தலைவர் பாலோ பண்ணா வேலைக்காவதுன்னு இப்ப விஜய் பக்கம் தாவியுள்ளீர்கள் – GOAT படத்தால் SKவை வெளுத்து வாங்கிய ப்ளூ சட்டை

0
422
- Advertisement -

GOAT படத்தில் சிவகார்த்திகேயன் சிறப்பு தோற்றத்தில் நடித்த நிலையில் அந்த படத்தில் விஜய்யிடம் சிவகார்த்திகேயன் பேசிய வசனத்தை வைத்து அடுத்த விஜய், சிவகார்த்திகேயன் தான் என்று அவரது ரசிகர்கள் கூறி வரும் நிலையில், இதனை விமர்சித்து ப்ளூ சட்டை மாறன் பதிவு ஒன்றை போட்டுள்ளார். வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான GOAT திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறார்.

-விளம்பரம்-

இந்த படத்தில் விஜய் மட்டுமல்லாது சிவகார்த்திகேயன், திரிஷா, கேப்டன் (AI) என்று பல கேமியோ ரோல்களும் இடம்பெற்று இருக்கிறது. அதுபோக சூர்யாவின் பாடல், ரஜினி பாடல், அஜித் வசனம், கமல் பாடல் என்று பல ரெபரென்ஸ்களை பயன்படுத்தி இருக்கிறார் வெங்கட் பிரபு. அந்த வகையில் இந்த படத்தில் கிளைமாக்ஸ்ஸில் விஜய் மற்றும் சிவகார்த்திகேயன் சந்தித்துக்கொள்வது போல ஒரு காட்சி இடம்பெற்று இருக்கிறது.

- Advertisement -

GOAT படத்தில் SK :

அந்த காட்சியில் விஜய்யிடம், சிவகார்த்திகேயன் ‘நீங்க இதைவிட முக்கியமான வேலையா போறீங்கனு நெனைக்கிறேன், நான் இத பாத்துக்கிறேன்’ என்று கூறி இருப்பார். இந்த வசனத்தை வைத்து ‘விஜய் அரசியலுக்கு செல்வதால் விஜய் இடத்தை சிவகார்த்திகேயன் பார்த்துக்கொள்வார் என்று அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் இதுகுறித்து மீம் ஒன்றை பகிர்ந்து விமர்சித்து இருக்கிறார் ப்ளூ சட்டை மாறன்.

அதில் ‘நான் பாத்துக்கறேன் என்றால்? விஜய் இடத்திற்கு வரப்போகிறேன் என்கிறாரா? பலருக்கும் ரஜினி, விஜய் ஆக ஆசை. ஆனால் இந்த இடத்தை பிடிக்க ரஜினிக்கு சுமார் 50 ஆண்டுகளும், விஜய்க்கு 30 ஆண்டுகளும் ஆகியுள்ளது. காதல், குடும்பம், ஆக்சன், காமடி என பல்வேறு ஜானர்களில் மிகப்பெரிய வெற்றிப்படங்களை தந்தவர் விஜய். அதனால்தான் இத்தனை கோடி ரசிகர்கள். நீங்கள் முதலில் ரஜினியாக முயன்றீர்கள்.

-விளம்பரம்-

விஜய் பக்கம் தாவியுள்ளீர்கள் :

அதனால்தான் ரஜினிமுருகன், கேடி பில்லா, வேலைக்காரன், மாவீரன் என டைட்டில் வைத்தீர்கள். ஜெயிலரில் ரஜினியின் மகன் கேரக்டரில் நடிக்க கடுமையாக முயன்றீர்களாம். உங்கள் நெருங்கிய நண்பர் நெல்சன் சிபாரிசு செய்தும். தலைவர் நோ சொன்னதாக தகவல். Not official. ஒருவேளை படம் ஹிட்டானால் உங்களால்தான் ஓடியது என சொல்வார்கள் என்பதால் தலைவர் அலர்ட் ஆகி விட்டாராம். தலைவரை பின்பற்றினால் இந்த தலைமுறை ரசிகர்களை கவர இயலாது என்பதால் இப்போது விஜய் பக்கம் தாவியுள்ளீர்கள்.

தளபதி எனும் கனவு அர்த்தமற்றது :

நீங்கள் இதுவரை நடித்தவை காமடி படங்கள் மட்டுமே. சீரியஸ் முயற்சிகளான வேலைக்காரன், ஹீரோ போன்றவை ஓடவில்லை. எம்.ஜி.ஆர் – சிவாஜி, ரஜினி – கமல், விஜய் – அஜித். இவர்களின் இடங்களை இனி யாரும் பிடிக்க முடியாது. இவர்களுக்கு உள்ள மாபெரும் ரசிகர் பட்டாளமும் இனி கிடைக்காது. விஜய் அரசியலுக்கு சென்றாலும்.‌ சினிமாவில் அவரது இடத்தை பிறர் பிடிக்க இயலாது. ஆகவே இருக்கும் இடத்தை தக்க வைத்து முன்னேறுவதே சாமர்த்தியம். குட்டி தல, சின்ன தளபதி எனும் கனவு அர்த்தமற்றது’ என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement