சில தினங்கள் கழித்து தெரியும் – அந்தகன் படம் குறித்து ப்ளூ சட்டை போட்ட பதிவு

0
316
- Advertisement -

டாப் ஸ்டார் பிரசாந்தின் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘அந்தகன்’ படம் குறித்து ப்ளூ சட்டை மாறன் போட்ட பதிவு தான் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் ஒரு காலத்தில் முன்னணி நடிகராக ஜொலித்து இருந்தவர் பிரசாந்த். இவர் பிரபல இயக்குனரும், நடிகருமான தியாகராஜனின் மகன் ஆவார். ஒரு காலத்தில் நடிகர் பிரசாந்த் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் வணிக ரீதியாக வெற்றியைப் பெற்று இருந்தது. இடையில் இவருடைய மார்க்கெட் சினிமாவில் குறைய தொடங்கியவுடன் இவர் நடிப்பிலிருந்து பிரேக் எடுத்து இருந்தார்.

-விளம்பரம்-

இதனால் பிரசாந்த் இருக்கும் இடம் தெரியாமல் போனார். இடையில் ஒரு சில துணை கதாபாத்திரங்களில் பிரசாந்த் நடித்திருந்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது இவர் ‘அந்தகன்’ என்ற படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தில் சிம்ரன், பிரியா ஆனந்த், கார்த்திக், சமுத்திரக்கனி, யோகி பாபு, ஊர்வசி, வனிதா விஜயகுமார் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்தப் படத்தை பிரசாந்தின் தந்தையும், நடிகருமான தியாகராஜன் இயக்கியிருக்கிறார்.

- Advertisement -

அந்தகன் படம்:

சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கும் இப்படம் ஹிந்தியில் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் வெளியான ‘அந்ததூன்’ படத்தில் ரீமேக் ஆகும். கதையில் நடிகர் பிரசாந்த் (கிரிஷ்) ஒரு பியானோ கலைஞர். இவர் மக்களின் அங்கீகாரத்தை பெறுவதற்காகவும், பணம் சம்பாதிக்கவும், தான் ஒரு பார்வையற்ற இசை கலைஞர் என உருமாறி ஊரை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார். அவரின் திறமையை பார்த்த நடிகர் கார்த்திக், அவரை தன்னுடைய திருமண நாளன்று தன் மனைவியை சப்ரைஸ் செய்ய தனது வீட்டிற்கு வரச் சொல்கிறார்.

கதைக்களம்:

ஆனால், அங்கு கிரிஷ் சென்று பார்க்கும் போது, அங்கு கார்த்திக்கின் மனைவி சிமி ( சிம்ரன்) அவரைக் கொன்று விட்டு, வேறு ஒருவருடன் (சமுத்திரக்கனி) உல்லாசமாக இருக்கிறார். அதைப் பார்த்த கிரிஷ் அதிர்ச்சி அடைகிறார். பின் கார்த்திக்கின் மனைவி சிமிக்கு, கிரிஷ் பார்வை இல்லாதவர் போல் ஊரை ஏமாற்றுகிறார் என தெரிய வருகிறது. பின் பிரசாந்த் எப்படி எந்த பிரச்சனையை சமாளிப்பார். சிம்ரன் தண்டிக்கப்படுவாரா? அதற்குப் பிறகு நடக்கும் சுவாரஸ்யம் தான் மீதிக்கதை.

-விளம்பரம்-

ரசிகர்களின் வரவேற்பு:

மேலும், படத்தில் நடிகர் பிரசாந்த் அப்படியே கண் தெரியாதவர் போல் நடித்துள்ளார். அவர் நடித்திருக்கும் காட்சிகள் அனைத்தும் தத்ரூபமாக இருக்கிறது. உண்மையிலே கண் தெரியாதவர் போல் நடித்து இருக்கும் பிரசாந்தின் பெர்ஃபார்மன்ஸ், நான் ஒரு டாப் ஸ்டார் என்று நிரூபித்து விட்டார் என்று தான் சொல்ல வேண்டும். மேலும், படத்தை இயக்குனர் தியாகராஜன் சிறப்பாக கையாண்டு உள்ளார். அதேபோல் படத்தில் சிம்ரன், கோவை சரளா, யோகி பாபு, சமுத்திரக்கனி ஆகியோர் தங்களின் நடிப்பின் மூலம் படத்திற்கு பலம் சேர்த்து இருக்கிறார்கள்.

ப்ளூ சட்டை மாறன் பதிவு:

இந்நிலையில், தற்போது பிரபல சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் பக்கத்தில், அந்தகன் திரைப்படம் மக்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் எகோபித்த ஆதரவை பெற்று வருகிறது. வசூல் ரீதியிலான, வெற்றியை எந்த அளவிற்கு பெரும் என்பது சில தினங்கள் கழித்து தெரியும். சமீபத்தில் வெளியான இந்தியன் 2, ராயன் போன்ற படங்களை விட இது எவ்வளவோ மேல். Prashanth is back! என்று பதிவிட்டுள்ளார். தற்போது இவரின் பதிவு தான் சோசியல் மீடியாவில் வைரலாகி கொண்டிருக்கிறது.

Advertisement