கேரள மாநில திரைப்பட விருதில் ஏ ஆர் ரகுமானை புறக்கணித்த தகவல் தான் தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. கேரளாவில் 54-ஆவது மாநில திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதை கேரளா அமைச்சர் சாஜிசெரியன் அறிவித்திருக்கிறார். அந்த விருதுகள் பட்டியலில் பிரித்விராஜ் - ப்ளெஸ்ஸி கூட்டணியில் வெளியான ஆடு ஜீவிதம் திரைப்படம் இடம் பெற்று இருக்கிறது.

அதில், சிறந்த நடிகர், சிறந்த இயக்குனர், சிறந்த ஒப்பனைக் கலைஞர், சிறந்த திரைக்கதை தழுவல் என ஒன்பது பிரிவுகளில் விருதுகளை தட்டிச் சென்றிருக்கிறது. ஆனால், அந்த படத்தின் இயக்குனர் கேரள மாநில திரைப்பட விருதுக்கான தேர்வுக் குழுவின் மீது கோபத்தை காண்பித்திருக்கிறார். காரணம், ஆடு ஜீவிதம் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் ஏ ஆர் ரகுமான். இதனால் சிறந்த இசை அமைப்பாளர் என்ற விருதை கொடுக்கவில்லை.
ஆடு ஜீவிதம் படம்:
மலையாள சினிமா உலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருக்கிறார் பிரித்திவிராஜ். இவர் மலையாளத்தில் மட்டுமில்லாமல் தமிழிலும் நடித்து இருக்கிறார். தமிழிலும் இவருடைய படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. சமீபத்தில் இவருடைய நடிப்பில் மலையாளத்தில் வெளியாகி இருந்த படம் தான் ஆடு ஜீவிதம். இயக்குனர் பிளஸ்ஸி இந்த படத்தை இயக்கியிருந்தார்.

படம் குறித்த தகவல்:
இந்த படத்தில் அமலா பால், கோகுல், Jimmy Jean-Louis உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்து இருந்தார். உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்று தந்து இருந்தது. மேலும், இந்த படம் இவ்வளவு பெரிய வெற்றி பெற்றதற்கு காரணம் இந்த படத்தினுடைய இசை தான்.
இயக்குனர் பேட்டி:
இந்த படத்திற்கு உயிராக இருந்த இசைக்கு எந்த விருந்தும் வழங்காதது தான் இயக்குனர் பிளஸ்ஸிக்கு பெரிய அதிர்ச்சி. இந்நிலையில் இது குறித்து இந்தப் படத்தினுடைய இயக்குனர் பிளஸ்ஸி பேட்டியில், ஆடு ஜீவிதம் படத்திற்கு ஆன்மாவாக இருந்ததே இசை தான். காரணம், முழு ஸ்கிரிப்ட்டை உருவாக்குவதற்கு இசை தான் ஒரு முக்கிய பங்கை கொண்டிருந்தது. இந்த படத்திற்கு இசை முக்கியம் என்பதால் தான் ஏ ஆர் ரகுமானை அழைத்து வந்தோம்.

ஏ ஆர் ரகுமான் குறித்து சொன்னது :
ஆரம்பத்தில் அவர் எப்போதும் போல பின்னணி இசையமைத்து இருந்தாலும், பின் இந்த படத்திற்காக மெனக்கெட்டு வேறு ஒரு இசையை கொடுத்திருந்தார். இப்படி இந்த படத்திற்கு ஆத்மார்த்தமாக இருந்த அவருடைய படைப்புக்கு விருதுகள் பரிசீலனை செய்யாததை நான் அவமானமாக நினைக்கிறேன் என்று கூறி இருக்கிறார். இதற்கு ரசிகர்கள் பலரும் இயக்குனரின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.






