விஜய் ரசிகர்கள் கொடுத்த புகார் – கோவை சிறையில் உள்ள பாஜக ஆதரவாளர் உமா கார்த்திகேயன் மீண்டும் கைது.

0
1511
Uma
- Advertisement -

பாஜக ஆதரவாளர் உமா கார்த்திகேயனை மீண்டும் கைதாகி இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சை ஏற்படுத்தி வருகிறது. பாஜக ஆதரவாக இருப்பவர் உமா கார்த்திகேயன். இவர் கோவை சிங்காநல்லூர் பகுதியில் சேர்ந்தவர். இவர் பாஜகவுக்கு ஆதரவாக குரல் கொடுத்து பேசி வருகிறார். இதனால் இவர் மீது பல குற்றச்சாட்டுகளும் இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் இவர் umagarghi26 என்ற பெயரில் டீவ்ட்டரில் கணக்கு ஒன்று பதிவு செய்து வைத்திருக்கிறார்.

-விளம்பரம்-

அதில் அவர் பாஜாவுக்கு ஆதரவாக கருத்துக்களை பதிவிட்டு வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் இவர் திமுக குறித்தும், முதலமைச்சர் ஸ்டாலின் குறித்தும், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி குறித்தும் அவதூராக பேசியிருக்கிறார். இதனால் கடுப்பான திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகி ஹரிஸ் அவர்கள் உமா கார்த்திகேயன் மீது புகார் அளித்திருக்கிறார். அதன் அடிப்படையில் போலீசார் உமா கார்த்திகேயனை கைது செய்து இருக்கிறது.

- Advertisement -

இதனை அடுத்து கோவை மத்திய சிறையில் அவர் கைதாகி இருக்கிறார். பின் கடந்த 22 மற்றும் 23ஆம் தேதி போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு இருக்கின்றது. இந்த தகவல் சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் நடிகர் விஜய் குறித்து ட்விட்டரில் அவதூறாக பேசி உமா கார்த்திகேயன் பதிவு ஒன்று போட்டு இருக்கிறார்.

இதனால் ஆத்திரம் அடைந்த விஜய் மக்கள் இயக்கத்தினர் சென்னை காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்கள். இந்த புகாரின் அடிப்படையில் கோவை மத்திய சிறையில் உள்ள உமா கார்த்திகேயனை மீண்டும் சென்னை காவல்துறை கைது செய்திருக்கின்றனர். அது மட்டும் இல்லாமல் அவரை சென்னைக்கு அழைத்து வந்திருக்கிறார்கள். தற்போது அவர் நீதிமன்றத்தில் ஆஜராகி விசாரிக்கப்பட்டு வருகிறது.

-விளம்பரம்-

இந்த சம்பவம் சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு பின்னால் பாஜக தலைவர் இருப்பார்களா? என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முடி சூடாக மன்னனாக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய். இவருக்கு கோடிக்கணக்கான பேர் ரசிகர்களாக இருக்கிறார்கள். இவருக்கு விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் ரசிகர்கள் ரசிகர் மன்றம் வைத்து இருக்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.

இப்படி இருக்கும் நிலையில் 2020 ஆம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்கள். இப்படி விஜய் போட்டியிட்டு இயக்கம் அரசியலில் ஈடுபட்டாலும் தங்களின் ஜனநாயக கடமையை செய்து வருகிறார்கள். அந்த வகையில் சமீபத்தில் விஜய் மக்கள் இயக்கத்தில் சார்பில் மாணவர்கள் பரிசு விழா நடந்தது. இந்த நிகழ்வு சென்னை நீலாங்கரையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்று இருக்கிறது.

Advertisement