மேடையில் கெட்ட வார்த்தையில் பேசிய ஹரி ராஜமௌலி, பிரசாந்த் நீள் உடன் ஒப்பிட்டு ப்ளூ சட்டை மாறன் போட்ட பதிவு.

0
448
bluesattai
- Advertisement -

அருண் விஜய்யின் யானை படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் இயக்குனர் ஹரி பேசியது இருப்பது ப்ளூ சட்டை மாறன் பதிவிட்டு இருக்கும் பதிவு தற்போது சோசியல் மீடியாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் அருண் விஜய். இவர் தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் விஜயகுமாரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், தமிழ் சினிமாவில் சரியான அங்கீகாரம் கிடைக்காத திறமைமிக்க நடிகர்களில் நடிகர் அருண் விஜய்யும் ஒருவர். கடந்த 20 ஆண்டுகளுக்கு மேல் சினிமா துறையில் இருந்து வருகிறார். இருந்தாலும் பல வருடங்களாக இவர் ஹிட் படத்திற்காக காத்துக்கொண்டிருக்கிறார்.

-விளம்பரம்-

ஆனால், அஜித்துடன் இவர் நடித்த “என்னை அறிந்தால்” படத்தில் இவரது நடிப்பு ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்தது. அந்த படத்தில் இருந்தே அருண் விஜய் தனது உடல் அமைப்பை மிகவும் பராமரித்து வருகிறார். அதற்கு பின் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘செக்க செவந்த வானம்’ படத்திலும் இவரின் அசத்தலான நடிப்பால் அனைவரையும் கவர்ந்திருந்தார். அதற்கு பின் இவர் ஹீரோவாக மட்டும் இல்லாமல் வில்லனாகவும் மிரட்டி இருக்கிறார். மேலும், இவர் தமிழ், தெலுங்கு என பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியாகி இருந்த ஓ மை டாக்.

- Advertisement -

ஓ மை டாக் படம்:

இந்த படத்தை புதுமுக இயக்குனர் சரோவ் சண்முகம் இயக்கி இருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து அருண் விஜய் பல படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் தற்போது அருண் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் யானை. இயக்குனர் ஹரி இந்த படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடித்திருக்கிறார். இவர்களுடன் பிரகாஷ்ராஜ், ராதிகா, யோகி பாபு, இமான் அண்ணாச்சி உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

யானை படம்:

மேலும், கேஜிஎஃப் படத்தில் கருடனாக நடித்த ராம் வில்லனாக இந்த படத்தில் நடித்திருக்கிறார். ஜி.வி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். மேலும், இப்படத்தின் டீசர் கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அதோடு இந்த படம் ஜூன் 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் யானை படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சில தினங்களுக்கு முன்பு நடந்தது. இதில் அருண் விஜய், இயக்குனர் ஹரி, பிரியா பவானி சங்கர் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தார்கள்.

-விளம்பரம்-

ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் ஹரி சொன்னது:

ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் இயக்குனர் ஹரி சபை நாகரீகம் தெரியாமல் கெட்ட வார்த்தையில் பேசி இருந்தார். இப்படி ஹரி பேசியதற்கு அருண் விஜய் மற்றும் பிரியா பவானி சங்கர் இருவரும் சிரித்து இருக்கிறார்கள். இந்த நிலையில் இதுகுறித்து ப்ளூ சட்டை மாறன் டீவ்ட் போட்டிருக்கிறார். அதில் அவர், யானை பிரஸ் மீட்டில் அசிங்கமாக பேசிய இயக்குனர் ஹரி, குதூகலித்து மகிழ்ந்த அருண்விஜய், பிரியா பவானி, தலைவாசல் விஜய். சில வாரங்களுக்கு முன்பு எருமை மாடுகளை பலாத்காரம் செய்யும் கேரக்டர் தருகிறேன் என பிரஸ்மீட்டில் மிஸ்கின் பேசி இருந்தார் என்று குற்றச்சாட்டுகளை ப்ளூ சட்டை மாறன் கூறி இருக்கிறார்.

ப்ளூ சட்டை மாறன் போட்ட டீவ்ட்:

அதுமட்டுமில்லாமல் 1000 கோடி வசூல் செய்த பான் இந்திய படங்களை எடுத்திருந்தாலும் பிரஸ்மீட்டில் தலைகனம் இல்லாமல் நாகரிகமாக பேசுகிறார்கள் ராஜமௌலி, பிரசாந்த் நீல், நடிகர் யாஷ். ஆனால், ஹரி, மிஸ்கின் போன்றோர் மீடியா முன்பு அருவருப்பாகப் பேசுவது கண்டனத்திற்குரியது. இயக்குனர் ஹரி, மிஸ்கின் போன்ற பிரபலங்கள் பொதுவெளியில் பேசும்போது நாகரீகத்துடன் பேச வேண்டும் என்று கூறினார். இப்படி ப்ளூ சட்டை மாறன் வெளுத்து வாங்கிய பதிவு தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement