என்ன தலைவா சென்சார்ல ஓவரா திட்டிடாய்ங்களா – கர்ணன் படத்தால் ப்ளூ சட்டையை கலாய்க்கும் நெட்சன்கள்.

0
4249
blue
- Advertisement -

‘பரியேறும் பெருமாள்’ படத்தின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த மாரி செல்வராஜ் இயக்கத்தில் தேசிய விருது பெற்ற நாயகன் தனுஷ் நடிப்பில் உருவான ‘கர்ணன்’ திரைப்படம் நேற்று (ஏப்ரல் 9) வெளியாகியது. ரஜிஷா விஜயன், யோகி பாபு, லட்சுமி ப்ரியா, கௌரி கிஷன், நட்டி என்று பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து உள்ளார். இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் வேற லெவல் ஹிட் அடித்தது. மேலும், பண்டாரத்தி பாடல் சில சர்ச்சைகளை ஏற்படுத்தியதால் இந்த படத்தின் பாடல் வரிகளில் சில மாற்றங்களையும் செய்தார் மாரி செல்வராஜ். இப்படி வெளியாகும் முன்னரே பல சர்ச்சைகளை சந்தித்த இந்த திரைப்படம் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது.

-விளம்பரம்-

1995ல் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கொடியங்குளம் கிராமத்தின் மீது காவல்துறை கொடுமையான தாக்குதல் ஒன்றை நடத்தியது. அதில் பலர் கொல்லப்பட்டனர். பல கிராமங்கள் சூறையாடப்பட்டன. தாக்குதலில் நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைந்தனர். இந்தப் பின்னணியை மையமாக வைத்து உருவாகியிருக்கிறது ‘கர்ணன்’ இந்த படத்திலும் வழக்கம் போல தனுஷ் தனது நடிப்பில் மிரட்டியுள்ளார்.

- Advertisement -

சமீபத்தில் நடிகர் தனுஷுக்கு அசுரன் படத்திற்காக தேசிய விருதும் வழங்கப்பட்டது. இப்படி ஒரு நிலையில் இந்த படத்திற்கும் தேசிய விருது கிடைக்க வேண்டும் என்று பலரும் கூறி வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் இந்த படத்தை பற்றி விமர்சனம் செய்துள்ளார் ப்ளூ சட்டை மாறன். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. மேலும், ப்ளூ சட்டையின் இந்த விமர்சனத்தை பார்த்த பலர் இவரது படத்தின் தடை பற்றி கேலி செய்து கமன்ட் செய்து வருகின்றனர்.

ப்ளூ சட்டை மாறன் ‘ஆன்டி இந்தியன்’ என்ற படத்தை இயக்கி இருந்தார்.இப்படி ஒரு நிலையில் இந்த படத்தை பார்த்துவிட்டு சென்சார் போர்டு தடை விதித்துள்ளது. படம் தடை பெற்றது பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்த மாறன் ‘கடந்த சில தினங்களுக்கு முன்னர் ‘ஆன்டி இந்தியன்’ திரைப்படம் தணிக்கை குழுவிற்கு போட்டு காண்பிக்கப்பட்டது. படத்தை பார்த்துவிட்டு அவர்கள் படத்தை நிராகரித்துவிட்டார்கள். இதனால் நான் இதனால் இந்த படத்தை திருத்த குழுவிற்கு (Revising Committee) அனுப்பி மறுபருசிலனை செய்ய திட்டமிட்டுள்ளோம். உரித்த நேரத்தில் படம் வெளியாகும் என்று பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement