பிளடி பெக்கர் படத்தால் ஏற்பட்ட நஷ்டத்தால் நெல்சன் பணத்தை திருப்பி கொடுத்து இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக கவின் வளர்ந்து இருக்கிறார். கடைசியாக இவர் நடித்த டாடா படம் மிக பெரிய அளவில் வரவேற்பை பெற்று இருந்தது. இதை அடுத்து சமீபத்தில் இவருடைய நடிப்பில் வெளியாகி இருந்த படம் பிளடி பெக்கர்.
இந்த படத்தை படம் நெல்சன் தயாரித்திருந்தார். இந்த படத்தை நெல்சனிடம் உதவி இயக்குனராக இருந்த சிவபாலன் முத்துகுமார் என்பவர் தான் இயக்கியிருந்தார். இந்த படத்தின் மூலம் தான் இவர் தமிழ் சினிமா உலகில் இயக்குனராக அறிமுகமாகி இருக்கிறார். இந்த படத்திற்கு ஜென்மார்ட்டின் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தில் ரெடின் கிங்ஸ்லி, மாருதி பிரகாஷ்ராஜ், சுனில் சுகாதா, அக்ஷயா ஹரிஹரன் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.
பிளடி பெக்கர் படம்:
தீபாவளி பண்டிகை முன்னிட்டு வெளியாகி இருந்த பிளடி பெக்கர் படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருக்கிறது. அதோடு எதிர்பார்த்த அளவிற்கு வசூல் செய்யவில்லை. அது மட்டும் இல்லாமல் இந்த படத்தின் ரிலீசின் போது ஜெயம் ரவி நடித்த பிரதர், சிவகார்த்திகேயன் அமரன் படம் வெளியாகியிருந்தது. இதில் அமரன் படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது மட்டும் இல்லாமல் வசூல் சாதனை மேல் பெற்றிருக்கிறது.
படம் குறித்த தகவல்:
இதனால் பிரதர் மற்றும் பிளடி பெக்கர் ஆகிய இரண்டு படங்களுமே படுதோல்வியை சந்தித்து இருக்கிறது. மேலும், ப்ளடி பெக்கர் படத்தினுடைய தமிழக உரிமையை 5 ஸ்டார் செந்தில் வாங்கி 11 கோடிக்கு வாங்கி விநியோகம் செய்து இருந்தார். ஆனால், படம் பெரிய எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறாததால் செந்திலுக்கு நஷ்டம் ஏற்பட்டது. அதோடு ஒப்பந்தப்படி விநியோகம் பணம் வாபஸ் கொடுக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்தப் படத்தின் மூலம் தமிழகத்தில் பைவ் ஸ்டார் செந்திலுக்கு 4 கோடி மட்டுமே கிடைத்திருக்கிறது.
நெல்சன் செய்த செயல்:
சுமார் 7 கோடி வரை அவர் அவருக்கு நஷ்டம் ஏற்பட்டது. படம் வெளியான சில நாட்களிலேயே
இப்படி இருக்கும் நிலையில் நெல்சன், 5 ஸ்டார் செந்திலை சந்தித்து இருக்கிறார். அதில் நஷ்ட தொகையில் சுமார் 5 கோடியை திருப்பி தருவதாக உறுதியும் அளித்திருக்கிறார். இதனால் விநியோகஸ்தர்கள் அதிக மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். இருந்தாலுமே நெல்சன் சந்தோசமாக தான் இருக்கிறார். காரணம், மற்ற உரிமை விற்பனையில் அவருக்கு லாபம் கிடைத்ததாக கூறப்படுகிறது. நெல்சனின் இந்த நல்ல எண்ணத்தை பலருமே பாராட்டி வருகிறார்கள்.
படத்தின் கதை:
படத்தில் பிச்சைக்காரனாக வாழ்ந்து வரும் கவினுக்கு எப்படியாவது மாளிகையில் வாழ வேண்டும் என்று ஆசை இருக்கிறது. இந்த சமயத்தில் நடிகர் ஒருவர் தன்னுடைய பங்களாவில் அன்னதானம் செய்கிறார். அதில் கவினும் கலந்து கொள்கிறார். இன்னொரு பக்கம் அந்த பங்களா உறவினர்களுக்கு இடையே சொத்து பிரச்சனையில் அடித்துக் கொள்கிறார்கள். உயிர் மூலம் நிறைய பங்குகளை பெற்ற அந்த மகன் மட்டும் காணாமல் போய்விடுகிறார். அந்த மகனாக கவினை நடிக்க வைக்க திட்டம் போடுகிறார்கள். ஒரு கட்டத்தில் மற்றவர்களுக்கு கவின் நடிக்கிறான் என்பது தெரிய வந்து அனைவருமே சேர்ந்து கவினை தீர்த்துக்கட்டி சொத்தை தங்களுடைய வசமாக்க முடிவு செய்கிறார்கள். அந்த பணக்கார குடும்பத்தின் சதி திட்டத்திலிருந்து கவின் தப்பித்தாரா? சிக்கினாரா? அவர்களுக்கெல்லாம் பதிலடி கொடுத்து உண்மையிலேயே அந்த மாளிகையை கவின் ஆண்டாரா? என்பது தான் படத்தின் மீதி கதை.