பிளாக் பாந்தர் நடிகர் மரணம். பாவம் இத்தனை ஆண்டுகள் இந்த நோய் இருப்பதை அவர் சொன்னதே இல்லை.

0
1303
- Advertisement -

மார்வெல் சூப்பர்ஹீரோ கதாபாத்திரமான பிளாக் பாந்தர் ரோலில் நடித்த ஹாலிவுட் நடிகர் சட்விக் போஸ்மேன் புற்றுநோய் காரணமாக 43 வயதில் மரணம் அடைந்த சம்பவம் உலக ஹாலிவுட் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 2008ம் ஆண்டு வெளியான ‘தி எக்ஸ்ப்ரஸ்: தி எர்னீ டேவிஸ் ஸ்டோரி’ படத்தின் ஒரு சிறிய கதாத்திரத்தின் மூலம் திரையின் மூலம் தனது வாழ்க்கையைதொடங்கினார் சாட்விக்.

-விளம்பரம்-

பின்னர் 2013ம் ஆண்டு அமெரிக்க பேஸ்பால் வீரர் ஜாக்கி ராபின்ஸன் கதாபாத்திரத்தில் அவர் நடித்த ‘42’ திரைப்படம் பெரும் வரவேற்பைப் பெற்று சாட்விக் போஸ்மேன் ஒரு அங்கீகாரமிக்க நடிகராக வலம் வந்தார். ‘42’ படத்தின் பெற்ற வெற்றியின் மூலம் மார்வெல் யூனிவர்ஸின் தயாரிப்பில் பிரம்மாண்டமாக வெளியான ‘பிளாக் பாந்தர்’ படத்தில் நாயகனாக நடித்தார் சட்விக் போஸ்மேன்.

- Advertisement -

அதன் பின்னர் அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார் மற்றும் அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் உள்ளிட்ட படங்களிலும் பிளாக் பாந்தராகவே வந்தார். மார்வெல் கதாபாத்திரங்களில் பிளாக் பாந்தர் கதாபாத்திரமும் உலக மக்கள் அனைவராலும் விரும்பப்பட்ட ஒரு கதாபாத்திரம் தான். இந்த நிலையில் நடிகர் சட்விக் போஸ்மேன் தனது 43 வயதில் குடல் புற்றுநோய் காரணமாக உயிரிழந்து உள்ளார்.

இதுகுறித்து அவரது குடும்பத்தினர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  கடந்த 2016ஆம் ஆண்டு போஸ்மேனுக்கு பெருங்குடல் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. பெருங்குடல் புற்றுநோய் பாதிப்பு காரணமாக கடந்த 4 ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்துள்ளார் நடிகர் சட்விக் போஸ்மேன்.ஆனால், அதனை வெளிப்படையாக அவர் அறிவித்ததே இல்லை; சிகிச்சையின் நடுவே திரைப்படங்களிலும் நடித்து வந்துள்ளார் மனைவி மற்றும் குடும்பத்தினர் அருகில் இருக்க அவர் வீட்டிலேயே இன்று மரணம் அடைந்தார். உங்கள் அன்பிற்காகவும் பிரார்த்தனைக்காகவும் குடும்பம் நன்றி தெரிவித்து கொள்கிறது.

-விளம்பரம்-
Advertisement