பணம் கொடுத்து அனுப்பிய Sk, பிளாக் பாண்டி செயலால் பேசுவதையே நிறுத்திட்டாராம் – அவரே சொன்ன தகவல்.

0
1076
blackpandi
- Advertisement -

தொலைகாட்சியில் இருந்து சினிமாவுக்கு வந்து பிரபலமாக பலர் இருக்கிறார்கள். அதில் சிவகார்த்திகேயனும் ஒருவர். தொகுப்பாளராக தன்னுடைய பயணத்தைத் தொடங்கி தற்போது தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களில் ஒருவராக சிவகார்த்திகேயன் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் மெரினா திரைப்படத்தின் மூலம் தான் ஹீரோவாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்து உள்ளார். மேலும், இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்று வந்து வருகிறது.

-விளம்பரம்-

இறுதியாக இவர் நடிப்பில் வெளியான டாக்டர் படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று இருந்தது. தற்போது டான், ஐலான் போன்ற படங்களில் நடித்து வருகிறார் சிவா. என்னதான் தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய நடிகராக இருந்தாலும் இன்னமும் தன் தொலைக்காட்சி நண்பர்களுடன் அதே நட்பில் தான் சிவகார்த்திகேயன் இருந்து வருகிறது.

- Advertisement -

சிவகார்த்திகேயனுடனான நட்பு :

இப்படி ஒரு நிலையில் விஜய் டிவியில் கனா காணும் காலங்கள் தொடர் மூலம் பிரபலமான பிளாக் பாண்டி சிவகார்த்திகேயன் குறித்து பேசி இருக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. சிவகார்த்திகேயனும் நானும் வீட்டில் இருந்தபோது நண்பர்கள்தான் இன்னமும் கோயம்புத்தூரில் இருக்கும் கல்பனா ஸ்டூடியோவில் நாங்கள் எடுத்த போட்டோ இருக்கும் என்று கூறி இருந்தார்.

பணம் கொடுத்து அனுப்பிய சிவகார்த்திகேயன் :

அப்போது தொகுப்பாளர், இன்னமும் பேசுகிறீர்களா என்று கேட்டதற்கு ‘இல்ல, பாக்கும் போது பேசுவோம். இப்போ அவர் பெரிய பெரிய பொறுப்பில் இருக்கிறார். இடையில் நான் மிகுந்த கஷ்டபட்டு கொண்டிருந்த காலத்தில் சிவாவுடைய மேமேஜர், காசு எடுத்துகொண்டு வந்து என்னிடம் கொடுத்தார்.

-விளம்பரம்-

சிவகார்த்திகேயன் பேசாமல் போன காரணம் :

ஆனால், நான் காசு வேண்டாம், படத்துல கேரக்டர் இருந்தா குடுங்க என்று அந்த காஸை வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். ஆனால், அந்த மேனேஜர் சிவாவிடம் போய் என்ன சொன்னார் என்று தெரியவில்லை. அதில் இருந்து என்னிடம் அவன் சரியாக பேசுறது இல்லை. அதற்கு நான் வருத்தப்பட்டது இல்லை என்று கூறியுள்ளார் பிளாக் பாண்டி.

போன் செய்தும் எடுக்காத அஞ்சலி :

இதே பேட்டியில் நடிகை அஞ்சலி குறித்து பேசிய அவர், அஞ்சலியை அங்காடித்தெரு படத்திற்கு முன்பாகவே தெரியும் என்றும், அந்த படத்திற்கு பின்னர் அவரை ஒருமுறை சந்தித்தபோது அவர் தன்னுடைய தொலைபேசி எண்ணை கொடுத்ததாகவும். ஆனால், நான்கு முறை போன் செய்தும் அவர் எடுக்கவே இல்லை என்பதால் அவரிடம் நான் பேசுவது இல்லை என்றும் கூறி இருக்கிறார் பிளாக் பாண்டி.

Advertisement