தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராகவும், வசூல் மன்னனாகவும் திகழ்பவர் நடிகர் விஜய். மேலும், அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் அவர்கள் நடிப்பில் தீபாவளியை முன்னிட்டு வெளிவந்த பிகில் படம் தியேட்டர்களில் திருவிழா போன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு பட்டையை கிளப்பியது என்று சொல்லலாம். மேலும், இந்த படத்தில் நயன்தாரா, விவேக், கதிர், ஜாக்கி ஷெராஃப், யோகி பாபு, இந்துஜா, இந்திரஜா, வர்ஷா பொல்லம்மா, அம்ரிதா உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து உள்ளார்கள். அதுமட்டுமில்லாமல் ஏஜிஎஸ் என்டெர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்தது. ஏ.ஆர்.ரகுமான் அவர்களின் இசையில் பாடல்கள் எல்லாம் தூள் கிளப்பியது.
உலகம் முழுவதும் இந்த படம் 300 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. தற்போது கூட இந்த படம் திரையரங்குகளில் ஓடிக் கொண்டு தான் உள்ளது. இந்த படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நம்ம தளபதி விஜய் அவர்கள் “தளபதி 64” என்ற படத்தில் நடித்து வருகிறார். இன்னமும் இந்த படத்திற்கு பெயரிடவில்லை. இந்த படத்தை சேவியர் பிரிட்டோ தயாரிக்க உள்ளார்கள். மேலும், அனிரூத் அவர்கள் இந்த படத்துக்கு இசையமைக்கிறார். டெல்லியில் முதற்கட்ட படப்பிடிப்புகள் நடந்த நிலையில் தற்போது சென்னையில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது.
இதையும் பாருங்க : பேபி அனிகா வரிசையில் அட்ராசிட்டியை துவங்கிய பாபநாசம் எஸ்தர். புகைப்படத்தை பாருங்க.
விஜய் சேதுபதி 64 படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருவதை அறிந்த ரசிகர்கள் தினமும் அங்கே கூட்டம் கூட்டமாக குவிந்து வருகிறார்கள். அதேபோல படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்த நிலையில் சென்னை பூவிருந்தவல்லியில் அமைந்துள்ள பார்வையற்றோர் குழந்தைகள் பள்ளியிலிருந்து சில மாணவர்கள் விஜயை சந்திக்க படப்பிடிப்பு தளத்திற்கு சென்றதாகவும். ஆனால், அவர்களை நடிகர் விஜய் கண்டுகொள்ளாமல் சாதாரண ரசிகர்களுக்கு கைஆசைப்பதை போல அசைத்து விட்டு சென்றார் என்றும் பள்ளி ஆசிரியரான சரவணன் மணிகண்டன் என்பவர் மிகவும் கோபத்துடன் தனது முகநூல் பக்கத்தில் பதிவு ஒன்றை செய்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
இதுகுறித்து ஒரு நீண்ட பதிவினை போட்டுள்ளார் அந்த ஆசிரியர், கடந்த சனிக்கிழமையன்று, உங்களைச் சந்தித்து வெறும் இரண்டே நிமிடங்கள் பேசிவிடவேண்டும் என்ற ஆர்வத்திலும், எதிர்பார்ப்பிலும் எங்கள் பள்ளி மாணவர்கள் சுமார் மூன்று மணி நேரமாகக் குழுமி இருக்க, அவர்களைப் பார்வையுள்ளவர்கள் என்று கருதிக்கொண்டு, சைகை செய்துவிட்டு சென்றுவிட்டீர்கள். உங்கள் குழுவினரை அணுகி எங்கள் மாணவர்களில் சிலர் கேட்டதற்கு, “கண்ணு தெரியாத நீ பார்த்து என்ன பண்ணப்போற” எனக் கேவலமாகப் பதில் வந்திருக்கிறது.
மாணவர்கள் படப்பிடிப்புத் தளத்திற்கு அருகிலேயே உங்களைச் சந்திக்கும் ஆர்வத்தோடும், விருப்பத்தோடும் மிக அமைதியான முறையில் உங்கள் கண் எதிரே, ஏறத்தாழ ஒன்றரை மணிநேரம் காத்திருந்தார்கள். இயக்குநர் திரு. லோகேஷ் அவர்கள்கூட இரண்டு நிமிடங்கள் வந்து மாணவர்களிடம் பேசிவிட்டுச் சென்றார். ஆனால், நிச்சயம் சந்திக்கிறீர்கள் என்று சொல்லப்பட்ட தாங்கள் படப்பிடிப்பை முடித்துக்கொண்டு, இரகசியமாய் கிளம்பிவிட்டீர்கள். நீங்கள் கிளம்பிவிட்டீர்கள் என்பதைக்கூட அறியாமல் நீங்கள் வருவீர்கள் என நம்பிக்கையோடு மேலும் அரைமணி நேரம் எங்கள் மாணவர்கள் காத்துக்கொண்டு நின்ற அவலமும் நடந்தேறியது
தாங்கள் ஒரு பார்வை மாற்றுத்திறனாளி மாணவர்கள் பயிலும் பள்ளிக்கு வந்திருக்கிறீர்கள். நிச்சயம் சில வினாடிகளாவது அவர்களைச் சந்திக்கவேண்டும், அவர்களிடம் உரையாட வேண்டும் என ஒரு சக மனிதனாக ஏன் உங்களுக்குத் தோன்றவில்லை. எல்லாப் படப்பிடிப்புத் தளங்களைப் போலவே, இதையும் ஒரு சராசரி இடமாக நினைத்துவிட்டீர்களா? அல்லது பார்வையற்ற இவர்கள் நமது ரசிகர் கணக்கில் வரமாட்டார்கள் என்கிற கணக்கா? ஒவ்வொரு ஆண்டும் உங்கள் பிறந்த தினத்தின்போது, சோறுபோட மட்டும் என்கிற பட்டியலில் எங்கள் பள்ளி வைக்கப்பட்டிருக்கிறதா? பார்வை மாற்றுத்திறனாளி ரசிகர்களுக்கு, எல்லாம் வேஷம் என்பதைப் புரியவைத்தமைக்கு மிக்க நன்றி திரு. விஜை அவர்களே என்றெல்லாம் பதிவிட்டுள்ளார்.