என் மகன் ரஜினியின் தீவிர ரசிகர் ஆனால், நான் ரசிகர் இல்லை.! கார்த்திக் சுப்புராஜ் தந்தை பேட்டி.!

0
414
gajaraj

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘பேட்ட’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. நீண்ட இடைவேளைக்கு பின்னர் பழைய ரஜினியை கண்முண்ணே கொண்டு வந்துள்ளார் என்று கார்த்திக் சுப்புராஜிற்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் இருக்கிறது.

Petta

ரஜினியை ஒரு நடிகராக இல்லாமல் ரஜினியின் ரசிகராக இருந்து இந்த படத்தை எடுத்துள்ளார் கார்த்திக் சுப்புராஜ். ஆனால், அதுவும் உண்மை தான் என்று கார்த்திக் சுப்புராஜின் தந்தை கஜராஜ் கூறியுள்ளார். கார்த்திக் சுப்புராஜின் தந்தையான இவர் முண்டாசுபட்டி, காலா, ஜிகிர்தண்டா போன்ற படங்களில் நடித்துள்ளார்.

தற்போது ‘பேட்ட’ படத்திலும் நடித்துள்ளார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற கஜராஜ் பேசுகையில், கார்த்திக் சுப்புராஜ் தவிரமான ரஜினி ரசிகர். நான் ரஜினியின் வெறியன் சிறு வயதில் கார்த்திக் சுப்புராஜுக்கு ரஜினி படங்களை தான் அதிகம் போட்டு காண்பிப்பேன். அவருடன் நான் நடித்து நான் செய்த மிக பெரிய பாக்கியம்.

தலைவர் படம் என்றால் குறைந்தது ஐந்து முறையாவது பார்த்துவிடுவேன். முதல் முறை நண்பர்களுடன் பார்ப்பேன். பிறகு என் குடும்பத்துடன் பார்ப்பேன். பிறகு எப்போதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ அப்போதெல்லாம் பார்ப்பேன். கடைசியா தியேட்டரை விட்டு படம் எப்போது எடுக்கிறார்களோ அது வரை பார்ப்பேன் என்று கூறியுள்ளார்.