பிரபல பத்திரிகையில் ‘ஆன்டி இந்தியன்’ படத்திற்கும் ‘வலிமை’ படத்திற்கும் கொடுக்கப்பட்ட மதிப்பெண்னை குறிப்பிட்டு கேலி செய்த மாறன்.

0
659
- Advertisement -

சினிமா உலகில் வெளிவரும் திரைப்படங்களை கிண்டலாகவும் ,கேலியாகவும் விமர்சனம் செய்து வருபவர் தான் ‘ப்ளூ சட்டை மாறன்’. இவர் பிரபலமான ஹீரோக்களான ரஜினி, கமல், விஜய், அஜித் என யாருடைய படமானாலும் பாரபட்சம் பார்க்காமல் கிண்டல் செய்து வருவார். இவருடைய வீடியோக்களுக்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டமும் இருந்து வருகிறது. இவருக்கு இதுவரை 9 லட்சத்திற்கும் மேலான சப்ஸ்கிரைபர் உள்ளார்கள். இவருடைய விமர்சனங்களால் படத்தின் வசூல் பாதிக்கப்படுகிறது என சினிமா பட இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் புலம்பி கொட்டுகின்றனர்.

-விளம்பரம்-
valimai

அதோடு இவர் ‘ஆன்டி இந்தியன்’ என்ற படத்தை இயக்கி நடித்தும் இருந்தார். இந்த படம் சரியாக ஓடவில்லை. பின் மீண்டும் இவர் தனது விமர்சன பணியை செய்து வருகிறார். இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் வெளியான அஜித்தின் ‘வலிமை’ படத்தை ப்ளூ சட்டை மாறன் விமர்சனம் செய்து இருக்கிறார். நேர்கொண்ட படத்தை படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வினோத் அவர்கள் அஜித்தை வைத்து வலிமை படத்தை இயக்கி இருந்தார்.

- Advertisement -

சுமார் வெற்றியடைந்த வலிமை :

இதையும் போனிகபூரே தயாரித்துஇருந்தார். இந்த படத்தில் ஹூமா குரேஷி, கார்த்திகேயா உட்பட பல நடிகர்கள் நடித்துஇருந்தனர். இந்த படத்தில் முழுக்க முழுக்க ஆக்ஷன், பைக் ரேஸ் போன்ற காட்சிகள் அதிகமாக இடம்பெற்று இருந்தது. கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் கழித்து அஜித் படம் வெளியாகி இருப்பதால் அவரது ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருந்தனர். ஆனால், எதிர்பார்த்தபடி இந்த படம் நடுத்தர ரசிகர்களை பூர்த்தி செய்யவில்லை.

மாறனும் உருவக்கேலிகளும் :

மேலும், இந்த படம் வெளியானதை பாண்டா பிரஷாந்த், சினிமா பையன் அபிஷேக் என்று பலர் விமர்சனம் செய்தனர். ஆனால், ப்ளூ சட்டை மாறன் வலிமை படத்தை குறித்து விமர்சனம் செய்தது பயங்கர சர்ச்சையானது. அதில் அவர், படத்தை கழுவி ஊற்றியுள்ளதோடு மட்டுமல்லாமல், அஜித்திற்கு மூஞ்சில் தொப்பை இருக்கு. படம் தயாரித்த போனி கபூர் தான் ஒரு சேட் என்றால் அஜித் பஜன் லால் சேட்டு மாதிரி கொழுக் முழுக்னு இருக்கார். டான்ஸ் ஆடவே கஷ்டப்படுறார் என்று அஜித்தை உருவ கேலி செய்துள்ளார்.

-விளம்பரம்-

தொடர்ந்து கேலி செய்யும் மாறன் :

இப்படி ப்ளூ சட்டை மாறன் அஜித்தை உருவ கேலி செய்து இருக்கும் விஷயம் சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையானது. இதனால் பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் ப்ளூ சட்டை மாறன் மீது கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். ஆனால், தன் விமர்சனத்திற்கு கண்டனம் தெரிவிப்பவர்களையும் தொடர்ந்து கேலி செய்து வருகிறார் மாறன். அதே போல அஜித் ரசிகர்களை தொடர்ந்து வம்பிழுத்து வருகிறார்.

வலிமை Vs ஆன்டி இந்தியன் :

மேலும், இவர் இயக்கிய ‘ஆன்டி இந்தியன்’ படத்தை விட வலிமை படம் நல்ல படம் தான் என்று அஜித் ரசிகர்கள் கூறி வரும் நிலையில் தற்போது ப்ளூ சட்டை மாறன் , தான் இயக்கி நடித்த ‘ஆன்டி இந்தியன்’ படத்திற்கு விகடன் விமர்சனத்தில் 44 மதிப்பேன் கொடுக்கப்பட்டது, ஆனால், வலிமை படத்திற்கு 40 மதிப்பெண்கள் மட்டுமே கொடுக்கப்பட்டு இருக்கிறது என்பதை கூறி அஜித் ரசிகர்களை கேலி செய்து இருக்கிறார் மாறன்.

Advertisement