இப்போ தெரியுதா ஜேம்ஸ் கேமரூன் ஏன் இவ்ளோ பெரிய ஆளா இருக்கார்னு – Avatar 2 விமர்சனத்தில் தமிழ் இயக்குனர்களை கலாய்த்த ப்ளூ சட்டை.

0
447
blue
- Advertisement -

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி அவதார் 2 படம் சமீபத்தில் வெளியான நிலையில் தற்போது அதை விமர்சனம் செய்து இருக்கிறார் ப்ளூ சட்டை மாறன். உலகம் முழுவதும் பிரம்மிக்க வைத்த படங்களில் ஒன்று அவதார். இந்த படம் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியாகியிருந்தது. ஜேம்ஸ் கேமரூன் இந்த படத்தை இயக்கியிருந்தார். மிகப்பெரிய அளவில் இந்த படம் வெற்றி அடைந்தது. இந்த படத்தின் முதல் பாகத்தை தொடர்ந்து தற்போது இரண்டாம் பாகம் வெளிவந்திருக்கிறது. 13 வருடங்களுக்குப் பின் வெளிவந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது.

-விளம்பரம்-

நாவினத்தினுடைய தலைவனாகவும், நான்கு பிள்ளைகளின் அப்பாவாகவும், தனது மனைவி நெய்டிரியுடன் சேர்ந்து சந்தோஷமாக கதாநாயகன் ஜேக் வாழ்ந்து வருகிறார்.இந்த சமயத்தில் மீண்டும் பண்டோராவில் மனிதர்களுடைய கால் தடம் படுகிறது. இந்த முறை பண்டோராவில் புதிய உலகத்தை உருவாக்க வேண்டும் என்று ராணுவம் மிகப்பெரிய படையுடன் புறப்பட்டு வருகிறது. இவர்களுக்கு Colonel Quaritch உதவுகிறார். முதல் பாகத்தில் மனிதனாக இறந்து போன Colonel Quaritch தன்னுடைய நினைவுகளை சீப் மூலம் ஸ்டோர் செய்து நாவி உடலில் புகுந்து மீண்டும் கதாநாயகன் ஜேக்கை பழிவாங்க வருகிறார்.

- Advertisement -

Colonel Quaritch தன்னுடைய வீரர்களுடன் பண்டோரா காட்டுக்குள் வரும்போது ஜேக்கினுடைய மகன் மற்றும் இரு மகளுடன், Colonel Quaritch மகன் மைல்ஸ் Colonel Quaritch வீரர்களிடம் சிக்கி கொள்கிறார்கள்.ஆனால், கதாநாயகன் ஜேக் தனது மகன் மற்றும் இரு மகள்களை போராடி காப்பாற்றி விடுகிறார். ஆனால், மைல்ஸ் Colonel Quaritchயிடம் கைதியாக மாட்டிக் கொண்டார். இதனை அடுத்து பண்டோராவில் இருந்தால் தன்னுடைய மனைவி, மகன்கள், மகள்களை இழந்து விடுவோம் என்று ஜேக் தன்னுடைய அரச பட்டத்தை வேறொருவருக்கு கொடுத்துவிட்டு பண்டோராவிலிருந்து வெளியேறி கடல்வாசி நாவிகளிடம் தஞ்சம் கேட்டு செல்கிறார்.

கடல் நாவிகளின் அரசர் அவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கவும் சம்மதிக்கிறார். பின் கடல் சார்ந்த விஷயங்களை ஜேக், அவரது குடும்பம் மிகவும் சிரமப்பட்டு கற்றுக் கொள்கிறார்கள். இன்னொரு பக்கம் வில்லன் Colonel Quaritch, ஜேக் இருக்கும் இடத்தை தேடி அலைகிறார். அப்போது வில்லன் Colonel Quaritchயிடம் ஜேக் குடும்பத்தின் சிலர் சிக்கிக் கொள்கிறார்கள்.வில்லனை எதிர்த்து போராடாமல் தஞ்சம் சென்ற ஜேக் இறுதியில் தைரியத்துடன் Colonel Quaritchயை எதிர்த்து போராடி தன்னுடைய குடும்பத்தை காப்பாற்றினார்? இல்லையா? வில்லனை மீண்டும் அழித்தாரா? என்பது தான் படத்தின் மீதி கதை.

-விளம்பரம்-

அதிலும் குறிப்பாக இந்த விமர்சனத்தின் நடுவே டைட்டானிக் படத்தின் போது ஜேம்ஸ் கேமரனுக்கு வந்த விமர்சனத்தையும் 10 ஆண்டுகள் கழித்து அதை எப்படி அதை திருத்திக்கொண்டார் என்றும் ஒரு எடுத்துக்காட்டை கூறி இருக்கும் மாறன், இப்போ தெரிகிறதா எந்தக் காரணத்தினால் தான் ஜேம்ஸ் கேமரூன் ஏன் இவ்வளவு பெரிய ஆளாக இருக்கிறார் என்று தமிழ் சினிமா இயக்குனர்கள் விமர்சனங்களை எவ்வாறு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று சூசகமாக கேலி செய்து இருக்கிறார்.

Advertisement