இயக்குனர் சங்கரை விமர்சித்து ப்ளூ சட்டை மாறன் போட்டிருக்கும் பதிவு தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் உலகில் பிரம்மாண்டத்திற்கு பெயர் போனவர் இயக்குனர் சங்கர். இவருடைய இயக்கத்தில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்றுத் தந்து இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் இவருடைய படங்கள் எல்லாமே பிரம்மிக்க வைக்கும் அளவிற்கு இருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
அந்த வகையில் இவர் இயக்கிய ஜென்டில்மேன், காதலன், இந்தியன், ஜீன்ஸ்,முதல்வன், பாய்ஸ், அந்நியன்,சிவாஜி, எந்திரன்,நண்பன்,ஐ,2.0 ஆகிய படங்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தது.
இதை தொடர்ந்து கடந்த ஆண்டு இவருடைய இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியாகி இருந்த இந்தியன் 2 படம் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது. பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்த படத்தை மீண்டும் இயக்குனர் சங்கர்- கமல் எடுத்தார்கள்.
சங்கர் திரைப்பயணம்:
இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்து இருந்தது. இந்த படத்தில் ரகுல் நிறுவனம் சிங், காஜல் அகர்வால், சமுத்திரக்கனி, ஜெகன், பாபி சிம்ஹா உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்தப் படத்திற்கு அனிருத் இசைஅமைத்திருந்தார். ஆனால், இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி அடையவில்லை. இதை அடுத்து சமீபத்தில் ஷங்கர் இயக்கத்தில், தெலுங்கு மொழியில் வெளியாகி இருந்த படம் தான் ‘கேம் சேஞ்சர்’. இந்தப் படத்தில் ராம்சரண் ஹீரோவாக நடித்திருக்கிறார்.
தொடர் தோல்வி:
ராம்சரணுடன் இணைந்து கியாரா அதவானி, எஸ் .ஜே .சூர்யா, சமுத்திரக்கனி, சுனில், அஞ்சலி, உள்ளிட்டோர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். கார்த்திக் சுப்புராஜ் எழுதிய கேம் சேஞ்சர் படத்தின் கதையை கொஞ்சம் டெவலப் செய்து ஷங்கர் இப்படத்தை இயக்கியிருக்கிறாராம். மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவான இப்படம் கிட்டத்தட்ட மூன்று வருடங்களாக எடுக்கப்பட்டது. கடந்த ஜனவரி 10 ஆம் தேதி பொங்கலை முன்னிட்டு உலக அளவில் வெளியான இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
வேள்பாரி படம்:
இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றிபெறவில்லை. இதை அடுத்து இவர் வேள்பாரி என்ற நாவலை இயக்க இருப்பதாக பல பேட்டிகளில் அறிவித்திருந்தார். தொடர்ந்து தோல்வியை தருவதால் இந்த படமாவது இவருக்கு வெற்றி தருமா? என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தான் இந்த படத்தை சங்கர் எடுக்க இருக்கிறாராம். இவரை நம்பி எந்த தயாரிப்பு நிறுவனம் எடுக்கப் போவார்கள்? என்ற கேள்விக்கு எழுந்திருக்கிறது.
ப்ளூ சட்டை மாறன் பதிவு:
இந்த நிலையில் இது தொடர்பாக ப்ளூ சட்டை மாறன் இயக்குனர் சங்கரை விமர்சித்து போட்டு இருக்கும் பதிவு தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் அவர், உலகின பல அழகிய லொக்கேஷன்களை 4K வில் துல்லியமான டிவி மூலம் பார்க்கும் காலமிது. Mr.Beast எனும் உலகின் நம்பர் 1 யூட்யூப் சேனல் வைத்திருப்பவர்.. திரைப்படங்களை விட பிரம்மாணட செலவில்வீடியோககளை போடுகிறார்.
நம்மூர் வில்லேஜ் குக்கிங் சேனல்.. சமையலை பிரம்மாண்டமாய் செய்து அசத்துகிறது. இப்படியான காலத்தில்.. இன்னும் இந்த பிரம்மாண்டத்தை மட்டுமே வைத்து ஹிட் அடிக்க சங்கர் நினைப்பது ஆச்சர்யம்.
உலகின பல அழகிய லொக்கேஷன்களை 4K வில் துல்லியமான டிவி மூலம் பார்க்கும் காலமிது.
— Blue Sattai Maran (@tamiltalkies) January 19, 2025
Mr.Beast எனும் உலகின் நம்பர் 1 யூட்யூப் சேனல் வைத்திருப்பவர்.. திரைப்படங்களை விட பிரம்மாணட செலவில்வீடியோககளை போடுகிறார்.
நம்மூர் வில்லேஜ் குக்கிங் சேனல்.. சமையலை பிரம்மாண்டமாய் செய்து அசத்துகிறது.… pic.twitter.com/1AolX3IbER
கதைக்குதான் பிரம்மாண்டம் தேவை. பிரம்மாண்டத்திற்காக கதை தேவையில்லை என்பதை பாகுபலி, RRR போன்ற படங்கள் உணர்த்தி விட்டன. இந்தியன் 2, கேம் சேஞ்சர் படங்களின் இமாலய தோல்விகளால் தயாரிப்பாளர்கள் கடும் நஷ்டத்தை அடைந்துள்ளனர். ஆகவே இந்தியன் 3 படத்திற்கு எந்தளவு வரவேற்பிருக்கும் என்பது பெருங்கேள்வி. இந்நிலையில் வேள்பாரி எனும் மெகா பட்ஜெட் படத்துக்கு தயார் என்கிறார். அதுவும் மூன்று பாகங்கள்.
ஒரு பாகத்திற்கே இமாலய பட்ஜெட்டை போடும் சங்கர்.. இந்த மூன்றுக்கும் சேர்த்து குறைந்தது 1,300 கோடியாவது பட்ஜெட் வைக்கலாம். இவரது தற்போதைய மார்க்கெட்டை நம்பி இந்த வரலாறு காணாத ரிஸ்க் எடுக்க போகும் தயாரிப்பாளர் யார்? தனது ஒருபடத்தில் நடிக்க வைக்கவே. ஹீரோ உள்ளிட்ட முக்கியநடிகர்களிடம் பல்க் கால்ஷீட் கேட்பார். அதற்கே பலர் யோசிப்பார்கள். மூன்று பாகங்களுக்கும் சேர்த்து பல ஆண்டுகள் பயணிக்க எத்தனை பேர் தயாராக உள்ளனர்? என்று கூறி இருக்கிறார்.