சமூகத்தினர் பல சர்ச்சைகளை கிளப்பி இருந்தார்கள். இது ஒரு பக்கம் இருக்க, திரைப்படங்களுக்கான ரேட்டிங் குறித்து கணக்கிடும் ஐஎம்டிபி தளத்தில் அதிக ரேட்டிங் பெற்ற ‘ஷஷாங் ரிடெம்ப்ஷன்’ திரைப்படத்தை முந்தி ‘ஜெய்பீம்’ சாதனை படைத்தது. பின் ஆஸ்கரின் அதிகாரபூர்வ யூடியூப் பக்கத்தில் ஜெய்பீம் திரைப்படத்தின் காட்சிகள் இடம் பெற்றிருந்தது. அதுமட்டுமில்லாமல் ஆஸ்கரின் யூட்யூப் தளத்தில் பதிவேற்றம் செய்த முதல் தமிழ் திரைப்படம் ஜெய்பீம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ஜெய் பீம் படம் ஆஸ்கர் விருதுக்கு தேர்வாகி உள்ளது.

- Advertisement -

ஆஸ்கர் விருதுக்கான தகுதிப் பட்டியலில் ஜெய் பீம்:

தற்போது 94வது ஆஸ்கர் விருதுகளுக்கான தகுதிப் பட்டியலில் அனுப்பப்பட்ட 276 படங்களில் ஜெய்பீம் தேர்வாகியுள்ளது. இதற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த படம் ஆஸ்கர் விருதுக்கு சென்றதற்கு சூர்யா 3 லட்சத்து 72 ஆயிரம் அதாவது 5000 டாலர்கள் கொடுத்து தான் ஆஸ்கர் அதிகாரபூர்வ யூடியூப் சேனலில் இடம் பெற்றிருக்கிறார் என்று பயனர் ஒருவர் விமர்சித்து டீவ்ட் போட்டு இருக்கிறார். அதில் அவர் கூறி இருப்பது, வெறும் 3 லட்சத்து 72 ஆயிரம் ரூபாவை கொடுத்து தான் ஆஸ்கர் யூடியூப் சேனலில் வெளியிட்டு இருக்கிறார் சூர்யா.

சூர்யாவை விமர்சித்த பயனர் டீவ்ட்:

திமுகவினர் போல் மலிவான சந்தைபடுத்தல் தந்திரங்களை சூர்யா பின்பற்ற ஆரம்பித்தாரா? கிராமப்புறங்களில் மருத்துவமனை திறக்க சூர்யா சார் 3 லட்சத்து 72 ஆயிரம் செலவு செய்திருக்க வேண்டும். நான் சொல்வது சரியா ஜோதிகா மேடம்? என்றும் விமர்சித்து டீவ்ட் போட்டு இருக்கிறார். இதைப் பார்த்து பலரும் கடுமையாக கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். பொதுவாகவே ஆஸ்கர் விருதுகளில் ஒருபடம் தகுதி பெறுவதற்கு, அமெரிக்காவில் இருக்கும் திரையரங்குகளில் அப்படம் குறைந்தகாலம் ஓடியிருத்தல் அவசியம். ஒரு பட நிறுவனம் 12,500 (அதாவது இந்திய மதிப்பில் 9,12,901 ரூபாய் ) அமெரிக்க டாலர் தொகையை கட்டி, தங்களின் படத்தினை ஆஸ்கர் குழுவுக்கு அனுப்பலாம்.

-விளம்பரம்-

கொந்தளித்து கண்டனம் தெரிவிக்கும் ரசிகர்கள்:

அதை ‘Quality Control’ குழு ஒன்று தரம் பார்க்கும். தரத்தில் எந்தப் பிரச்னையும் இல்லை என்றால் அந்தப் படம் ஆஸ்கர் ஸ்கிரீனிங் பட்டியலில் இடம்பெறும். இது தான் முறை. இப்படி இருக்கும் நிலையில் எதுவும் தெரியாமல் எப்படி நிங்கள் சூர்யாவை பற்றி விமர்சித்து பேச முடிகிறது. இதற்கு அந்த நபர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டு வருகிறார்கள். சிலர் சூர்யா சார், நீங்கள் விளக்கம் தருகிறீர்களா? இல்லை நாங்கள் தரட்டுமா? என்று கொந்தளித்து பொங்கி போய் அந்த நபரை வெளுத்து வாங்கி வருகிறார்கள். அதுமட்டும் இல்லாமல் ஆஸ்கார் பட்டியலில் இடம் பிடிப்பது என்று சாதாரண விஷயம் கிடையாது. வெறும் 3 லட்சத்துக்காண பதிவு கிடையாது.

வெற்றிமாறன் கூறிய கருத்து:

இதை பற்றி வெற்றிமாறன் கூட சொல்லி இருக்கிறார் என்று ட்விட்டரில் வெற்றிமாறன் பேசிய வீடியோவை பதிவிட்டு இருக்கிறார்கள். அதில் வெற்றிமாறன், ஆஸ்கர் செல்வதற்கு அடிப்படைத் தேவைக்கான செலவே பல கோடிகள் ஆகும் என்று கூறியிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் பார்த்திபன் கூட ஆஸ்கர் விருதில் பட புரமோஷனுக்கு மூன்றரை கோடிக்கு மேல் செலவாகும். அதற்குமேல் விருது பட்டியலில் வருவதற்கு எக்கச்சக்க செலவாகும் என்றெல்லாம் பேசுகிறார். இப்படி இருக்கும் நிலையில் எப்படி சூர்யா 3 லட்சத்து 72 ஆயிரம் மட்டும் கொடுத்து போனார்? என்று உங்களால் சொல்ல முடிகிறது.

வைரலாகும் டீவ்ட்:

கோடி கோடியா பணம் போட்டு படம் எடுக்குறாங்க. இவர் சொல்ற மாதிரி எல்லோரும் ஒரு நாலு லட்சம் கொடுத்த எல்லாருடைய படமும் ஆஸ்கரில் வந்துட்டு போகுது. இதை விட அதிகமாக இந்த விளம்பரத்துக்கு செலவு பண்றாங்க என்றெல்லாம் அந்த நபரை விமர்சித்து போட்டிருக்கிறார்கள். தற்போது சூர்யாவிற்கு ஆதரவாக பலரும் கருத்து பதிவிட்டு வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் சோசியல் மீடியாவில் ஜெய்பீம் படத்தை பற்றிய கருத்துக்கள் தான் அதிகம் பேசப்பட்டு வருகிறது. இதற்கு சூர்யா தரப்பில் இருந்தும், ஜெய்பீம் படக்குழு தரப்பில் இருந்தும் என்ன பதில் வரப்போகிறது? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Advertisement