பிரபல திரைப்பட விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் பக்கத்தில் விஜய்க்கு வந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் குறித்து எழுப்பிய கேள்விதான் இப்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது. தமிழ் சினிமா உலகில் என்றென்றும் தளபதியாக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய். பல போராட்டங்களுக்குப் பிறகுதான் இவர் இந்த இடத்திற்கு வந்து இருக்கிறார். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்திருக்கிறது.
மேலும், தளபதி விஜய் சில நாட்களுக்கு முன்பு தனது ஐம்பதாவது பிறந்தநாளை கொண்டாடினார். ஆனால், கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 50க்கும் மேற்பட்டோர் இறந்த நிலையில், தனது பிறந்த நாளை பெரிய அளவில் கொண்டாட வேண்டாம் என்று விஜய் தனது ரசிகர்களுக்கும், தமிழக வெற்றிக்கழக உறுப்பினர்களுக்கும் வேண்டுகோள் விடுத்தார். இருப்பினும் அவரின் ரசிகர்களும், தொண்டர்களும் தமிழகம் முழுவதும் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு பல நலத்திட்ட உதவிகளை செய்தனர்.
விஜய் பிறந்தநாள்:
அந்த வகையில் விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு, விஜய் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட் கொடுத்த ஐந்து திரைப்படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்பட்டன. பகவதி, போக்கிரி, துப்பாக்கி, மாஸ்டர், அழகிய தமிழ் மகன் ஆகிய 5 படங்கள் தான் வெளியாகியுள்ளது. நடிகர் விஜயின் பிறந்தநாளுக்கு பிரபலங்கள், ரசிகர்கள் என்ன பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்தனர். இந்த நிலையில் தனக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் விஜய் அறிக்கை ஒன்று வெளியிட்டு இருந்தார்.
திமுக சார்பில் யாரும் வாழ்த்தவில்லை. அதற்கு காரணம் புரிகிறது.
— Blue Sattai Maran (@tamiltalkies) June 24, 2024
ரஜினி ஏன் விஜய்யை வாழ்த்தவில்லை? pic.twitter.com/nlmknC5Qkd
விஜய் நன்றி அறிக்கை:
அதில், எனது பிறந்த நாளை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எனது பிறந்த நாளை முன்னிட்டு தொலைபேசி வாயிலாகவும், சமூக ஊடகத் தலங்கள் வாயிலாகவும் வாழ்த்துக்களை தெரிவித்து அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் அதில், புதுச்சேரி முதல்வர், முன்னாள் முதல்வர்கள் பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி, தமிழிசை சௌந்தர்ராஜன், நாம் கட்சித் தலைவர் சீமான், கமல்ஹாசன் உள்ளிட்ட பலருக்கும் நன்றி தெரிவித்திருந்தார்.
ப்ளூ சட்டை மாறனின் பதிவு:
நடிகர் விஜய் அந்த அறிக்கையில் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கோ அல்லது அந்த கட்சியை சார்ந்த யாருக்குமே நன்றி தெரிவிக்கவில்லை. இந்நிலையில் இது குறித்து பேசி உள்ள பிரபல திரைப்பட விமர்சகர் ப்ளூ சட்டை மாறன், “விஜய் அவர்களுக்கு திமுகவினர் வாழ்த்துக்களை தெரிவிக்காதது ஏன் என்பது நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் ஏன் விஜய்க்கு வாழ்த்தவில்லை” என்று கேள்வியை எழுப்பி உள்ளார். இந்த பதிவு இப்போது பெரும் சர்ச்சையை உண்டாக்கியுள்ளது.
நெடிசன்ஸ் கருத்து:
இந்தப் பதிவை பார்த்த விஜயின் ரசிகர்கள் ஒருபக்கம், பல வருடங்களாக திரைத்துறையில் இருந்தும் ரஜினியால் கட்சியை ஆரம்பிக்க இயலவில்லை. ஆனால், தளபதி விஜய் சுலபமாக கட்சி ஆரம்பித்தது ரஜினிக்கு காழ்ப்புணர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. அதனால்தான் ரஜினிகாந்த் விஜய்க்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கவில்லை என்று கூறியுள்ளனர். மறுபக்கம், தளபதி விஜய் எப்போதாவது ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளாரா? பின் ஏன் ரஜினி மட்டும் விஜய்க்கு வாழ்த்துக்களை தெரிவிக்க வேண்டும்? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.